தாமதமான வருமான வரித் தாக்கல் இனி கிரிமினல் குற்றம் இல்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்
வருமான வரிக்கான் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யும் இறுதி நாள் நெருங்கி வருகிறது. ஏற்கனவே ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்த பலருக்கு பணம் வந்துவிட்டது. தவறான வருமான வரி கணக்கு மற்றும் விலக்குகளை பெறும் வகையில் வருமான வரிக் கணக்கு ரிட்டர்னை தாக்கல் செய்ய கூடாது , தவறான தகவல்களை கொடுக்க கூடாது என்று வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது பெரிய அபராதங்கள் மற்றும் சிறைத்தண்டனைக்கு கூட வழிவகுக்கும் நிலை இருந்தது. இதில் முறைகேடுகளை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில்தான் தற்போது தாமதமான வருமான வரித் தாக்கல் இனி கிரிமினல் குற்றம் இல்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.