புதன்கிழமை, ஜனவரி 19
Shadow

நடிகைகள்

திரை உலக முப்பெரும் விழா: எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்தார் விஜயகாந்த்

திரை உலக முப்பெரும் விழா: எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்தார் விஜயகாந்த்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடார்பாளார் யூனியன் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, பிலிம்நியூஸ் ஆனந்தன் பி.ஆர்.ஓ. ஆன 60-வது ஆண்டு நிறைவு, பி.ஆர்.ஓ. யூனியன் பதிவு செய்யப்பட்ட 25 ஆண்டுகள் ஆகியவை முப்பெரும் விழாவாக சென்னையில் நடந்தது. இந்த விழாவில் எம்.ஜி.ஆருடன் பணியாற்றியவார்களுக்கு விருது வழங்கப்பட்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதி சார்பில் வி.பி.துரைசாமி, சவுகார் ஜானகி, வாணிஸ்ரீ, ஷீலா, ரேவதி, ரமாபிரபா, சச்சு, குட்டிபத்மினி, காஞ்னா, ஏ.சகுந்தலா, ஜெயசித்ரா, சாரதா, வெண்ணிறஆடை நிர்மலா, வைஜெயந்தி மாலா, கவிஞர் முத்துலிங்கம், ஆரூர்தாஸ், லதா உள்ளிட்டவர்களுக்கு பதக்கம் அணிவித்து நினைவு கேடயம் வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர். பல்கலை கழகத்தின் வேந்தர் ஏ.சி.சண்முகம் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலையை விஜயகாந்த் திறந்து வைத்தார். நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் முன்னிலை வகித்தார். ...
ரஜினிகாந்தின் ரசிகர் மன்றம் மக்கள் மன்றம் ஆக மாறியது..!

ரஜினிகாந்தின் ரசிகர் மன்றம் மக்கள் மன்றம் ஆக மாறியது..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  ரஜினிகாந்தின் ரசிகர் மன்றம் மக்கள் மன்றம் ஆக மாறியது..! நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் காத்திருந்த ரசிகர்களுக்கு கடந்த ஆண்டின் கடைசி நாள் மறக்க முடியாத நாளாக மாறிப்போனது. ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31-ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் அவரது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை ரசிகர்கள் முன்பு அறிவித்தார். ஆன்மீக அரசியலில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். ரஜினி தொடங்க உள்ள புதிய கட்சியின் பெயர் கொடி என்ன? என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தான் தொடங்க இருக்கும் கட்சியில் சேர நினைப்பவர்கள், மாற்றத்தை விரும்புபவர்கள் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்த ரஜினி அதற்காக புதிய இணையதள முகவரி ஒன்றையும் அறிமுகப்படுத்தினார். அந்த இணையதளம் மூலமாக ரஜினி மன்றத்தில் இதுவரையில் 50 லட்சம் பேர் இணைந்துள்ளதாக தகவல் வெளி...
தமிழில் வெளியாகும் பிரமாண்டமான விண்வெளி படம் டிக்டிக்டிக் இசை வெளியீடு..!

தமிழில் வெளியாகும் பிரமாண்டமான விண்வெளி படம் டிக்டிக்டிக் இசை வெளியீடு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நேமிசந்த் ஜபக் சார்பில் வி ஹித்தேஷ் ஜபக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘டிக் டிக் டிக்’ இந்தியாவின் முதல் ஸ்பேஸ் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சக்தி சௌந்தர்ராஜன். இதில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஜெயபிரகாஷ், வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், ரித்திகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.  இதற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார். இசையமைப்பாளர் டி இமானுக்கு இந்த படம் 100 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.   இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையிலுள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டனர்.    இவ்விழாவில் நடிகர்கள் ஜெயம் ரவி, அவரது மகன் ஆரவ் ரவி, ஜெயப்ரகாஷ், வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், அர்ஜுனன், பாலாஜி வேணுகோபால், நடிகைகள் நிவேதா பெத்துராஜ், ரித்திகா சீனிவாஸ், இசையமைப்ப...
அர்த்தமுள்ள படங்களை தருவதுதான் என் வாழ்க்கையை மாற்றிய ரசிகர்களுக்கு நான் செய்யும் கைம்மாறு – நயன்தாரா

அர்த்தமுள்ள படங்களை தருவதுதான் என் வாழ்க்கையை மாற்றிய ரசிகர்களுக்கு நான் செய்யும் கைம்மாறு – நயன்தாரா

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
அர்த்தமுள்ள படங்களை தருவதுதான் என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிய ரசிகர்களுக்கு நான் செய்யும் கைம்மாறு - நயன்தாரா நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த வருடம் டோரா, அறம், வேலைக்காரன் என 3 படங்கள் வெளிவந்துள்ளன. இந்த வருடம் இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோ கோ ஆகிய தமிழ்ப் படங்களும் இரு தெலுங்குப் படங்களும் வெளிவரவுள்ளன. இந்நிலையில் புத்தாண்டையொட்டி நடிகை நயன்தாரா கைப்பட எழுதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது:- என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிய ரசிகர்களுக்கு என் நன்றியும் புத்தாண்டு வாழ்த்துகளும். உங்களால் நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். தீவிரமான அன்பு இன்னும் இருப்பதை நீங்கள் உணர்த்தியுள்ளீர்கள். என் மீதான அன்பினால், வாழ்க்கை அழகானது என்பதை உணர்ந்துள்ளேன். அர்ப்பணிப்புடன் கடுமையான உழைப்பைச் செலுத்தி மற்ற விஷயங்களைக் கடவுளிடம் விட்டுவிட வேண்டும் என...
‘பிக் பாஸ்’ ஜூலி முதல் முறையாக கதாநாயகி அவதாரம்..!

‘பிக் பாஸ்’ ஜூலி முதல் முறையாக கதாநாயகி அவதாரம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
முதல் முறையாக கதாநாயகியாக அவதாரம் எடுக்கும் 'பிக் பாஸ்' ஜூலி.! ஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த போராட்டங்களில் மிக முக்கியமானது தமிழர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம். இந்த போராட்டத்தின் மூலம் அனைவரிடமும் 'வீர தமிழச்சி' என பெயர் பெற்றவர் ஜூலி என்கிற ஜூலியானா. பின்னர் இவர் பிரபல தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார். இதனையடுத்து ஜூலி பிரபல  தொலைக்காட்சி சேனல் ஒன்றில் தொகுப்பாளியாக அறிமுகமானார். இந்நிலையில் தற்போது ஜூலி 'K7 புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் ஜூலியும் 4 பேரும், தப்பாட்டம் போன்ற படங்களில் நடித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது குறித்து ஜூலியிடம் கே...
புத்தாண்டில் சிம்புவுடன் ஓவியா இணைந்திருக்கும்  ‘மரண மட்டை’ ஆல்பம்..!

புத்தாண்டில் சிம்புவுடன் ஓவியா இணைந்திருக்கும் ‘மரண மட்டை’ ஆல்பம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  சிம்பு நடிகர் மட்டுமில்லாமல், இசையமைப்பாளராக முத்திரை பதித்துள்ளார். இவரது இசையில் சந்தானம் நடிப்பில் வெளியான ‘சக்க போடு போடு ராஜா’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, சிம்பு அடுத்ததாக புத்தாண்டை முன்னிட்டு புதிய ஆல்பம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். ‘மரண மட்டை’ என்று பெயர் வைத்திருக்கும் இந்த ஆல்பத்தின் பாடலை நடிகை ஓவியா பாடி இருக்கிறார். இந்த பாடலை புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   இதற்குமுன் சிம்பு பல ஆல்பங்களையும் உருவாக்கி இருக்கிறார். அதில் சிம்பு மட்டுமே அதிகம் பாடியிருப்பார். இந்நிலையில் ஓவியாவுடன் இணைந்திருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ...
26 வெட்டுக்களுடன் பெயரை மாற்றி சென்சாரில் தப்பிப் பிழைத்த பத்மாவதி..!

