செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 30
Shadow

கள்வன் மனசை திருடுவானா? விமர்சனம் 3/5

 

இயக்கம்: பி வி ஷங்கர்

நடிகர்கள்: ஜி வி பிரகாஷ்குமார், பாரதிராஜா, இவானா, தீனா

ஒளிப்பதிவு: பி வி ஷங்கர்

படத்தொகுப்பு: சான் லோகேஷ்

இசை: ஜி வி பிரகாஷ்குமார்

பின்னணி இசை: ரெவா

தயாரிப்பாளர்: டில்லி பாபு

தயாரிப்பு: ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி

கதைப்படி,

சத்தியமங்கலம் அருகேயுள்ள ஒரு காடு சார்ந்த கிராமத்தில் கதை நகர்கிறது. ஜி வி பிரகாஷ் மற்றும் தீனா இருவரும் கிராமத்தில் சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்து வாழ்ந்து வருகின்றனர்.

திருடிய பணத்தில் குடித்து கும்மாளம் போட்டு வருகின்றனர் இருவரும். பக்கத்து கிராமத்தில் திருட போன இடத்தில் இவானாவை சந்திக்கிறார் ஜி வி பிரகாஷ்.

கண்டதும் இவானா மீது காதல் கொள்கிறார் ஜி வி பிரகாஷ். தொடர்ந்து இவானா பின்னால் சுற்றித் திரிகிறார். இவானாவின் மனதில் இடம் பிடிப்பதற்காக, முதியோர் இல்லத்தில் உறவினர் யாரும் இல்லாத பாரதிராஜாவை தத்தெடுத்து அவருக்கு உதவி செய்வது போல் நடிக்கிறார்.

செல்ல செல்ல பாரதிராஜாவை வைத்து வேறு ஒரு திட்டம் போடுகிறார் ஜி வி பிரகாஷ்.

ஜி வி பிரகாஷின் திட்டம் நிறைவேறியதா?? இவானாவுடனான காதல் என்னவானது என்பதே படத்தின் மீதிக் கதை.

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், அதில் தனது தனித்திறமையை காட்டுபவர் நடிகர் ஜிவி பிரகாஷ். இப்படத்திலும், அதே போல் வியக்க வைக்கும் நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார். குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் அசுர நடிப்பைக் கொடுத்திருக்கிறார் ஜி வி.

பாரதிராஜாவின் நடிப்பு மட்டுமே படத்தில் பெரிதாக பேசப்படுகிறது. இந்த வயதிலும் இப்படியொரு நடிப்பா என வியக்க வைக்கும் அளவிற்கு அனுபவ நடிப்பைக் கொடுத்து கைதட்டல் வாங்குகிறார் பாரதிராஜா.

கதையின் கரு பெரிதான தாக்கத்தை ஏற்படுத்தாதல், கதைக்குள் நம்மால் பயணிக்க முடியாமல் போய் விடுகிறது.

முதல் பாதி பெரிய ஈர்ப்பை கொடுக்காததால், கதைக்குள் பயணிக்க சிரமப்பட வேண்டியதாகியுள்ளது.

சரி இரண்டாம் பாதி நம்மை ஈர்க்கும் என பார்த்தால் அங்கேயும் கொஞ்சம் சிக்கல் தான்.

ஒரே ஆறுதல் ஜிவி நன்றாக மெனக்கெட்டிருக்கிறார். பாரதிராஜா செண்டிமெண்ட் ஓகே ரகம்.

இவனா வழக்கம் போலவே மனசில் நிற்கிறார்.

ஒளிப்பதிவு அருமை. வாழ்வியலின் அழகு கண் முன் நிற்கிறது.

யானை டுவிஸ்ட் கதைக்கு பலம். தீனா ஓவர் வாய் குறைத்திருக்கலாம்.

மொத்தத்தில் கள்வன் மனசை திருட சிரமப்படுவான்.

மதிப்பீடு 3/5

53 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன