திங்கட்கிழமை, மே 13
Shadow

வாக்குச்சீட்டில் தில்லுமுல்லு செய்து மேயரான பாஜக! ஆதாரத்துடன் அம்பலமான வீடியோ!

 

சண்டிகர் மாநகராட்சி மேயர், மூத்த மேயர், துணை மேயர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப்பதிவு, பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி இன்று நடைபெற்றது.

இந்த தேர்தலில், இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து பா.ஜ.க.வை எதிர்த்து போட்டியிட்டன. அதன்படி, ஆம் ஆத்மியை சேர்ந்த குல்தீப் குமாரும், பா.ஜ.க.வை சேர்ந்த மனோஜ் சோங்கரும் மேயர் பதவிக்கு போட்டியிட்டனர். மேலும், மூத்த துணை மேயர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் குர்பிரீத் சிங்கும், பா.ஜ.க.வைச் சேர்ந்த குல்ஜீத் சந்தும் போட்டியிட்டனர். துணை மேயர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளர் நிர்மலா தேவியை எதிர்த்து பா.ஜ.க சார்பில் ராஜிந்தர் சர்மா போட்டியிட்டார்.ஏற்கனவே உறுப்பினர்கள் அடிப்படையில் ஆம் ஆத்மி-காங் கூட்டணிக்கு 20 வாக்குகளும், பாஜகவுக்கு 16 வாக்குகளும் மட்டுமே இருந்தது. .

இந்த சூழலில் எப்படியும் ஆம் ஆத்மி வேட்பாளர்தான் வெற்றி பெறுவார் என்ற நிலையில் இன்று காலை வாக்குப்பதிவு நடைபெற்றது. பிற்பகல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் மொத்தமுள்ள 36 ஓட்டுகளில், 16 ஓட்டுகள் பெற்று பா.ஜ.க வேட்பாளர் மனோஜ் சோங்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும், இதில் ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் குல்தீப் குமாருக்கு கிடைத்த 20 வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.

மேலும், 8 வாக்குகள் செல்லாது என அறிவித்ததை எதிர்த்து பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு அவசர வழக்காக நாளை  விசாரணைக்கு வர இருக்கிறது.

இதற்கிடையில், தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்குச்சீட்டில் பேனாவைக் கொண்டு வாக்குச்சீட்டில் ஏதோ எழுதும் வீடியோ ஒன்று இப்போது  இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே அந்த 8 வாக்குகளும் செல்லாதவைகளாக மாற்றப்பட்டன என்ற உண்மையும் வெளிச்சத்துக்கு வந்த்தால் நாடு முழுதும் பாஜகவின் தேர்தல் பித்தலாட்டம் குறித்த கண்டனகுரல் வலுத்து வருகிறது.

“மகாத்மா காந்தி இந்த நாளில் படுகொலை செய்யப்பட்டு 76 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் ஜனநாயகத்தை படுகொலை செய்திருக்கிறார்கள். இது ஜனநாயகத்தின் கருப்பு நாள். அவர்கள் பகிரங்கமாக வழிப்பறி செய்தது கேமராவில் பதிவாகியுள்ளது. அவர்கள் எப்படி ஓட்டுக்களை திருடினார்கள் என்பதை இந்த நாடு முழுதும் பார்க்கிறார்கள். தேர்தலில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் அல்லது தோல்வியடையலாம். ஆனால், நாடு தோற்கக் கூடாது. சண்டிகர் மேயர் தேர்தலில் வெளிப்படையாக மோசடி செய்து வெற்றி பெற்றுள்ளது தான் பிரச்சனை” என்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

176 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன