வியாழக்கிழமை, ஏப்ரல் 18
Shadow

NEWS

நூற்றாண்டு விழா- பாலகங்காதர திலகருக்கு பிரதமர் மோடி புகழாரம்!

நூற்றாண்டு விழா- பாலகங்காதர திலகருக்கு பிரதமர் மோடி புகழாரம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நூற்றாண்டு விழா- பாலகங்காதர திலகருக்கு பிரதமர் மோடி புகழாரம்! சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதர திலகரின் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரதமர் மோடி  அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நாட்டிற்கு செய்த பங்களிப்புகளை நினைவு கூர்ந்தார். இதுதொடர்பாக பிரதமர் மோடி  தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- பாலகங்காதர திலகரின் கல்வி மற்றும் பெண்கள் அதிகாரம் குறித்த கருத்துக்கள் தொடர்ந்து பலரை ஊக்குவித்து வந்தது. அவர் நடத்திய நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு பல்வேறு பணிகளை செய்துள்ளார். அவரது பிறந்தநாளையொட்டி அவரை நான் வணங்குகிறேன். தற்போதைய சூழ்நிலைகளில் அவருடைய எண்ணங்களும், கொள்கைகளும் மிகவும் பொருத்தமானவை. பொருளாதார ரீதியாக வளமான இந்தியா மற்றும் சமூக ரீதியாக முற்போக்கான பாரதத்தை உருவாக்க அவர் முயன்றார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்....
காஷ்மீர் எல்லையில் ஊடுருவிய வெடிகுண்டு டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது!

காஷ்மீர் எல்லையில் ஊடுருவிய வெடிகுண்டு டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
காஷ்மீர் எல்லையில் ஊடுருவிய வெடிகுண்டு டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது! காஷ்மீரில் சமீப காலமாக பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகமாக உள்ளது. அவர்களை பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து வேட்டையாடி வருகிறார்கள். இதனால் பல்வேறு சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் ஆத்திரம் அடைந்துள்ள பயங்கரவாதிகள் காஷ்மீரில் பெரிய அளவில் தாக்குதல்களை நடத்துவதற்கு முயற்சித்து வருகிறார்கள். இதுவரை இல்லாத புது முயற்சியாக டிரோன்கள் (ஆளில்லா குட்டி விமானங்கள்) மூலம் தாக்குதல் நடத்துவதை தொடங்கி இருக்கிறார்கள். கடந்த மாதம் 27-ந் தேதி ஜம்முவில் உள்ள விமான படைத்தளத்தில் அதிகாலையில் 2 டிரோன்கள் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அடுத்தடுத்து பறந்து வந்த இந்த டிரோன்களில் வெடிகுண்டுகளை பொருத்தி இருந்தார்கள். அது கீழே விழுந்து வெடித்தது. விமானப்படை ஊழியர்கள் 2 பேர் காயம் அடைந்தனர். இந்த வெடிகுண்டுகள் இர...
 நாடாளுமன்றத்தில் எலி புகுந்ததால்  அலறிய எம்.பி.க்கள்!

 நாடாளுமன்றத்தில் எலி புகுந்ததால் அலறிய எம்.பி.க்கள்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள்
  நாடாளுமன்றத்தில் முக்கிய விவாதம் நடந்துகொண்டிருந்த போது, எம்.பி.க்களை அங்கிருந்து அலறியடித்து ஓட வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.   ஸ்பெயின் நாட்டின் அந்தலுசியன் நாடாளுமன்ற கூட்டம் நேற்று நடந்து கொண்டிருந்தது. அப்போது, எம்.பி.க்கள் சுசானா டயஸை செனட்டராக நியமிக்க கோரும் ஒரு முக்கியமான பிரச்சினையில் வாக்களிக்க தயாராகிக் கொண்டு இருந்தனர். அந்த சமயத்தில், எலி ஒன்று எம்.பி.க்கள் காலில் ஏறி அங்கும் இங்கும்  ஓடியது. இதனைக் கண்ட பெண் எம்.பி.க்கள் கதறியபடி ஓடினர். சிலர் கத்தி கூச்சலிட்டவாறு வெளியே ஓடினர். இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற கூட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.   நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, ஒரு வழியாக எலி வெளியேற்றப்பட்டது. அதன் பிறகு, நாடாளுமன்ற நடவடிக்கைகள் இயல்பாகவே மீண்டும் தொடங்கின. எம்.பி.க்கள் மீண்டும் கூடி, அந்தலுசியன...
தமிழகத்தில் 3 லட்சம் பேர் புதிய ரே‌ஷன் கார்டு கேட்டு விண்ணப்பம்!

