திங்கட்கிழமை, ஜூன் 24
Shadow

“ஹமாரே பாராஹ்” என்ற ஹிந்திப் படத்தை வெளியிடுவதற்கு சுப்ரீம் கோர்ட் தடை! 

 

 

முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் காட்சிகள், வசனங்கள் இருப்பதாக, ஹமாரே பாராஹ் என்ற ஹிந்திப் படத்தை வெளியிடுவதற்கு சுப்ரீம் கோர்ட் தடை

பிரபல பாலிவுட் நடிகர் அன்னுர கபூர் உள்ளிட்டோர் நடிக்கும், ஹமாரே பாராஹ் படத்தின் முன்னோட்டக் காட்சிகள் சமீபத்தில் வெளியாயின. இதில், முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் காட்சிகள், வசனங்கள் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்தப் படத்துக்கு தடை விதிக்கக் கோரி, மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

முதலில் இந்தப் படத்தை ஜூன், 14ம் தேதி வரை வெளியிடுவதற்கு தடை விதித்திருந்தது. மேலும், இந்தப் படத்தை பார்த்து கருத்து தெரிவிக்கும்படி, திரைப்பட தணிக்கை குழுவுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் திரைப்பட தணிக்கைக் குழு கூடுதல் அவகாசம் கேட்டுச்சு.

அதை ஏற்காத ஐகோர்ட் படத்தை வெளியிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது. அதே நேரத்தில் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய சில வசனங்கள், காட்சிகளை நீக்கும்படி உத்தரவிட்டுஇருந்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுஉள்ளதாவது:

இந்த படத்தின் முன்னோட்ட காட்சிகளை நாங்கள் பார்த்தோம். நீங்கள் கூறியதுபோல் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் நீக்கப்படவில்லை. முன்னோட்ட காட்சிகளே இவ்வளவு ஆட்சேபகரமாக இருந்தால், படம் எப்படி இருக்கும்.நீதிமன்ற உத்தரவிற்குப் பின் சில காட்சிகளை, வசனங்களை நீக்குவதாகக் கூறியுள்ளபோதே நீங்கள் தோற்றுவிட்டீர்கள். ஆட்சேபனைக்குரிய, சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனங்கள் உள்ள இந்தப் படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

35 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன