தமிழகத்தில் முதன்முறையாக ஆன்லைனில் கட்டட அனுமதி பெறும் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
www.onlineppa.tn.gov.in அனுமதியை பெறலாம். 2,500 சதுர அடி வரை உள்ள மனையில் 3,500 சதுர அடியில் கட்டப்பட உள்ள வீடுகளுக்கு திட்டம் பொருந்தும்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.541.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4,184 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் ரூ.382.84 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 1459 தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
“வீடு கட்ட வேண்டும் என நினைக்கும் அனைவருக்கும் இத்திட்டம் பயன்படும்” -ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி பெறும் திட்டம் குறித்து அமைச்சர் முத்துசாமி விளக்கம்.
நடுத்தர மக்களின் வீடு கட்டும் கனவை எளிதாக்க, தமிழ்நாட்டில் முதல்முறையாக கட்டட அனுமதியை ஆன்லைன் மூலம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்
🏠இத்திட்டத்தின் படி onlineppa.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
🏠ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர் அளிக்கும் விவரத்தின் அடிப்படையில் உடனடியாக அனுமதி வழங்கப்படும்.
🏠விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட எந்த அலுவலகத்துக்கும் செல்ல வேண்டியதில்லை.
🏠கட்டடப்பணிகள் முடிந்ததும், முடிவுச்சான்று பெறுவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது.
🏠பரிசீலனைக் கட்டணம், கட்டமைப்பு, வசதிக் கட்டணங்களில் இருந்து 100% விலக்கு.
🏠2,500 சதுரடி வரையிலான மனையில், 3500 சதுரடியில் கட்டப்படும் வீடுகளுக்கும் இத்திட்டம் பொருந்தும்.