🚨9 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்:
அதன்படி, தாம்பரம், தாம்பரம், நாகை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, திருப்பத்தூர், மாவட்ட டிஎஸ்பிக்களை மாற்றி, சட்ட ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், திருப்பத்தூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துமாணிக்கும் போலீஸ் அகாடெமிக்கு மாற்றம். மதுர – மேலூர், திருச்சி-முசிறி காவல் கண்காணிப்பாளர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பணியிட மாற்ற விவரங்கள்:
🚨தமிழ்நாடு காவல் அகாடமி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக முத்து மாணிக்கம் பணியிடமாற்றம்
🚨ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளராக பிரீத்தி நியமனம்
🚨மேலூர் துணை காவல் கண்காணிப்பாளராக வேல்முருகன் இடமாற்றம்
🚨தமிழ்நாடு காவல் அகாடமி துணை காவல் கண்காணிப்பாளராக யாஸ்மின் நியமனம்
🚨ஊமச்சிக்குளம் துணை காவல் கண்காணிப்பாளராக பாலசுந்தரம் நியமனம்
🚨கள்ளக்குறிச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக குத்தாலிங்கம் நியமனம்
🚨தாம்பரம் மணிமங்கலம் சரக உதவி காவல் ஆணையராக இளஞ்செழியன் இடமாற்றம்
🚨ஈரோடு குடிமைப் பொருள் வழங்கல் சிஐடி பிரிவு துணை காவல் கண்காணிப்பாளராக ராஜபாண்டியன் இடமாற்றம்