நாளை கூடும் தயாரிப்பாளர் சங்க அவசர செயற்குழு கூட்டம்!
திரைப்படங்களுக்கு தனுஷ் ஒத்துழைப்பு தருவதில்லை எனவும், அட்வான்ஸ் வாங்கிவிட்டு கால்ஷீட் தராமல் இழுத்தடிக்கிறார் எனவும் தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்ட நிலையில், இத்ற்கு நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது. நடிகர்களின் சம்பளம் குறைப்பு மற்றும் திரைப்படங்களின் தயாரிப்பு செலவை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது
அதேபோல், சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் இருக்கும் விஷயங்களுக்கான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கின்றனர். வரும் 16ஆம் தேதியிலிருந்து புதிய திரைப்படங்களின் படப்பிடிப்பை தொடங்குவதில்லை என்றும் தற்போது தொடங்கி நடைபெற்று வரும் படங்களின் வேலைகளை அக்டோபர் மாதத்திற்குள் முடித்து விட வேண்டும் எனக் கூறியிருந்தனர். இது குறித்தும் நாளைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.
ஏற்கனவே தமிழ் சினிமா மிக மோசமான நிலைக்கு போய்க் கொண்டிருக்கும் நிலையில் திரைத்துறையில் இதுபோன்ற சிக்கல்கள் மேலும் சிக்கலைத்தான் ஏற்படுத்துமே தவிர தீர்வுக்கு வழி வகுக்காது என்பதை புரிந்து கொண்டு தன்னிச்சையாக முடிவெடுக்காமல் அனைத்து அமைப்பையும் அழைத்து பேசினால் தீர்வுக்கு வழி கிடைக்கும் செய்வார்களா?