வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

உலக செய்திகள்

மீண்டும் செக்ஸ் குற்றச்சாட்டில் சிக்கிய நித்தியானந்தா… வெளி நாட்டு பெண் பக்தை இ-மெயிலில் புகார்!

மீண்டும் செக்ஸ் குற்றச்சாட்டில் சிக்கிய நித்தியானந்தா… வெளி நாட்டு பெண் பக்தை இ-மெயிலில் புகார்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
  கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தா சாமியாருக்கு சொந்தமான தியான பீடம் உள்ளது. தற்போது கைலாசா எனும் தனி நாட்டில் நித்யானந்தா இருந்து வருகிறார். அங்கிருந்தபடி அவ்வப்போது வீடியோக்களை அவர் வெளியிட்டு வருகிறார் இந்த நிலையில், ராமநகர் மாவட்டம் பிடதி போலீசாருக்கு வெளிநாட்டை சேர்ந்த ஒரு பெண் நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி புகார் அளித்துள்ளார். அந்த வெளிநாட்டு பெண்ணின் பெயர் சாரக் லான்ட்ரி ஆகும். பிடதி போலீசாருக்கு இ-மெயில் மூலம் அவர் புகார் அனுப்பி வைத்திருந்தார். அதில் கைலாசா நாட்டில் இருக்கும் நித்யானந்தா சாமியார், அவரது சீடர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி இருந்தார். மேலும் அந்த பெண் தனது டுவிட்டர் பதிவிலும் நித்யானந்தா மீது குற்றச்சாட்டு கூறி இருந்தார். ஆனால் நித்யானந்தா மீது இ-மெயில் வெளிநாட்டு பெண் அளித்திருக்கும் புகாரின் பேரில் பிடத...
சிறையிலேயே காதலியை திருமணம் செய்து கொண்ட விக்கிலீக்ஸ் நிறுவனர்!

சிறையிலேயே காதலியை திருமணம் செய்து கொண்ட விக்கிலீக்ஸ் நிறுவனர்!

HOME SLIDER, World News, உலக செய்திகள்
  விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள உயர் பாதுகாப்பு சிறையில் தன் நீண்ட நாள் காதலியான ஸ்டெல்லா மோரிஸை நேற்று திருமணம் செய்து கொண்டார். ஜூலியன் அசாஞ்சே தனது விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் மூலம் அரசாங்க ரகசியங்களை ஹேக் செய்தது தொடர்பான வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் உள்ளார். அசாஞ்சே 10 ஆண்டுகளுக்கு மேலாக ரகசியமான அமெரிக்க ராணுவ பதிவுகள் மற்றும் ராஜதந்திர விவகாரங்களை விக்கிலீக்ஸ் மூலம் வெளியிட்டார். ராணுவ ரகசியங்கள் வெளியிட்டது தொடர்பாக அவர் மீது அமெரிக்காவில் பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன. அவ்வழக்குகளில் விசாரணையை எதிர்கொள்ள அமெரிக்க அதிகாரிகள் அவரை நாடு கடத்த முயன்றனர். எந்த தவறும் செய்யவில்லை என்று மறுக்கும் அசாஞ்சே, 2019 முதல் பெல்மார்ஷ் சிறையில் இருந்து வருகிறார், அதற்கு முன்பு லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் ஏழு ஆண்டுகளாக இருந்தார்...
”ரஷ்யாவை எதிர்ப்பதில் இந்தியாவுக்கு பயம்” – சொல்கிறார் அமெரிக்க அதிபர்

”ரஷ்யாவை எதிர்ப்பதில் இந்தியாவுக்கு பயம்” – சொல்கிறார் அமெரிக்க அதிபர்

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா தீவிரப்படுத்தி வரும் நிலையில் அந்நாட்டிற்கு எதிரான கூட்டணியில் இந்தியா இல்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார். அவரது கருத்து சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அணிசேராக் கொள்கையை கடைபிடித்து வரும் இந்தியா, உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுடன் நல்லுறவை தொடர்ந்து பேணி வருகிறது. உக்ரைனை ரஷ்யா கடுமையாக தாக்கி வரும் நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக ஐநா சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது, வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. குவாட் அமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன. இவற்றில் இந்தியாவை தவிர்த்து மற்ற நாடுகள் அனைத்தும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியுள்ளன இவற்றை சுட்டிக் காட்டி அமெரிக்காவில் வணிக தலைவர்களிடையே உரையாற்றிய அதிபர...
மரியுபோல் நகரம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் ரஷிய போர் கப்பல்கள்!

மரியுபோல் நகரம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் ரஷிய போர் கப்பல்கள்!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் நகரங்கள் மீது  ரஷிய படைகள் வான்வெளி, தரைவழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், துறைமுக நகரமான மரியபோல் மீது ரஷிய போர் கப்பல்கள் வெடிகுண்டு தாக்குதல்களை நிகழ்த்தி உள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. அசோவ் கடல்  பகுதியில் ரஷிய போர் கப்பல்களின் செயல்பாடுகளை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருவதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அந்த பகுதியில் ஏழு ரஷிய கப்பல்கள் இருப்பதாகவும், கருங்கடலில் ரஷியா 21 கப்பல்களை நிறுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே உக்ரைனில் உள்ள ரஷிய படையினர் உணவு மற்றும் எரிபொருளைப் பெறுவதில் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும் உறைபனி மற்றும் கடும் குளிரை சமாளிக்க அவர்களிடம் போதுமான உபகரணங்கள் இல்லை என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்....
உக்ரைனில் இருந்து 2300 குழந்தைகளை கடத்திய ரஷ்யா? – அமெரிக்கா குற்றச்சாட்டு

உக்ரைனில் இருந்து 2300 குழந்தைகளை கடத்திய ரஷ்யா? – அமெரிக்கா குற்றச்சாட்டு

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 4-வது வாரமாக நீடித்து வருகிறது. பல்வேறு பகுதிகள் மீதும் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்கி வருகிறது. இந்நிலையில், டுவிட்டரில் பதிவிட்டுள்ள உக்ரைனில் உள்ள அமெரிக்க தூதரகம், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள லூகான்ஸ்க் மற்றும் டோனெட்ஸ்க் பகுதிகளிலிருந்து 2 ஆயிரத்து 389 குழந்தைகளை சட்டவிரோதமாக அழைத்துச் சென்றுள்ளதாகவும், இது கடத்தல் என்றும் குற்றம்சாட்டியுள்ளது. மரியுபோல் நகரிலிருந்து படைகள் வெளியேற வேண்டும் என்ற ரஷ்யாவின் அழைப்பை உக்ரைன் நிராகரித்தது. இதையடுத்து, அங்கு தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. அதேநேரம், மரியுபோல் நகரிலிருந்து ஒரு லட்சம் பேர் வெளியேற விரும்பினாலும், சரியான வழித்தடம் இல்லாததால், வெளியேற முடியவில்லை என்று துணை பிரதமர் இரினா வெரேஸ்சுக் கோரிக்கை விடுத்துள்ளார். கெர்சன் நகரில் உணவு மற்றும் மருத்துவ விநியோகம் கிடைக்காமல் 3 ல...
அகதிகளாக தமிழகத்திற்கு படையெடுக்கும் இலங்கை தமிழர்கள்!

அகதிகளாக தமிழகத்திற்கு படையெடுக்கும் இலங்கை தமிழர்கள்!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
  இலங்கையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையான பொருளாதார சிக்கல் ஏற்பட்டு மக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்க முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதையடுத்து, அங்கு பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் கிடுகிடுவென விலை உயர்ந்ததை அடுத்து பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், தனுஷ்கோடி அடுத்த மூன்றாம் சத்திரத்தில் தடைசெய்யப்பட்ட பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக ஆறு நபர்கள் நிற்பதாக கியூ பிராஞ்ச் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.   இதையடுத்து, கியூ பிராஞ்ச் போலீஸார் இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து கடலோர காவல் படையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் இலங்கை தலைமன்னார், யாழ்பாணத்தில் இருந்து அகதிகளாக தமிழகத்துக்கு வந்தது தெரியவந்துள்ளது. ...
ukraine war: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொல்ல கூலிப்படை

ukraine war: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொல்ல கூலிப்படை

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொல்ல வேக்னர் என்னும் கூலிப்படையை  தங்கள் நாட்டுக்குள் ரஷ்ய அதிபர் புடின் அனுப்பியுள்ளதாக ரஷ்ய உளவுத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களிலும் ரஷ்ய படைகள் தொடர்ந்து ஏவுகணை மற்றும் குண்டுகளை வீசி தாக்கி வருகின்றன. மரியுபோல் நகரை தொடர்ந்து ரஷ்ய படைகள் முற்றுகையிட்டு வருகின்றன.  அந்நகரின் 80 சதவீத கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன்  மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. முதல்முறையாக ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் மேற்கு பகுதியில் டெலியாட்டின் என்ற இடத்தில் நிலத்தடி ஆயுதக் கிடங்கை கின்சஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்க...
133 பேருடன் சென்ற சீன விமானம் மலையில் மோதி விபத்து!

133 பேருடன் சென்ற சீன விமானம் மலையில் மோதி விபத்து!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள்
133 பேருடன் சென்ற சீன விமானம் மலையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சீனாவின் குன்மிங் மாகாணத்தில் இருந்து குவாங்சோ மாகாணத்திற்கு, 133 பேருடன் இந்திய நேரப்படி காலை10.41-க்கு ஜெட் விமானம் புறப்பட்டு சென்றது.   காலை 11.52 மணியளவில் விமானம் 3,225 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, ரேடாரில் இருந்து விமானத்தின் தகவல்கள் துண்டிக்கப்பட்டன. மதியம் 12.35-க்கு குவாங்சோ மாகாணத்தை விமானம் சென்றடைய வேண்டிய நிலையில், விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகின. விமானம் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களில், குவாங்சி மாகாணத்தில், வுசோ நகரத்திற்கு அருகே உள்ள மலை ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது உறுதி செய்யப்பட்டது. முதற்கட்ட தகவல் அடிப்படையில் விபத்தில் சிக்கியவர்களில...
Boeing 737 plane with 133 onboard crashes in China!

Boeing 737 plane with 133 onboard crashes in China!

HOME SLIDER, World News, உலக செய்திகள்
  As per local Chinese media reports, a Boeing 737 passenger plane carrying 133 passengers has crashed in China. The plane belonging to China Eastern Airlines crashed in Teng County, Wuzhou of Guangxi province and caused a mountain fire. The flight MU5736 was flying from Guangzhou to Kunming and departed the airport at 13.11 PM. The flight was scheduled to arrive at 15.05 PM. The plane had been cruising at an altitude 29,100 feet at 0620 GMT, according to FlightRadar24 data. Just over two minutes and 15 seconds later, the next available data showed it had descended to 9,075 feet. In another 20 seconds, its last tracked altitude was 3,225 feet. China Eastern is one of China's three major air carriers. China's airlines had recorded over 100 million continuous hours of sa...
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: ரஷியாவில் இன்று 936 பேர் கைது!

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: ரஷியாவில் இன்று 936 பேர் கைது!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் மீது கடந்த 24-ந்தேதி ரஷியா தாக்குதலை தொடங்கிறது. கிரிமியாவை தன்னுடன் இணைக்க ரஷியா தாக்குதல் நடத்தியதுபோல், இதுவும் எளிதாக முடியவடையும் என ரஷியா மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தாக்குதல் நீண்டு கொண்டே செல்கிறது. ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடுமையாக தடைகளை விதித்துள்ளதால், ரஷியாவில் அத்தியாவசிய பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதனிடையே உக்ரைன் மீதாக தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியாவில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் அவர்களை கைது செய்து போராட்டத்தை ஒடுக்கி வருகின்றன. இன்று போராட்டத்தில் ஈடுபட்ட 936 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த மாதம் 24-ந்தேதியில் இருந்து தற்போது வரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்....