திங்கட்கிழமை, மே 13
Shadow

“ரத்னம்” ஜொலிக்குமா? கோடங்கி விமர்சனம் 3.5/5

 

நடிகர்கள் : விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, யோகி பாபு, விஜயகுமார், ஜெயப்பிரகாஷ், முரளி சர்மா, ஹரிஷ் பெராடி, முத்துக்குமார், கும்கி அஸ்வின், துளசி
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
ஒளிப்பதிவு : எம்.சுகுமார்
இயக்கம் : ஹரி

இயக்குனர் ஹரி – நடிகர் விஷால் கூட்டணி. தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு மீண்டும் ரத்னம் படத்தில் இணைந்துள்ளது. பரபர ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் கதைப்படி. விஷாலின் அம்மா சிறுவயதிலேயே தற்கொலை செய்து இறந்துவிடுகிறார். ஒரு நாள் சமுத்திரக்கனியை கொலை செய்ய வருபவரை கொன்றுவிட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்படும் விஷால் பெரியவன் ஆகி வெளியே வருகிறார். தற்போது எம்எல்ஏ வாக மாறியுள்ள சமுத்திரக்கனி உடன் இருந்து ரவுடியிஸம் செய்து வருகிறார். கொள்கைக்காக கொலை செய்யும் தொழில் விஷாலுக்கு. ஒருபுறம் ஆந்திராவில் தனது தம்பிகளுடன் சேர்ந்து மிகப் பெரிய தாதாவாக இருக்கிறார் முரளி சர்மா. நர்சிங் படித்துள்ள நாயகி பிரியா பவானி சங்கர் மருத்துவராக வேண்டும் என்ற ஆசையில் மூன்று முறை நீட் தேர்வு எழுதியும் அரசு கல்லூரியில்தான் படிக்க வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கிறார். இந்த நிலையில் நாயகியை கொலை செய்ய ஒரு கும்பல் துரத்துகிறது. அவர்களிடம் நாயகியை விஷால் காப்பாற்றுகிறார். நாயகியை நாயகன் காப்பாற்ற காரணம் என்ன? ஏன் அவர்கள் நாயகியை துரத்துகிறார்கள்? நாயகனின் பின்புலம் என்ன என்பதை பரபர ஆக்ஷன் உடன் சொல்லியுள்ளார் இயக்குனர் ஹரி.

தமிழ் சினிமாவுக்கு ரத்னம் ஒரு வித்தியாசமான கதை களம். காதல் டூயட் இல்லாமல் அதுவும் ஒரு முன்னணி நாயகனை வைத்து எடுத்து இருப்பது. விஷால் பரபரப்புடன் எதிரிகளை அடித்து துவம்சம் செய்கிறார்.

முழு படத்தையும் தன் தோள் மீது சுமந்திருக்கும் விஷால் கடுமையாக உழைத்திருப்பது அனைத்துக் காட்சிகளிலும் தெரிகிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் ஏகப்பட்ட ரிஸ்க் எடுத்து. அம்மா செண்டிமெண்ட் மூலம் ரசிகர்களை கலங்கடிக்கச் செய்கிறார் விஷால்,.

வழக்கமான கமர்ஷியல் நாயகியாக இல்லாமல் திரைக்கதையோடு பயணிக்கும் முக்கியமான வேடத்தில் பிரியா பவானி சங்கர் மனசை கவர்கிறார்.

சமுத்திரகனி அழுத்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார். மொட்டை ராஜேந்திரன், விடிவி கணேஷ், ஜேபி, விஜயகுமார் தங்கள் பங்களிப்பை அளவாக கொடுத்திருக்கிறார்கள்.

யோகிபாபு வழக்கம் போல தன் கேரக்டரை நிறுத்திக் கொள்கிறார். பல நேரங்களில் சிரிப்பு கியாரண்டி.

டிஎஸ்பியின் இசையும் பின்னணி இசையும் பட்த்துக்கு பலம் சேர்க்கிறது. பாடல்களில் வழக்கமான அதிரடி இல்லாமல் மெலோடி கலந்து கொடுத்திருப்பது பலம்.

கிளைமாக்ஸ் பயங்கர மசாலா… ஷாக்

ஹரியின் வழக்கமான மசாலாக்களுடன் பல புதுசும் கலந்திருப்பது பலம்.

மொத்தத்தில் ரத்னம் வசூலில் ஜொலிக்கும்!

 

 

 

77 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன