செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23
Shadow

ஜோஷ்வா இமை போல் காக்க விமர்சனம் 3/5

 

ஜோஷ்வா இமை போல் காக்க விமர்சனம் 3/5

 

 

சர்வதேச போதைப் பொருள் கும்பல் ஒன்றின் தலைவனுக்கு எதிராக வாதாட இருக்கும் பெண் வக்கீல் ஒருவரை கதாநாயகன் காப்பாற்றுவது தான் படத்தின் கதை.

அமெரிக்க வாழ் பெண் வக்கீல் ஒருவருக்கும் சர்வதேச கான்டிராக்ட் கில்லர் ஒருவருக்குமான காதல் ஒரு டிராக்…

அந்த பெண் வக்கீலை கொலை செய்ய நடக்கும் திட்டங்களை தடுக்கும் ஆக்க்ஷன் டிராக் இன்னொரு பக்கம் என ஹீரோ வருண் அடித்து ஆட முயற்சி செய்கிறார். ஆனால் பாவம் வலு இல்லாத திரைக்கதை வெறும் ஆக்க்ஷன் காட்சிகளால் அந்த முயற்சி வீணாகிறது.

வழக்கமா கவுதம் வாசுதேவ மேன்ன் படங்களில் இழையோடும் இலக்கிய காதலும், செண்டிமெண்ட்டும் படம் முழுக்க பயணமாகும் ஆனால் இந்த பட்த்தில் அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல… ஒரே சண்டைதான்… இண்டர் நேஷனல் சண்டை தொடங்கி லோக்கல் அடிதடிவரைக்கும் இருக்கு. அதனால் பட்த்துக்கு எந்த பயனும் இல்ல.

ஹீரோயின் ராஹி அமெரிக்காவில் வசிக்கும் வக்கீல். அந்த ஊருக்கு ஏத்த மாதிரி எல்லாம் சரி… ஆனா ஹீரோ வருண் ஜோடின்னு சொன்னா எப்படி நம்புறது… அக்கா மாதிரி இல்ல இருக்காங்க…

எப்படி வெங்கட் பிரபு படங்கள்னா ஒரு கூட்டம் இருக்குமோ அதுமாதிரி கவுதம் படங்களில் டிடி இல்லாம இருப்பாங்களா…. இதுலயும் கொலைக்கு காண்டிராக்ட் எடுக்கும் தொழில் நடத்துகிறார் டிடி..

பட்த்துல பல இடங்களில் பயங்கரமான ஆக்‌ஷன் சண்டை நடக்குது… துப்பாக்கி சூடு நடக்குது… கொலை நடக்குது… ஏர்ப்போர்ட்ல, ஹைய்வேஸ்ல நடக்குது… ஆனா ஒரு போலீச கூட பாக்க முடியல…

சினிமா லாஜிக் இல்லாததுதான் ஆனா அதுக்காக இப்படியா… கதையும் இல்ல… திரைக்கதையும் பலமில்ல… படம் முழுக்க ஆக்‌ஷன் ஆக்‌ஷன் ஆக்‌ஷன் இத வைச்சி எப்படி பட்த்த ஓட்டிட முடியும்…

மன்சூர் அலிகான் லோக்கல் டான்… அவரை இன்னும் யூஸ் பன்னி இருக்கலாம்…. கிருஷ்ணா லோக்கல் டானோட அடியாள்… அவரையும் இன்னும் யூஸ் பன்னி இருக்கலாம்… காது கிழிக்கும் இசையால் பாடல்களும் மனசுல நிக்கல…

ஒளிப்பதிவாளர் கதிர், ஸ்டண்ட் மாஸ்டர் யானிக்பென் ஹீரோ வருண் 3 பேரும் போட்டி போட்டு உழைச்சி இருக்காங்க… ஆனா வலு இல்லாத தெளிவில்லாத திரைக்கதையால அவங்க உழைப்பு வீணா போயிருக்கு.

ஒட்டு மொத்தமா ஜோஷ்வா இமை போல் காக்க… ஆக்‌ஷன் மட்டுமே பாக்க.

 

மதிப்பீடு 3/5

 

83 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன