ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 15
Shadow

“தெருக்கூத்து கலைஞர்களுக்கு எந்த பிரஷரும் கொடுக்க கூடாது” – கட்டளை போட்ட இளையராஜா!

 

“தெருக்கூத்து கலைஞர்களுக்கு எந்த பிரஷரும் கொடுக்க கூடாது” – உத்தரவிட்ட இளையராஜா!

 

இளையராஜா இசையில், பாரி இளவழகன் இயக்கத்தில் தெருத்கூத்து கலை, அந்த  கலைஞர்களை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ஜமா. இதென்ன தலைப்பு. தெருக்கூத்து பின்னணியில் எந்த விஷயத்தை சொல்ல வருகிறீர்கள் என்று இயக்குனரிடம் கேட்டால், ‘‘ ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை தயாரித்த லெர்ன் அண்ட் டெக் புரடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. தெருக்கூத்து பின்னணியில் தமிழில் சில படங்கள் வந்திருந்தாலும் இது புதுவகை கரு. குறிப்பாக, பெண் வேடமிட்டு தெருக்கூத்து ஆடுபவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், அவர்களின் உளவியல், ஆதங்கம், கோபத்தை இந்த  கதை சொல்கிறது. நானே பெண் வேடமிட்டு தெருக்கூத்து ஆடும் கல்யாணம் என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். பொதுவாக வட மாவட்டங்களில்  தெருக்கூத்து நடத்தும் குழுக்களை ஜமா என்று அழைப்பாளர்கள். அம்பலவாணன் ஜமா என்ற குழு பின்னணியில் இந்த கதை நகர்கிறது.

ஹீரோயினாக அம்முஅபிராமி நடித்துள்ளார். அந்த ஜமா தலைவராக சேத்தன் வருகிறார்.விடாது கருப்பில் அவர் சாமி கெட்டப் போட்டு இருக்கிறார். விடுதலை படத்தில் அவர் நடித்த கேரக்டருக்கு, முற்றிலும் வேறாக இந்த கேரக்டர் இருக்கும். கிரீடம் கட்டி ஆடுவது கடினமான ஒன்று. 18 முடிச்சு போட்டு, அந்த காஸ்ட்யூமுக்கு மாற்றி, அடவுகளை சரியாக செய்து, பாட்டை மறக்காமல் பாட வேண்டும். அதை சேத்தன் சிறப்பாக செய்திருக்கிறார். தாங்கல் சேகர் என்பவர் அவருக்கு பயிற்சி கொடுத்தார். ’’ என்றார்.

‘‘தெருக்கூத்து கலைஞர்கள் வாழ்க்கையை படமாக்க ஆசைப்பட்டது ஏன்’’ என்று இயக்குனரிடம் கேட்டால், ‘‘நான் திருவண்ணாமலை மாவட்டம் பள்ளிகொண்டா பட்டு சேர்ந்தவன். எங்கள் பகுதிகளில் தெருக்கூத்து பிரபலம். குறிப்பாக, எங்கள் ஊரில் வசிப்பவர்களே எங்கள் ஊர் திருவிழாவில் கூத்து கட்டுவார்கள். ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு கதாபாத்திரத்தில் பல ஆண்டுகளாக, பல தலைமுறையாக நடிக்கிறார்கள்.என் மாமாவும் இந்தொழிலில் இருக்கிறார். பெண் வேடமிட்டு நடிப்பவர்களுக்கு பல பிரச்னை. அவர்களால் மற்ற வேடத்துக்கு மாற முடியாது. தவிர, ஜமா தலைவராக, வாத்தியாராக அவர்களால் ஆக முடியாது. இப்படி பல சிக்கல்களை, பெண் வேடம் போட்டு ஆடும் ஒருவனின் காதல், கனவு என பல விஷயங்களை இந்த கதையில் சொல்லியிருக்கிறேன்’’ என்றார்.

‘இந்த படத்துக்கு இசையமைக்க இளையராஜா ஓகே சொன்னது எப்படி’’ என்று கேட்டால், ‘‘எனக்கு அவரை பழக்கமில்லை. என் முதல் படம் இது. ஆனாலும், கதை, சில முன்னோட்ட காட்சிகளை பார்த்தவிட்டு இளையராஜா  இசையமைக்க சம்மதித்தார்.  படத்தில் நாலு பாடல்கள், ஒரு பாடலை மட்டும் வேண்டாம். அது சினிமாத்தனமாக இருக்கிறது. அந்த கலைஞர்களின் பாடலை அப்படியே வைத்துவிடலாம். அந்த கலைஞர்களை வைத்தே பாட வைப்போம்’’ என்று அட்வைஸ் செய்தார். அது பக்கா பொருத்தமாக இருந்தது.

தனது டீமை அழைத்து தெருக்கூத்து கலைஞர்களின் இசை, பாடலை ரிக்கார்ட் செய்யும்போது அவர்கள் போக்கில் விட்டு விட வேண்டும். அந்த கலைஞர்களுக்கு எந்த பிரஷரும் கொடுக்க கூடாது. அவங்க ஸ்டைலில் பாட விடு’ என்று உத்தரவிட்டார். அதேபோல் தெருக்கூத்து கலைஞர்களுக்கும் ஸ்டூடியோவி்ல பாட, இசையமைக்க செட் ஆகவில்லை. எங்களுக்கு வெட்ட வெளியில், பல ஆயிரம் பேர் முன்னிலையில் பாடி, ஆடிதான் பழக்கம், எங்களை ஒரு அறையில் அடைத்து ஆட சொன்னால் மூச்சு முட்டுகிறது என்கிறார்கள். அதற்கேற்ப செட்டப் மாற்றினோம். ஆகஸ்ட் 2ம் தேதி படம் ரிலீஸ்’ என்றார்

67 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன