வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

politics

அரசு கஜானாவை சுரண்டிய இரட்டையர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் மீது ஊழல் புகார் கூறுவதா?  -அமித்ஷாவுக்கு ஸ்டாலின் பதிலடி

அரசு கஜானாவை சுரண்டிய இரட்டையர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் மீது ஊழல் புகார் கூறுவதா?  -அமித்ஷாவுக்கு ஸ்டாலின் பதிலடி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி அமித் ஷா பேசும்போது, வாரிசு அரசியலை ஒழிப்போம் என்று கூறியிருந்தார். ஊழல் செய்த கட்சியான திமுக ஊழலுக்கு எதிராக பேசுவதற்கு தகுதி இல்லை என்றும் கூறினார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது; வாரிசு அரசியல் விமர்சனம் வைப்பது கண்ணடி முன் நின்று கரடி பொம்மை விலை கேட்ட நகைச்சுவை போன்று உள்ளது. அரசு கஜானாவை சுரண்டிய இரட்டையர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் மீது ஊழல் புகார் கூறுவதா? திமுகவுக்கு எதிரான சூழ்ச்சிகளை முறியடிப்போம். எத்தனை வித்தைகள் செய்தாலும் 2021 தேர்தலில் மக்கள் பலமான அடியை வழங்குவார்கள். தைத் திங்கள் நேரடியாக பிரச்சாரம் தொடங்குகிறேன். ...
காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் – குலாம்நபி ஆசாத் கடுமையாக விமர்சனம்

காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் – குலாம்நபி ஆசாத் கடுமையாக விமர்சனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பீகார் சட்டசபை தேர்தல், ராஜஸ்தான், கர்நாடகா, குஜராத் இடைத்தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. இதையடுத்து, அக்கட்சிக்குள் உட்கட்சி பூசல் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. குறிப்பாக, கபில் சிபல் காங்கிரஸ் கட்சி தலைமையை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் எழுந்துள்ளன. இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி தலைமையில் பெரும் மாற்றம் வேண்டும் என கடந்த ஆக்ஸ்ட் மாதம் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியவர்களில் கபில் சிபலுடன் சேர்த்து குலாம்நபி ஆசாத்தும் உள்ளடக்கம். ஆசாத்தும் சிபலுக்கு ஆதரவான கருத்துக்களையே தெரிவித்து வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தற்போதைய அரசியல் நிலை தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் இன்று கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்க...
அமீத்ஷாவுடன் டிரண்டிங்கில் மல்லுகட்டிய சிம்புவின் மாநாடு

அமீத்ஷாவுடன் டிரண்டிங்கில் மல்லுகட்டிய சிம்புவின் மாநாடு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    அமீத்ஷாவுடன் டிரண்டிங்கில் மல்லுகட்டிய சிம்புவின் மாநாடு https://youtu.be/C0fezXz_xSA
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்த பிறகு, 400க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களின் கனவு நனவாகியுள்ளது. அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவப் படிப்பிற்கான ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இதைத் தொடர்ந்து, கலந்தாய்வின் மூலம் அவர்கள் பல்வேறு கல்லூரிகளில் மருத்துவம் பயில்வதற்கான இடம் ஒதுக்கப்பட்டது. இருப்பினும், ஒரு சில அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளதால், அவர்கள் சிரமப்படுவதாக தகவல் வெளியாகியது. இதனிடையே, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை திமுக ஏற்க...
சென்னை வந்தார் அமித்ஷா

சென்னை வந்தார் அமித்ஷா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா 2 நாள் அரசு முறைப் பயணமாக இன்று சென்னை வந்தார். டெல்லியில் இருந்து காலை 10.50 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்ட அவர், மதியம் 1.40 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைந்தார். அவருக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாஜக மாநில தலைவர் எல்.முருகன், மாநில பொறுப்பாளர் சி.டி.ரவி, பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் அமித் ஷாவை வரவேற்றனர். இதேபோல் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் நேரில் சென்று அமித் ஷாவை வரவேற்றனர். அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், மாபா பாண்டியராஜன் உள்ளிட்டோரும் வரவேற்றனர். விமான நிலையத்திற்கு வெளியே பாஜக மற்றும் அதிமுக சார்பில் தொண்டர்கள் கலை நிகழ்ச்சிகளுடன் அமித்ஷாவை உற்சாகமாக ...
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை திமுக ஏற்கும் – முக ஸ்டாலின்

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை திமுக ஏற்கும் – முக ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை திமுக ஏற்கும் என அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும், சமூகநீதிக் கொள்கையின் அடிப்படையையும், வெளிப்படுத்தும் வகையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நின்று, சட்டப்பேரவையில் நிறைவேற்றித் தந்தும், அதனை மத்திய அரசிடம் உரிய வகையில் வலியுறுத்திச் செயல்படுத்தும் வலிமையும், அக்கறையுமற்ற அதிமுக அரசினால், அரியலூர் அனிதா தொடங்கி ஆண்டுதோறும் பல மாணவர்களின் உயிரைக் கொன்று குவித்தது நீட் எனும் கொடுவாள். அதனால்தான், திமுக ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அதிமுக ஆட்சியாளர்களோ, எத்தனை உயிர்கள் போனால் எங்...
இணையத்தில் வைரலாகும் மு.க.ஸ்டாலின் சைக்கிளிங் படங்கள்!

இணையத்தில் வைரலாகும் மு.க.ஸ்டாலின் சைக்கிளிங் படங்கள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சைக்கிளிங் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.   மு.க.ஸ்டாலின் வாரத்தில் மூன்று நாட்கள் காலை நேரத்தில் சென்னை புறநகர் பகுதிகளில் சைக்கிளில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.     மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயணம் செய்யும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.  ...
டெல்லியில் அதிகரித்த காற்று மாசால் கோவா சென்ற சோனியா காந்தி

டெல்லியில் அதிகரித்த காற்று மாசால் கோவா சென்ற சோனியா காந்தி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
டெல்லியில் அதிகரித்த காற்று மாசால் கோவா சென்றார் சோனியா காந்தி டெல்லியில் சமீப நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.  இதேபோன்று காற்று மாசு அளவும் அதிகரித்து உள்ளது.  காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி டெல்லியிலுள்ள கங்கா ராம் மருத்துவமனையில் இந்த ஆண்டு ஜூலை 30ந்தேதி சேர்க்கப்பட்டார். இதன்பின்பு கடந்த ஆகஸ்டில் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று சென்ற பின்னர், தீவிர மருத்துவ சிகிச்சைகள் அவருக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தன. கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கூட கலந்து கொள்ளாமல் அவரது மகன் ராகுல் காந்தியுடன் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றார். டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசால் மார்பு தொற்று ஏற்பட்டு கடுமையாக அவர் அவதிப்பட்டு உள்ளார்.  இதனால், தலைநகர் டெல்லியில் வசித்து வந்த சோனியா காந்தியை, அவரது உடல்நலத்திற்காக ஒரு சில நாட்கள் நகரை விட்டு வெளியேறும்படி டாக...
அமித்ஷா வருகை, சசிகலா விடுதலை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கவில்லையாம் – அமைச்சர் உதயகுமார்

அமித்ஷா வருகை, சசிகலா விடுதலை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கவில்லையாம் – அமைச்சர் உதயகுமார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்தப் பணிகளில் ஆளும் கட்சியான அ.தி.மு.க., எதிர்க்கட்சியான தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் தீவிரம் காட்டி உள்ளன. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் இல்லாமல் அ.தி.மு.க. முதல் முறையாக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. எனவே அ.தி.மு.க. கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது. அந்த வகையில் அ.தி.மு.க.வில் கட்சி ரீதியாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், அ.தி.மு.க. அமைச்சர்கள், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று ராயபுரத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று மாலை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும்...