வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

NEWS

சிறப்பு பஸ்கள் மூலம் 5 லட்சம் பேர் பயணம்- பேருந்து நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம்!

சிறப்பு பஸ்கள் மூலம் 5 லட்சம் பேர் பயணம்- பேருந்து நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சிறப்பு பஸ்கள் மூலம் 5 லட்சம் பேர் பயணம்- பேருந்து நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம்! தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆண்டுதோறும் தமிழக அரசு  சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது. கடந்த ஆண்டு தீபாவளியின்போது கொரோனா பயம் காரணமாக குறைந்த அளவிலேயே பொதுமக்கள் பஸ்களில் பயணம் செய்தனர். இப்போது கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல மீண்டும் ஆர்வம்காட்டி வருகின்றனர். குடும்பத்தோடு உற்சாகமாக பயணம் செய்கின்றனர். இதனால் இந்த ஆண்டு அதிகளவு மக்கள் பஸ்களை பயன்படுத்தி வருவதால் தமிழக அரசு  பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது. அதன்படி அரசு போக்குவரத்து கழகங்களில் மொத்தம் உள்ள 20 ஆயிரத்து 334 பஸ்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டு வருகின்றன. கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் கோயம்பே...
நீட் தேர்வு முடிவு- தமிழக அளவில் நாமக்கல் மாணவன், மாணவி முதலிடம்!

நீட் தேர்வு முடிவு- தமிழக அளவில் நாமக்கல் மாணவன், மாணவி முதலிடம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நீட் தேர்வு முடிவு- தமிழக அளவில் நாமக்கல் மாணவன், மாணவி முதலிடம்! அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவ சேர்க்கைக்கு தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு (நீட்) நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இந்த ஆண்டு கொரோனா 2-ம் அலை பாதிப்பு மிக மோசமாக இருந்ததால் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், பிளஸ்-2 மாணவர்களுக்கு 10, 11 வகுப்பு தேர்வுகள் மற்றும் பருவ தேர்வுகளில் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இதனால் இந்த ஆண்டிற்கான நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்தினர். அதேநேரம் நீட் ஒரே ஒரு தேர்வுதான் என்பதால் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கையை பின்பற்றி தேர்வுகளை நடத்தலாம் என்றும் சிலர் வலியுறுத்தினர். இந்தச்சூழலில் கடந்த ஜூலை மாதம்  நீட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. இதை தொடர்ந்து இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் ...
கனமழை எதிரொலி: 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை எதிரொலி: 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கனமழை எதிரொலி: 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை! இலங்கை கடலோரப்பகுதி மற்றும் அதனையொட்டிய தென் தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருகிறது. இதனால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் தீபாவளி வரை 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் இன்று முதல் செயல்பட உள்ளன. 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்நிலையில், வேலூர், நெல்லை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தொ...
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் ரத்து: உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பு!

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் ரத்து: உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் ரத்து: உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பு! எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, ஆட்சியில் இருந்தபோது வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்தது. சட்டம் நிறைவேற்றப்பட்டு அதற்கான  அரசாணையும் வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. உயர்நீதிமன்றம் மதுரை கிளையிலும் வழக்குகள் தொடரப்பட்டன. வழக்கு மீதான விசாரணைகள் முடிவடைந்த நிலையில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் செல்லாது என பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது. மேலும், இடஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளதா? உள்ளிட்ட ஆறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது....
19 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு: உற்சாகத்துடன் வருகை தந்த மாணவ- மாணவிகள்!

19 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு: உற்சாகத்துடன் வருகை தந்த மாணவ- மாணவிகள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
19 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு: உற்சாகத்துடன் வருகை தந்த மாணவ- மாணவிகள்! கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால், கடந்த 19 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் ஏற்கனவே 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தொடரந்து, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புகளுக்கு  நவம்பர் 1-ம் தேதி முதல் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார். அதன்படி கொரோனா நெறிமுறைகளுடன் இன்று முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு வரும் மாணவ -மாணவிகள...
கோலியின் புதிய வியூகம்: ஆச்சர்யத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

கோலியின் புதிய வியூகம்: ஆச்சர்யத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
கோலியின் புதிய வியூகம்: ஆச்சர்யத்தில் மூழ்கிய ரசிகர்கள்! டி20 உலக கோப்பையில் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் கே.எல். ராகுல், ரோகித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, ஷர்துல் தாகூர், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, பும்ரா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். ரோகித் சர்மா- கே.எல். ராகுல் அல்லது இஷான் கிஷன்- கே.எல். ராகுல் ஆகியோரில் ஏதாவது ஒரு ஜோடி களம் இறங்கும் என ரசிகர்களும், நியூசிலாந்து பந்து வீச்சாளர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணி சர்ப்ரைஸ் அளித்தது. கே.எல். ராகுல், இஷான் கிஷன் ஆகியோரை தொடக்க வீரர்களாக களம் இறக்கினார் விராட் கோலி. இது இந்திய ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. மேலும், நியூசிலாந...
எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி!

எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி! அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும்,  எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனியார் மருத்துவமனையில்  இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். குடலிறக்கம் பிரச்சனை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் எடப்பாடி பழனிசாமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில்  இதுதொடர்பான பரிசோதனை மேற்கொள்வதற்காக இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனை முடிந்த பின்னர் இன்று அவர் வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது....
சென்னை-புறநகர் பகுதியில் 7 நாட்களுக்கு அதிக மழைக்கு வாய்ப்பு!

சென்னை-புறநகர் பகுதியில் 7 நாட்களுக்கு அதிக மழைக்கு வாய்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னை-புறநகர் பகுதியில் 7 நாட்களுக்கு அதிக மழைக்கு வாய்ப்பு! வடகிழக்கு பருவமழை கடந்த 25-ந்தேதி தொடங்கியது. இதையடுத்து மத்திய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது. தெற்கு வங்கக்கடல் மத்தியில் இருந்து வந்த இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 2 நாட்களில் மேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. உள் மாவட்டங்களில் 29 முதல் 31-ந் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. குறை...
நியாய விலைக்கடைகள் மூலம் கியாஸ் சிலிண்டர் விற்பனை: மத்திய அரசு திட்டம்!

நியாய விலைக்கடைகள் மூலம் கியாஸ் சிலிண்டர் விற்பனை: மத்திய அரசு திட்டம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நியாய விலைக்கடைகள் மூலம் கியாஸ் சிலிண்டர் விற்பனை: மத்திய அரசு திட்டம்! சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மானிய சிலிண்டர் விலை தற்போது ரூ.900 ஆயிரத்தை கடந்து உள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் சிறிய கியாஸ் சிலிண்டர்களை நியாய விலைக்கடைகள் மூலம் சில்லறை விலைக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த தகவலை மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை செயலாளர் சுதான்ஷூ பாண்டே நேற்று தெரிவித்து உள்ளார். நியாய விலைக்கடைகளின் நிதி சாத்தியக்கூறுகளை அதிகரிப்பது குறித்து நேற்று நடத்தப்பட்ட மெய்நிகர் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த தகவலை அவர் வெளியிட்டார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், கியாஸ் சிலிண்டர்களை நியாய விலைக்கடைகள் மூலம் சில்லறை விற்பனை செய்யும் திட்டத்தை பாராட்டினர். மேலும் ...
ஷாருக்கான் மகனுக்கு ஜாமீன் கிடைக்குமா?- ஆர்யன் கான் தரப்பில் வாதாடும் முன்னாள் அட்டர்னி ஜெனரல்!

ஷாருக்கான் மகனுக்கு ஜாமீன் கிடைக்குமா?- ஆர்யன் கான் தரப்பில் வாதாடும் முன்னாள் அட்டர்னி ஜெனரல்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
ஷாருக்கான் மகனுக்கு ஜாமீன் கிடைக்குமா?- ஆர்யன் கான் தரப்பில் வாதாடும் முன்னாள் அட்டர்னி ஜெனரல்! மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் கடந்த 2-ந் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில், நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட சிலர் போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆர்யன் கான் மற்றும் சிலரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன் கான் கடந்த 8-ம் தேதி முதல் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி 2 முறை கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், 2 முறையும் ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்நிலையில், சொகுசு கப்பலில் போதை விருந்தில் பங்கேற்ற வழக்கில் கைது...