வியாழக்கிழமை, பிப்ரவரி 22
Shadow

‘‘மறக்குமா நெஞ்சம்” ரசனையா? வேதனையா? கோடங்கி விமர்சனம் 3/5

 

‘நெஞ்சம் மறப்பதில்லை’ ரசனையா? வேதனையா? கோடங்கி விமர்சனம் 3/5

 

கன்னியாகுமரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் ரக்‌ஷன், கூடபடிக்கும் மலினாவை காதலிக்கிறார். கடைசிவரை தனது காதலை சொல்லாமல் பள்ளி படிப்பை முடிக்கிறார். பல ஆண்டுகள் முடிந்த நிலையில், அந்த பள்ளிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், 2008 ஆம் ஆண்டு அந்த பள்ளியில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களின் தேர்ச்சி செல்லாது என்றும், அப்போது தேர்வு எழுதிய மாணவர்கள் மீண்டும் 12ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும், என்றும் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

10 வருடங்களுக்கு முன்பு எழுதிய 12ம் வகுப்பு தேர்வை மீண்டும் எழுதி தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும் மாணவர்கள், வேறு வழி இல்லாமல் வருத்தத்தோடு மீண்டும் அந்த பள்ளிக்கு வர, ரக்‌ஷன் தனது மட்டும் மீண்டும் காதலியை பார்க்கப் வாய்ப்பு கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் மீண்டும் பள்ளிக்கு வருகிறார். இந்த முறை எப்படியாவது தனது காதலை மலினாவிடம் சொல்லிவிட வேண்டும் என்று நினைக்கும் ரக்‌ஷன் எண்ணம் நிறைவேறியதா? இல்லையா? என்பதோடு,  பள்ளி பருவ முதல் காதலை நினைவுப்படுத்தும் கதை தான் ‘நெஞ்சம் மறப்பதில்லை’.

பள்ளி பருவத்தில் வரும் காதல், பயம், வெட்கம் என அனைத்துவிதமான உணர்வுகளை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் ரக்‌ஷன்.

பார்ப்பதற்கு அழகாக இருக்கும் நாயகி மலினாவுக்கு அதிகம் வேலை இல்லை. படம் கலகலப்பாக நகர்வதற்கு பக்கபலமாக தீனாவின் கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. ஆரம்பத்தில் காமெடி வேடமாக தெரிந்தாலும், படம் முடியும் பாராட்டும்படியான குணச்சித்திர நடிகராக மாறுகிறார் பிராங் ஸ்டார் ராகுல்.

பி.டி மாஸ்டராக நடித்திருக்கும் முனீஷ்காந்த் மற்றும் ஆசிரியையாக நடித்திருக்கும் அகிலா வரும் காட்சிகள் குறைவு என்றாலும் மனதில் நிற்கும்படி இருக்கிறது.

சச்சின் வாரியரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம்.

90ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையை மிக எதார்த்தமாக காட்சிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ராகோ யோகேந்திரன்.

மொத்தத்தில், ‘நெஞ்சம் மறப்பதில்லை’ மறந்த நினைவுகளை மீண்டும் தட்டி எழுப்பும்!

மதிப்பீடு 3/5

 

 

49 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன