செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23
Shadow

நடிகர்கள்

நடிகர் விஷ்ணு விஷாலிற்கு கொரோனா தொற்று!

நடிகர் விஷ்ணு விஷாலிற்கு கொரோனா தொற்று!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
நடிகர் விஷ்ணு விஷாலிற்கு கொரோனா தொற்று! தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வரும் நிலையில் தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷாலிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாக விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள பதிவில், புத்தாண்டு பாசிடிவ் ரிசல்ட்டுடன் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், பயங்கரமான உடல்வலி, மூக்கடைப்பு, தொண்டை கரகரப்பு மற்றும் காய்ச்சலும் இருக்கிறது. விரைவில் மீண்டு வருவேன் என்று அவருடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிள்ளார்....
விக்ரம் வேதா ரீமேக் படத்தின் அடுத்த அறிவிப்பு!

விக்ரம் வேதா ரீமேக் படத்தின் அடுத்த அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விக்ரம் வேதா ரீமேக் படத்தின் அடுத்த அறிவிப்பு! புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இந்தி ரீமேக்கில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடித்து வருகின்றனர். தமிழில் விக்ரம் வேதா இயக்கிய புஷ்கர் - காயத்ரி இப்படத்தை இந்தியிலும் இயக்கி வருகின்றனர். ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இப்படம் குறித்து அறிவிப்புகள் வெளியாகி வந்தன. அதனை தொடர்ந்து இப்படத்தின் அறிவிப்பொன்றை இயக்குனர் அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். இப்படத்தின் வேதாவுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியிடப்படும் என ப...
குக் வித் கோமாளி அஷ்வின் படத்தின் அடுத்த அறிவிப்பு!

குக் வித் கோமாளி அஷ்வின் படத்தின் அடுத்த அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
குக் வித் கோமாளி அஷ்வின் படத்தின் அடுத்த அறிவிப்பு! குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசன் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் சினிமா வாய்ப்புகள் குவிந்து வந்தன. இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஷ்வினுக்கும் படமொன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்து அப்படத்திற்கு ‘என்ன சொல்ல போகிறாய்’ என தலைப்பு வைத்திருந்தனர். விளம்பர படங்களை இயக்கி பிரபலமான ஹரிஹரன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். அஷ்வினுக்கு ஜோடியாக நடிக்க தேஜூ அஸ்வினி மற்றும் அவந்திகா ஆகிய இரண்டு புதுமுக ஹீரோயின்கள் நடிக்கின்றனர். நடிகர் புகழ் காமெடியனாக நடித்த இப்படத்திற்கு விவேக் - மெர்வின் இசையமைக்க ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்து, டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இந்த படத்தை தயாரித்திருந்தனர். இந்நிலையில் நடிகர் அஸ்வின் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார், அதில் இறைவனை நம்பி மற்றும் உங்களின் அன...
மீண்டும் ஓடிடி-யில் தனுஷ் படம்

மீண்டும் ஓடிடி-யில் தனுஷ் படம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் தனுஷின் 43-வது படம் ‘மாறன்’. துருவங்கள் பதினாறு, மாஃபியா, நரகாசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்குகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். ’பேட்ட’, ‘மாஸ்டர்’ படங்களைத் தொடர்ந்து மாளவிகா மோகனன் நடிக்கும் மூன்றாவது தமிழ் படம் இதுவாகும். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தநிலையில்  இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அதிகரிப்பின் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்படுவதாக தகவல் பரவி வருகிறது.  இதற்கு முன்னதாக தனுஷின் ஜகமே தந்திரம், கலாட்டா கல்யாணம் ஆகிய  படங்கள் ஒடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது அதே போல சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்த அன்பறிவு படமும் சில மணி நேரங்களுக்கு முன் ஓடிடியில்த...
மீண்டும் பள்ளிக்கு சென்ற தனுஷ்… வைரலாகும் புகைப்படம்!

மீண்டும் பள்ளிக்கு சென்ற தனுஷ்… வைரலாகும் புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மீண்டும் பள்ளிக்கு சென்ற தனுஷ்... வைரலாகும் புகைப்படம்! கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்திருக்கும் தனுஷ், வாத்தி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கவுள்ள இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தனுஷ் வாத்தியாராக நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், பள்ளி மாணவராக தனுஷ் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது....
அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்த கார்த்தியின் படப்பிடிப்பு!

அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்த கார்த்தியின் படப்பிடிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்த கார்த்தியின் படப்பிடிப்பு! தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சுல்தான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக ஒரு நல்ல படமாக பேசப்பட்டது. இதனை தொடர்ந்து இயக்குனர் மணி ரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும், பி.எஸ். மித்ரன் இயக்கும் சர்தார் படத்திலும், முத்தையா இயக்கும் விருமன் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.இதில் பொன்னியின் செல்வன்,விருமன் படங்களின்  படப்பிடிப்பை கார்த்தி நிறைவு செய்துள்ளார். சர்தார் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை கார்த்தி நிறைவு செய்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை கார்த்தி தொடங்கியுள்ளார் என்ற தகவலை இயக்குனர் பி.எஸ். மித்ரன் அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு வீடியோவுடன் பகிர்ந்துள்ளார்....
ஜெயம்ரவி ஜோடியாக தான்யா!

ஜெயம்ரவி ஜோடியாக தான்யா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  நடிகர் ஜெயம்ரவி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை 'பூலோகம்' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக 'ஜே.ஆர் 28' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆக்சன் திரில்லர் கதையாக உருவாகும் இந்த திரைப்படத்தில ஜெயம்ரவி கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெயம்ரவி இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருக்கின்றனர். ஏற்கெனவே, நடிகை பிரியா பவானி சங்கர் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கருப்பன் திரைப்படத்தில் நடித்த தான்யா ரவிச்சந்திரனும் இந்த திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சாம்  சி.எஸ் இசையமைக்கிறார். விவேக் ஒளிப்பதிவு செய்கிறா...
கொரோனா பாதிப்பு… வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட பிரபல நடிகர்!

கொரோனா பாதிப்பு… வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட பிரபல நடிகர்!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
  கொரோனா பாதிப்பு... வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட நடிகர் மகேஷ் பாபு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தற்போது துபாயில் இருக்கும் மகேஷ் பாபு, தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட தகவலை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். லேசான அறிகுறிகளுடன் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறி உள்ளார். மேலும், சமீபத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனே தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் என்றும் மகேஷ் பாபு கேட்டுக்கொண்டுள்ளார்.  ...
அஜீத்தின் வலிமை ரிலீஸ் தள்ளிப்போனது! ரசிகர்கள் ஏமாற்றம்!!

அஜீத்தின் வலிமை ரிலீஸ் தள்ளிப்போனது! ரசிகர்கள் ஏமாற்றம்!!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அஜீத்தின் வலிமை ரிலீஸ் தள்ளிப்போனது! ரசிகர்கள் ஏமாற்றம்!! அஜீத் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவான வலிமை பல ஆண்டுகளாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஒரு பேசு பொருளாக இருந்து வந்தது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கூட வலிமை அப்டேட் கேட்டு பேனர் பிடித்த வெறித்தனமான ரசிகர்களுக்கு விருந்தளிக்க வலிமை பொங்கல் விருந்தாக ரிலீஸ் ஆகும் என அறிவிகப்பட்டது. உற்சாக கொண்டாட்டத்தில் ரசிகர்கள் பட ரிலீசை எதிர் நோக்கி இருந்தனர். இந்த சூழலில் வைரஸ் பாதிப்பும், ஒமைக்ரான் பரவலும் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான மக்கள் வைரஸ் பாதிப்புக்குள்ளாவதால் கடும் கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. முதற்கட்டமாக திரையரங்குகளில் 50% பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இரவு நேர ஊரடங்காக இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை மக்கள் நடமாட ...
மகான் படத்தின் ரிலீஸ் அப்டேட்!

மகான் படத்தின் ரிலீஸ் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மகான் படத்தின் ரிலீஸ் அப்டேட்! கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வெளிவரவிருக்கும் படம் 'மகான்'. விக்ரமும் அவருடைய மகனும் இணைந்து நடித்திருப்பதால் படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது. இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது இறுதிக்கட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இத்திரைப்படம் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்...