வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

சினி நிகழ்வுகள்

நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த நயன்தாரா பட இயக்குநர்!

நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த நயன்தாரா பட இயக்குநர்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  பிரபல திரைப்பட இயக்குநர் அஸ்வின் சரவணனுக்கும், எழுத்தாளரும் அவரது நீண்ட நாள் காதலியுமான காவ்யா ராம்குமாருக்கும்  பாண்டிச்சேரியில் திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ’பேனா மற்றும் காகிதத்தில் தொடங்கி, கவிதையில் முடிந்தது... காவ்யா ராம்குமார், ஒவ்வொரு முறையும் என்னுள் எழுந்த புயலை விரட்டியதற்கு நன்றி. உங்களுடன், குறிப்பாக மூன்றாவது அலையின் போது இதைச் செய்வது ஒரு சாகசமாகும்’ எனக் குறிப்பிட்டு தனது திருமண படங்களை பகிர்ந்திருக்கிறார் அஸ்வின்.   https://twitter.com/Ashwin_saravana/status/1487875757796106240?s=20&t=uUcYpym44McN11Ty6qBAsg     அஸ்வின் சரவணன் நயன்தாரா நடித்த 'மாயா' (2015) என்ற திகில் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இது பிளாக்பஸ்டர் வெற்றி பெற்...
1.15 கோடி மதிப்பிலான சொகுசு காரை இயக்குநருக்கு பரிசளித்த தயாரிப்பாளர்!

1.15 கோடி மதிப்பிலான சொகுசு காரை இயக்குநருக்கு பரிசளித்த தயாரிப்பாளர்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
தயாரிப்பாளர் சத்திய நாராயண கொனரு இயக்குனர் ரமேஷ் வர்மாவுக்கு சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளார். பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி ரவி தேஜா நடித்த கிலாடி திரைப்படம் வெளியாகிறது. தெலுங்கில் தயாராகியிருக்கும் இந்தத் திரைப்படத்தை ரமேஷ் வர்மா இயக்கியிருக்கிறார். ரவி தேஜாவுடன் டிம்பிள் கயாதி, அர்ஜுன் சர்ஜா, உன்னி முகுந்தன், மீனாட்சி சவுத்ரி ஆகியோரும் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் திரைக்கு வரும் முன்பே படத்தின் தயாரிப்பாளர் சத்திய நாராயண கொனரு இயக்குனர் ரமேஷ் வர்மாவுக்கு சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளார். சில லட்சங்கள் பெறுமானமுள்ள காரையே இதுவரை இயக்குனர்களுக்கு பரிசளித்து வந்தனர். ஆனால் முதல் முறையாக சத்யநாராயண கொனரு ரூபாய் 1.15 கோடி மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் காரை இயக்குனர் ரமேஷ் வர்மாவுக்கு பரிசளித்து தெலுங்கு திரையுலகை ஆச்சரியப்பட வைத்துள்ளார். பட...
ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    இந்திய சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் டாப் இயக்குனராக இருப்பவர் ராஜமவுலி. இவர் இயக்கிய பாகுபலி படத்திற்கு பின்னர், தெலுங்கு சினிமாவின் புகழ் உலகளவில் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியது. கடைசியாக ராஜமவுலியின் இயக்கத்தில் பாகுபலி 2 திரைப்படம் 2017-ல் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. இதற்கு பின்னர் ராஜமவுலி என்ன படத்தை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு இந்தியா முழுவதும் சினிமா ரசிகர்களிடையே காணப்பட்டது.   இதன்பின்னர், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து படம் இயக்கப் போவதாக ராஜமவுலி அறிவிக்க, பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சுமார் 4 ஆண்டுகால கடும் உழைப்புக்கு பின்னர் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் ஜனவரி 7ம் தேத...
மீண்டும் இணையும் சிம்பு-எஸ்.ஜே.சூர்யா!

மீண்டும் இணையும் சிம்பு-எஸ்.ஜே.சூர்யா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சிம்பு-எஸ்.ஜே.சூர்யா இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சிம்பு படத்திற்கு கிடைத்த வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். இதில் நடித்த எஸ்.ஜே.சூர்யா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணையபோவதாக சினிமா வட்டாரங்கள் முணுமுணுத்து வருகின்றனர். கடந்த 2019ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் டிரைவிங் லைசென்ஸ். இந்த படத்தில் பிருத்விராஜ் மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதனை தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் பரவுகிறது. இந்த ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளதாக தெரிகிறது. இப்படத்தில் மீண்டும் சிம்பு-எஸ்...
வெளியான மகான் பட டீசர்!

வெளியான மகான் பட டீசர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா போன்ற பல நடிகர் பட்டாளம் நடித்திருக்கும் படம் மகான். விக்ரமும் அவருடைய மகன் துருவும் இணைந்து நடித்திருப்பதாலே படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது. இப்படத்தை பீசா, ஜிகர்தண்டா, பேட்ட போன்ற பல படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து படத்தின் அறிவிப்புகள் தொடர்சியாக வெளியாகின. இந்த திரைப்படம் பிப்ரவரி 10-ஆம் தேதி நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் மகான் படத்தின் டீசரை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டிருக்கிறார். பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படத்தின் டீசரை சமூக வலைத்தளங்களி...
நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் இணையும் பிக்பாஸ் பிரபலம்!

நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் இணையும் பிக்பாஸ் பிரபலம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இதில் வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் 'குக் வித் கோமாளி' புகழ் சிவாங்கி, 'டாக்டர்' பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் இப்படத்தை தயாரிக்கிறார். முன்னதாக இப்படத்தில் பிரியா பவானிசங்கர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், கால்ஷீட் பிரச்சனைகளால் இவர் அதில் இணையவில்லை எனவும் பிரியாவுக்குப் பதிலாக பிக்பாஸ் சீசன் 4-இல் இடம்பெற்ற ஷிவானி நாராயணன் இணையவுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும் "ஷிவானியின் கதாப்பாத்திரம் மிக முக்கியமானதாக இருக்கும் எனவும் படத்தில் வடிவேலுடன் நடனமாடுவதையும் ...
டான் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்த சிவகார்த்திகேயன்!

டான் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்த சிவகார்த்திகேயன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ரசிகர்கள் இப்படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காத்துகொண்டிருந்தனர். இந்நிலையில், டான் படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் சிவகார்திகேயன் அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் அறிவித்திருக்கிறார். அதன் படி டான் திரைப்படம் வருகின்ற மார்ச் மாதம் 25-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது....
இயக்குனர் பாரதிராஜாவுக்கு கொரோனா தொற்று!

இயக்குனர் பாரதிராஜாவுக்கு கொரோனா தொற்று!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டை கடுமையாக பாதித்து வருகிறது. சமீப காலங்களில் பல பிரபலங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பாரதிராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இசையமைப்பாளர் இளையராஜா தொலைப்பேசி மூலம் பாரதிராஜாவிடம் நலம் விசாரித்திருக்கிறார். பாரதிராஜா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தொலைப்பேசி வாயிலாக பேசி அவரை உற்சாகப் படுத்தியிருக்கிறார் இளையராஜா. இன்று பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பாரதிராஜாவுக்கு கொரோனா உருதியானதை இயக்குனர் சீனு ராமசாமி அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ...
பிக்பாஸ் அல்டிமேட்டில் உள்ளே நுழைந்திருக்கும் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் அல்டிமேட்டில் உள்ளே நுழைந்திருக்கும் போட்டியாளர்கள்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
பிக்பாஸ் 5-வது சீசன் நிகழ்ச்சி சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்தது. இதில் ராஜு ஜெயமோகன் பிக்பாஸ் சீசன் 5-ன் டைட்டிலை வென்றார். இந்நிகழ்ச்சி முடியும் தினத்தில், பிக் பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்கள். அதன்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர்களை அறிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று (30.01.2022) தொடங்கப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் முதல் நாள் தொடக்க நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் உள்ளே 14 போட்டியாளர்கள் நுழைந்திருக்கிறார்கள். அதன் விவரம்: முதல் சீசனில் இருந்து ஜுலி, சினேகன், சுஜாவும், இரண்டாம் சீசனில் இருந்து தாடி பாலாஜி மற்றும் ஷாரிக்கும்,  மூன்றாம் சீசனில் இருந்து அபிராமி மற்றும் வனிதா விஜயகுமாரும், நான்காம் சீசனில் இருந்து அனிதா சம்பத், பாலாஜி மற்றும் சுரேஷும், ஐந்தாம் சீ...
வில்லன் சத்யாவின் டார்க் காமெடி “பன்றிக்கு நன்றி சொல்லி” ஓடிடி ரிலீஸ்!

வில்லன் சத்யாவின் டார்க் காமெடி “பன்றிக்கு நன்றி சொல்லி” ஓடிடி ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பாலா அரனின் இயக்கத்தில், அறிமுக நாயகன் நிஷாந்த் நடிக்கும் ஒரு டார்க் காமெடி படம் 'பன்றிக்கு நன்றி சொல்லி'. ஹெட் மீடியா ஒர்க்ஸ் சார்பாக விக்னேஷ் செல்வராஜ் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு விக்னேஷ் செல்வராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுரேன் விகாஷ் இசை அமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ராம்-சதீஷ் மேற்கொண்டுள்ளனர். இந்த படம் வரும் பிப்ரவரி 4ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது.   டார்க் காமெடியாக உருவாகியுள்ள இந்த படத்தில் சத்யா மெயின் வில்லனாக நடித்திருக்கிறார். படம் தொடங்கியதிலிருந்து முடியும்வரை காமெடி கலந்த ஆக்‌ஷன் புதுசாக இருக்கும்....