தமிழகத்தில் 3 லட்சம் பேர் புதிய ரே‌ஷன் கார்டு கேட்டு விண்ணப்பம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் 3 லட்சம் பேர் புதிய ரே‌ஷன் கார்டு கேட்டு விண்ணப்பம்! பொது வினியோக திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு ரே‌ஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ரே‌ஷன் கடைகளில் விலையில்லா அரிசி, கோதுமை மற்றும் சர்க்கரை, பருப்பு, பாமாயில் போன்றவை குறைந்த விலையில் விற்கப்படுகிறது. 2 கோடியே 5 லட்சம் பேர் இத்திட்டத்தின் கீழ் பயன் அடைந்து வருகிறார்கள். குடும்ப அட்டைகளுக்கு வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்கள் மட்டுமின்றி அரசின் சிறப்பு திட்டங்களின் கீழ் உதவித் தொகையும், பொங்கல் தொகுப்பும், வேட்டி- சேலை போன்றவையும் வழங்கப்படுகின்றன. ரே‌ஷன் கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. ஆனாலும் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் புதிய ரே‌ஷன் கார்டு...
கேரளாவில் துபாய் பதிவெண்ணில் ஹாயாக வலம் வந்து போலீசில் சிக்கிய ரோல்ஸ் ராய்ஸ் கார்!

கேரளாவில் துபாய் பதிவெண்ணில் ஹாயாக வலம் வந்து போலீசில் சிக்கிய ரோல்ஸ் ராய்ஸ் கார்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  கேரளாவில் துபாய் பதிவெண்ணில் ஹாயாக வலம் வந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்! தமிழ் நாட்டில் இப்பதான் நடிகர் விஜய் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்டு, அபராதம் வாங்கினார். அந்த விவகாரம் பெரிய சலசலப்பை ஏற்படுத்த விஜய் இப்ப உச்ச நீதிமன்றத்துக்கு மேல் முறையீட்டுக்கு போயிருக்கார். இந்த பரபரப்பு முடிவதற்குள் மகராஷ்டிராவில் ரோல்ஸ் ராய்ஸ் வைத்திருக்கும் பிரபல தொழிலதிபர் ஒருவர் மின்சார திருட்டில் ஈடுபட்டு சிக்கி அபராதம் கட்டினார். இந்த சூழலில், கேரளாவில் துபாய் பதிவெண்ணில் ஹாயாக  வலம் வந்த ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை மாநில மோட்டார் வாகன துறையைச் சேர்ந்த போலீஸார் சிறை பிடித்த சம்பவ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்திலேயே இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இங்குதான் துபாய் பதிவெண் கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு மோட்டார் வாகன துறை போலீஸ் ரூ.35 ...
ஆக்சிஜன் உற்பத்திக்கான காலக்கெடுவை ஸ்டெர்லைட் ஆலைக்கு நீட்டிக்க எதிர்ப்பு!

ஆக்சிஜன் உற்பத்திக்கான காலக்கெடுவை ஸ்டெர்லைட் ஆலைக்கு நீட்டிக்க எதிர்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஆக்சிஜன் உற்பத்திக்கான காலக்கெடுவை ஸ்டெர்லைட் ஆலைக்கு நீட்டிக்க எதிர்ப்பு!   ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை 31 ஆம் தேதியோடு நிறுத்த வேண்டும் என்றும் கால நீட்டிப்பு வழங்கக் கூடாது, என்றும் கூறி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எதிர்ப்பு குழுவினர் போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் இந்த ஆண்டு துவக்கத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தது.    இந்த நேரத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சார்பில் இலவசமாக ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து தருகிறோம் என்று, நீதிமன்றத்தில்  வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதில் ஏப்ரல் மாத கடைசி முதல் ஜூலை 30-ஆம் தேதி வரை ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்தது நீதிமன்றம் அளித்த காலக்கெடு இந்த மாதம் 30ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில்  கொரோனா மூன்றாவது அலையை...
ஐகோர்ட்டை இழிவுபடுத்தி பேசிய வழக்கில் முன்ஜாமீன் மனு தள்ளுபடியானதால்  தலைமறைவான எச்.ராஜா!?

ஐகோர்ட்டை இழிவுபடுத்தி பேசிய வழக்கில் முன்ஜாமீன் மனு தள்ளுபடியானதால் தலைமறைவான எச்.ராஜா!?

HOME SLIDER, NEWS, செய்திகள்
    ஐகோர்ட்டை இழிவுபடுத்தி பேசிய வழக்கில் முன்ஜாமீன் மனு தள்ளுபடியானதால்  தலை மறைவான எச்.ராஜா!     உயர்நீதிமன்றத்தை இழிவுபடுத்தி பேசிய வழக்கில் எச்.ராஜாவின் முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் போலீசாரிடம் ஐகோர்ட்டை எச்.ராஜா இழிவுபடுத்தி பேசினார்.   நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவில், ஹெச்.ராஜா-விற்கு கீழமை நீதிமன்றம் அனுப்பிய சம்மனை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சமர்ப்பிக்க உத்தரவு.   முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த 2018ஆம் ஆண்டு திருமயம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கோவில் நிகழ்ச்...
ரகசியமாக வைத்திருந்த புகைப்படம் லீக் ஆனதால் நடிகை நிதி அகர்வால் கோபம்!

ரகசியமாக வைத்திருந்த புகைப்படம் லீக் ஆனதால் நடிகை நிதி அகர்வால் கோபம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
ரகசியமாக வைத்திருந்த புகைப்படம் லீக் ஆனதால் நடிகை நிதி அகர்வால் கோபம்! ஜெயம் ரவி ஜோடியாக பூமி, சிம்புவின் ஈஸ்வரன் படங்களில் நடித்து பிரபலமானவர் நிதி அகர்வால். தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இந்த நிலையில் நிதி அகர்வால் ரகசியமாக வைத்திருந்த புகைப்படம் லீக் ஆனதால், அவர் கோபமடைந்துள்ளார். நடிகை நிதி அகர்வால் பள்ளியில் படித்தபோது நீச்சல் உடை அணிந்து எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. அவர் ரகசியமாக வைத்திருந்த இந்த புகைப்படங்களை யாரோ வலைத்தளத்தில் வெளியிட்டுவிட்டனர். அந்த புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள். இதனால் கோபமடைந்த நிதி அகர்வால், இதுகுறித்து கூறியதாவது, “என்னுடைய குறிப்பிட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பகிரப்படுவதை ...
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம்!

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம்! பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி போன்ற எதிர்க்கட்சிகள் களப்பணியாற்றத் தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி பூசல் நிலவி வருகிறது. பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங்கிற்கு எதிராக செயல்பட்டு வரும் நவ்ஜோத் சிங் சித்து ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை சந்தித்துப் பேசி இருந்தார். இதற்கிடையே, சமீபத்தில் டெல்லி சென்ற பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அமரீந்தர் சிங், பஞ்சாப்பை பொறுத்தவரை சோனியா எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்படுவோம் என தெரிவித்தார். இந்நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என அக்கட்சியின்...
பாராளுமன்றம் இன்று கூடுகிறது – முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்!

பாராளுமன்றம் இன்று கூடுகிறது – முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பாராளுமன்றம் இன்று கூடுகிறது - முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்! கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு 3 பாராளுமன்ற கூட்டத்தொடர்கள் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டன. குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தபோதிலும், 5 மாநில சட்டசபை தேர்தல்களை கருத்தில் கொண்டு பாதியிலேயே முடித்துக் கொள்ளப்பட்டது. இந்நிலையில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்டு 13-ம் தேதி வரை நடக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு, ரபேல் விமான ஒப்பந்த முறைகேடு புகாா் தொடா்பாக பிரான்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது, விவசாயிகள் போராட்டம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு  உள்ளிட்ட விவகாரங்களை எதிா்க்கட்சிகள் எழுப்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மழைக்கால கூட்டத் தொடரில் 40 மசோதாக்கள், 5 அவசர சட்டங்களை நிறைவேற்...