26 வெட்டுக்களுடன் பெயரை மாற்றி சென்சாரில் தப்பிப் பிழைத்த பத்மாவதி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள வரலாற்றுப் படம் ‘பத்மாவதி’. ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை ஆண்ட ராஜவம்சத்தைச் சேர்ந்த ராணி பத்மாவதி வாழ்க்கை வரலாற்றைக் அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில், பத்மாவதியாக தீபிகா படுகோனும், ராணா ரத்தன் சிங்காக ஷாகித் கபூரும், அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். இப்படத்தில் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் திரித்து சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பாஜக, ராஜ்புத் சேனா, கர்னி சேனா போன்ற அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பத்மாவதி திரைப்படம் டிசம்பர் மாதம் முதல் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு தரப்பினர் இந்தப் படத்துக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கும்வரை பத்மாவதி படத்தை ...
கழிவறையின் முக்கியத்துவம் குறித்து  த்ரிஷா விழிப்புணர்வு

கழிவறையின் முக்கியத்துவம் குறித்து த்ரிஷா விழிப்புணர்வு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
சினிமாவைத் தாண்டி சமூகச் சேவையில் அக்கறை செலுத்திவரும் த்ரிஷா, கழிவறையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறார். திரையுலகில் பல படங்களில் பிஸியாக த்ரிஷா நடித்துவந்தாலும் சமூகச் சேவைகளிலும் நாட்டம் காட்டி வருகிறார். விலங்குகள் நலன், குழந்தைகள் கல்வி போன்றவற்றுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் த்ரிஷாவுக்கு, அங்கீகாரம் தரும் வகையில் ‘யுனிசெஃபின் செலிப்ரிடி அட்வகேட்’ என்ற பதவி சமீபத்தில் அவருக்கு வழங்கப்பட்டது. இந்தப் பதவியில் இருந்தபடி அவர் குழந்தைகள் கல்வி, குழந்தைத் திருமண முறை, குழந்தைத் தொழிலாளர் முறை, பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் போன்றவற்றுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார். குழந்தைகள், பெண்களுக்கான விழிப்புணர்வு மட்டுமல்லாது சமூக விழிப்புணர்விலும் ஈடுபட்டுவரும் த்ரிஷா, காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலி கிராமத்துக்கு வருகை புரிந்தார். அங...
2017 வைரலான செல்ஃபி படங்கள்

2017 வைரலான செல்ஃபி படங்கள்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  இயக்குனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலிக்கிறார்கள். ஏன், இருவருக்கும் ரகசியமாக கேரளாவில் திருமணம் நடந்துவிட்டதாகக் கூட கூறப்படுகிறது. இந்நிலையில் விக்னேஷ் நயன்தாராவுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார். விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கொண்டாடினார் நயன்தாரா. அப்போது அவர்கள் சேர்ந்து எடுத்த செல்ஃபி வெளியாகி வைரலானது.   ஸ்ருதி ஹாஸன் தனது காதலர் மைக்கேல் கோர்சேலுடன் சேர்ந்து நடிகர் ஆதவ் கண்ணதாசனின் திருமணத்திற்கு வந்தார். அவர்கள் ஜோடியாக வந்தபோது எடுத்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்தது. நடிகை சமந்தா, தனது காதலரான நாகசைதன்யாவை இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகின   ...
காலத்திற்கும் நினைவில் இருக்கும் அறம் கொடுத்த நயன்தாராவுக்கும் குழுவுக்கும் வாழ்த்துக்கள் – விக்னேஷ் சிவன்

காலத்திற்கும் நினைவில் இருக்கும் அறம் கொடுத்த நயன்தாராவுக்கும் குழுவுக்கும் வாழ்த்துக்கள் – விக்னேஷ் சிவன்

CINI NEWS, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
அறம் படம் ரிலீஸாகி 50 நாட்களாகியுள்ளது. கால காலத்திற்கும் நினைவில் இருக்கும் படத்தை கொடுத்த நயன்தாராவுக்கும் அறம் குழுவுக்கும் வாழ்த்துக்கள் -இயக்குனர் விக்னேஷ் சிவன் மக்கள் இதை காலகாலத்துக்கும் மறக்க மாட்டார்கள் என்று ட்வீட்டியுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா மாவட்ட கலெக்டர் மதிவதனியாக நடித்த படம் அறம். அறம் படத்திற்கு மக்கள் அமோக ஆதரவு கொடுத்து ஹிட்டாக்கிவிட்டனர். அறம் படம் ரிலீஸாகி 50 நாட்களாகியுள்ளது ஒரு நல்ல படம் வென்றால் அது எப்பொழுதுமே மக்களின் வெற்றி. கால காலத்திற்கும் நினைவில் இருக்கும் படத்தை கொடுத்த நயன்தாராவுக்கும் அறம் குழுவுக்கும் வாழ்த்துக்கள் என ட்வீட்யுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். ...