செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

பாக்காதீங்க ப்ளீஸ்… ”சிக்லெட்ஸ்” திரைப்பட விமர்சனம் 2.5/5

 

 

”சிக்லெட்ஸ்” கதையின் நாயகிகளாக மூன்று பெண்கள் இருக்கின்றனர், அவர்களின் பெற்றோர்களுக்கு இவர்கள் குறித்து தனித்தனி கனவு இருக்கிறது. ஆனால், இந்த மூன்று பெண்களும் வேறு கனவில் இருக்கிறார்கள். வயசு கோளாறால் காதலில் விழுவதால் காமத்தை தேட முடிவு செய்கிறார்கள்.

அதற்காக, இந்த மூன்று ஜோடிகளும் தங்களின் பெற்றோர்களை ஏமாற்றிவிட்டு பார்ட்டிக்கு கிளம்புகின்றனர், பிறகு இவர்கள் எதற்காக சென்றார்கள் என்பதை அறிந்த பெற்றோர்கள், அவர்களை தேடி போகிறார்கள்.  கடைசியில் அந்த மூன்று ஜோடிகளும் பார்ட்டிக்கு சென்று தங்களை நினைத்ததை செய்தார்களா? அல்லது பெற்றோர்கள் அவர்களை தடுத்தார்களா? என்பதே ”சிக்லெட்ஸ்” படத்தின் மீதி கதை…

படம் பார்க்க வரும் இளைஞர்களைக் குஷிப்படுத்தவேண்டும் என்கிற ஒற்றை இலக்குடன் கிளாமர் காட்சிகளில் விளையாடியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கொளஞ்சிகுமார்.

காதல் மற்றும் காமம் இரண்டும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தாலும், விவரம் தெரியாத வயதில் இரண்டிலும் சிக்கி மூழ்காமல், அதை கடந்து செல்ல வேண்டும் என்று இளைஞர்களுக்கு அறிவுரை சொல்லும் வகையில் கதையை கையாண்டிருக்கும் இயக்குநர் முத்து, வயதுக்கு ஏற்ற தடுமாற்றத்தில் சிக்கும் இளைஞர்கள் தங்களது அனுபவம் மூலமாகவே அதில் இருந்து விடுபடுவார்கள், எனவே பெற்றோர்கள் தங்களது ஆசைகளை அவர்கள் மீது திணிக்காமல் அவர்களின் போக்கில் வாழ விட வேண்டும், என்று பெற்றோர்களுக்கும் அறிவுரை சொல்லியிருக்கிறார்.

தங்களது வயது கோளாறில் தாறுமாறாக வாழ நினைக்கும் நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகியோர் பேர் பேசும் வசனங்களில் நிறைந்திருக்கும் இரட்டை அர்த்த வசனங்கள், உடல் மொழியில் அதீத கவர்ச்சி என படம் முழுவதும் காம நெடி.

மூன்று பெண்களை காதலிக்கும் இளைஞர்களாக நடித்திருக்கும் வருண், சாத்விக் வர்மா,  ஜாக் ராபின்சன் மூன்று பேருடைய கதாபாத்திரமும், நடிப்பும் தற்போதைய இளசுகளை பிரதிபலிப்பதாக இருக்கிறது. ஸ்ரீமனின் நடிப்பு அடடே போட வைக்கிறது.

காதல் மற்றும் காமம் இரண்டும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தாலும், விவரம் தெரியாத வயதில் இரண்டிலும் சிக்கி மூழ்காமல், அதை கடந்து செல்ல வேண்டும் என்று இளைஞர்களுக்கு அறிவுரை சொல்லும் அதே நேரத்தில், பெற்றோர்கள் தங்களது ஆசைகளை அவர்கள் மீது திணிக்காமல் அவர்களின் போக்கில் வாழ விட வேண்டும், என்று பெற்றோர்களுக்கும் அறிவுரை சொல்லியிருக்கிறார் இயக்குநர் முத்து.

மொத்தத்தில் சிக்லெட்ஸ் தேன் தடவிய மருந்து.

 

கோடங்கி

மதிப்பீடு 2.5/5

95 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன