ஆந்திர முதல்வர் சந்திரபாபு – பவன் கல்யாண் பற்றிய அவதூறால் “நடிகை ஸ்ரீரெட்டி மீது வழக்கு”..
ஆந்திர முதல்வர் சந்திரபாபு , துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் சந்திரபாபவின் மகனும், அமைச்சருமான நாரா லோகேஷ் உள்ளிட்டவர்கள் பற்றி நடிகை ஸ்ரீரெட்டி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஸ்ரீரெட்டி மீது ஆந்திர போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முதல்வர் சந்திரபாபு, துணை முதல்வர் பவன் கல்யாண், அமைச்சர்கள் நாரா லோகேஷ், உள்துறை அமைச்சர் அனிதா ஆகியோர் குறித்து சர்ச்சைக்கு பெயர் பெற்ற நடிகை ஸ்ரீரெட்டி கூறிய கருத்து விவாதத்தை கிளப்பி உள்ளது
இதையடுத்து நடிகை ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெலுங்கு தேசம் கட்சியின் பிற்படுத்தப்பட்ட பிரிவின் நிர்வாகி ராஜூ யாதவ் சார்பில் கர்னூல் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரை தொடர்ந்து நடிகை ஸ்ரீரெட்டி மீது பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நடிகை ஸ்ரீரெட்டி இப்படி சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல.