வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

MOVIES

திகில், காமெடி நிறைந்த சாகச திரைப்படமாக உருவாகும் ‘கஜானா’

திகில், காமெடி நிறைந்த சாகச திரைப்படமாக உருவாகும் ‘கஜானா’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
திகில், காமெடி நிறைந்த சாகச திரைப்படமாக உருவாகும் ‘கஜானா" சினிமா என்பது மிகப்பெரிய காட்சி ஊடகம் என்றாலும், அதனுடைய முதல் நோக்கம் மக்களை மகிழ்விப்பது தான். அதனை சரியாக புரிந்துக்கொண்ட படைப்பாளிகள், மக்களை மகிழ்விக்க என்றுமே தவறியதில்லை. அந்த வகையில், பெரியவர்கள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் என அனைத்து தரப்பினருக்குமான கலகலப்பான காமெடி, திகில் மற்றும் சாகசங்கள் நிறைந்த படமாக உருவாகி வருகிறது ‘கஜானா’. போர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் சார்பில் பிரபாதிஸ் சாம்ஸ் பிரமாண்டமான முறையில் இப்படத்தை தயாரிப்பதோடு ,படத்தின் கதையும் அவரே எழுதியுள்ளார். ஜோதிகா நடித்த ’ராட்சசி’ பட இயக்குநர் சை.கெளதம் ராஜ் திரைக்கதை, வசனம் எழுத, அறிமுக இயக்குநர் யாசின் இயக்குகிறார். இயக்குநர் வேலுபிரபாகரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்தி...
கிறிஸ்மஸ் ட்ரீட் ஆக வெளியாகும் விஷாலின் வீரமே வாகை சூடும் டீசர்!

கிறிஸ்மஸ் ட்ரீட் ஆக வெளியாகும் விஷாலின் வீரமே வாகை சூடும் டீசர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  கிறிஸ்துமஸ் தினத்தில் நடிகர் விஷாலின் “வீரமே வாகை சூடும்” திரைப்பட டீசர் ! விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அறிமுக இயக்குநர் து.பா. சரவணன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து வரும் திரைப்படம் “வீரமே வாகை சூடும் “. அதிகார மட்டதிற்கு எதிராக எளியவனின் போராட்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் 25.12.2021 அன்று வெளியாகிறது. மிக சமீபத்தில் தான் அறிவிக்கபட்ட இப்படத்தின் படக்குழுவின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பில் படத்தின் அனைத்து கட்ட பணிகளும் முடிந்து தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. வரும் 2022 ஜனவரி 26 அன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. பாண்டியநாடு படத்திற்கு பிறகு, விஷால் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிவரும் படம் “வீரமே வாகை சூடும் “. அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதையில் விஷாலின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ளது இப்ப...
தரமான படங்களையும், நல்ல இயக்குனர்களையும் தமிழ் சினிமாவுக்கு தரும் இரஞ்சித் – பாரதிராஜா வாழ்த்து

தரமான படங்களையும், நல்ல இயக்குனர்களையும் தமிழ் சினிமாவுக்கு தரும் இரஞ்சித் – பாரதிராஜா வாழ்த்து

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  தரமான படங்களையும், நல்ல இயக்குனர்களையும் தமிழ் சினிமாவுக்கு தரும் இரஞ்சித் - பாரதிராஜா வாழ்த்து ரைட்டர் படம் பார்த்தேன் நெகிழ்ந்தேன், தரமான படங்களையும் கலைஞர்களையும் உருவாக்கும் ரஞ்சித்துக்கு எனது வாழ்த்துக்கள். இயக்குனர் பாரதிராஜா பாராட்டு. இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரைட்டர். நேற்று இயக்குனர் பாரதிராஜா மற்றும் பாக்கியராஜ் இருவரும் ரைட்டர் படம் பார்த்தபிறகு இயக்குனர் பிராங்ளினை வெகுவாக பாராட்டினார். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு போலீஸ் கதை புதுமையாக இருக்கிறது, எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது இளைய தலைமுறையினரிடமிருந்து இப்படிப்பட்ட படங்கள் வருவதைப்பார்க்கும்பொழுது தமிழ் சினிமா இன்னும் வளமானதாக மாறுகிறது. எப்போதும் அதிகமாக பேசி நடிக்கும் சமுத்திரக்கனி இந்தபடத்தில் அதிகம் பேசாமல் மிக அழகாக நடித்திருக்கிற...
ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறிய நயன்தாரா படம்!

ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறிய நயன்தாரா படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறிய நயன்தாரா படம்! நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் இணைந்து தயாரித்துள்ள கூழாங்கல் திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கார் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் ஆஸ்கார் பட்டியலில் இடம்பெற்றுள்ள படங்கள் பட்டியல் ஆஸ்கார் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் கூழாங்கல் திரைப்படம் இடம்பெற்று இருந்தது. ஆஸ்கார் விருது வழங்கும் விழா அடுத்த வருடம் மார்ச் மாதம் 27-ந் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. ஆஸ்கார் விருதுக்கு 15 படங்கள் இறுதி செய்யப்பட்டு அதில் ஒரு படத்துக்கு சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருது வழங்கப்படும். இந்த நிலையில், ஆஸ்கார் வெளியிட்டுள்ள இறுதி பட்டியலில் கூழாங்கல் திரைப்படம் இடம்பெறவில்லை. இதன் மூலம் ஆஸ்கார் போட்டியிலிருந்து கூழாங்கல் திரைப்படம் வெளியேறி உள்ளது. இதுகுறித்...
சூர்யாவிற்கு நன்றி சொன்ன கார்த்தி!

சூர்யாவிற்கு நன்றி சொன்ன கார்த்தி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சூர்யாவிற்கு நன்றி சொன்ன கார்த்தி! நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் நல்ல படங்களை தயாரித்து வருகிறார். கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, “விருமன்” படத்தை சூர்யா தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் 20ம் தேதி மதுரையில் ஆரம்பமானது. மதுரை, தேனி மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் 60 நாட்களாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தற்போது இதன் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து கார்த்தி கூறும்போது, ‘மதுரை சுற்று வட்டாரத்தில் நல்ல திறமையுடன், சிறப்பான திட்டமிடலால், மொத்தமாக 60 நாட்கள் படப்பிடிப்பை இயக்குனர் முத்தையாவும், ஒளிப்பதிவாளர் செல்வகுமாரும் நடத்தி உள்ளார்கள். என்னுடன் ஜோடியாக நடித்த அதிதி ஷங்கருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. எதார்த்தமானவர், அவருடன் நடித்த நாள்கள் ...
வேலன் பட டிரைலர்!

வேலன் பட டிரைலர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வேலன் பட டிரைலர்! தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் “வேலன்” என்னும் காமெடி படத்தினை தயாரித்திருக்கிறார். கவின் இயக்கியுள்ள இப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான முகின் நாயகனாகவும், மீனாக்‌ஷி நாயகியாகவும் நடிக்கிறார்கள். மேலும் இவர்களுடன் பிரபு, சூரி, மரியா, தம்பி ராமையா, ஶ்ரீரஞ்சனி, சுஜாதா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரபல மலையாள மொழி இசையமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படம் டிசம்பர் 31ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இதன் டிரைலரை நடிகர் சிம்பு வெளியிட்டு இருக்கிறார். இதில் முகின், அப்பனோட பகை மட்டுமில்ல... வீரமும் பிள்ளைக்கு வந்து சேரும்... என்ற வசனம் ரசிகர்களை கவர்ந்து வரவேற்பு பெற்று வருகிறது....
கோமாளி இயக்குனரை சந்தித்த யுவன் சங்கர் ராஜா!

கோமாளி இயக்குனரை சந்தித்த யுவன் சங்கர் ராஜா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
கோமாளி இயக்குனரை சந்தித்த யுவன் சங்கர் ராஜா! ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் ‘கோமாளி’. இப்படத்தை இளம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார். ‘கோமாளி’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளார். இப்படத்தின் மூலம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், ஹீரோவாகவும் அறிமுகமாக உள்ளார். இந்நிலையில், இப்படத்தில் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது....
கையில் சுத்தியலுடன் நயன்தாரா… வைரலாகும் வீடியோ!

கையில் சுத்தியலுடன் நயன்தாரா… வைரலாகும் வீடியோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
கையில் சுத்தியலுடன் நயன்தாரா... வைரலாகும் வீடியோ! தரமணி படத்தின் மூலம் பிரபலமான வசந்த் ரவி, அடுத்ததாக நடித்துள்ள படம் ‘ராக்கி’. அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கி உள்ளார். இயக்குனர் பாரதிராஜாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தர்புகா சிவா இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இப்படம் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இதன் புரமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் நயன்தாரா சுத்தியலுடன் வந்து ‘காலம் ஒரு துரோகி...’ என்று வசனம் பேசுகிறார். இந்த புரமோ வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது....
சமுத்திரகனி ஹீரோ என்று தெரியாது – பிரபல நடிகை!

சமுத்திரகனி ஹீரோ என்று தெரியாது – பிரபல நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சமுத்திரகனி ஹீரோ என்று தெரியாது - பிரபல நடிகை! சமுத்திரக்கனி நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ரைட்டர். நீலம் புரடக்ஷன் சார்பில் பா ரஞ்சித் தயாரித்திருக்கும் இப்படத்தில் இனியா கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இப்படம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இப்படம் டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இனியா பேசும் போது, ரைட்டர் படத்தின் இயக்குனர் பிராங்க்ளின் என்னிடம் கதை சொல்லும் போது சிறப்பாக சொன்னார். ஆனால் அதில் என் கதாபாத்திரம் மட்டும் சொல்லவே இல்லை. உங்கள் கதாபாத்திரம் சஸ்பென்ஸ் என்று சொன்னார். இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்து இருக்கிறேன். ரைட்டர் படத்தில் சமுத்திரகனி ஹீரோ என்று தெரியாது. எதோ முக்கியமான கதாபாத்திரம் நடிக்கிறார் என்று நினைத்தேன். படப்பிடிப்பு தளத்தில் தான் தெரியும் அவர்தான் ஹீரோ என்று. தயாரிப்ப...
சோனி லைவ்வில் டிசம்பர் 24ல் வெளியாகும் மாநாடு

சோனி லைவ்வில் டிசம்பர் 24ல் வெளியாகும் மாநாடு

HOME SLIDER, MOVIES
  *சோனி லைவ்வில் டிசம்பர் 24ல் வெளியாகும் மாநாடு* சயின்ஸ் பிக்சன் கதையில், டைம் லூப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு படத்தை சோனி லைவ் நிறுவனம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி ஒளிபரப்ப ஆயத்தமாகி வருகிறது கடந்த நவ-25ஆம் தேதி வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்த மாநாடு படம் வெளியானது ஆக்ஷன், சஸ்பென்ஸ் மற்றும் காமெடி என சரிவிகித கலவையாக, டைம் லூப்பில் நகரும் சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகி இருந்த இந்த மாநாடு படத்தை சோனி லைவ் நிறுவனம் டிசம்பர் 24ஆம் தேதி வெளியிட தயாராகி வருகிறது.. நாயகன் அப்துல் காலிக் தொடர்ச்சியாக டைம் லூப்பில் மாட்டிகொண்ட பின்னர் வாழ்க்கையையே புரட்டிப்போடும் நிகழ்வுகளில் கொண்டுபோய் அவரை சிக்கவைகிறது.. நீதிக்கு புறம்பான செயல்களை செய்ய முற்படும்போதும் நம்முடைய சுயநலத்துக்காக அழிவுகரமான செயல்களில் ஈடுபடும்போதும் இந்த உ...