வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

politics

குட்கா ஊழலில் பாஜகவும் அதிமுகவும் ரகசிய உறவு வைத்துள்ளது – ஸ்டாலின் குற்றச்சாட்டு

குட்கா ஊழலில் பாஜகவும் அதிமுகவும் ரகசிய உறவு வைத்துள்ளது – ஸ்டாலின் குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    மக்களின் உயிரைக் குடிக்கும் குட்கா ஊழலில் அ.தி.மு.க. அரசுக்கும் - மத்திய பா.ஜ.க. அரசுக்கும் உள்ள இந்த ரகசியக் கூட்டணியின் முழு உருவமும், நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 40 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்ற - 250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடத்திய 'குட்கா பேர ஊழலில்' வருமான வரித்துறை தலைமைச் செயலாளரிடம் கொடுத்த கோப்புகள் காணவில்லை (மிஸ்ஸிங்)! குட்கா வழக்கை விசாரித்த லஞ்ச ஊழல் தடுப்புத்துறை கூடுதல் டி.ஜி.பி. மஞ்சுநாதா திடீரென்று மாற்றப்பட்டார். உயர் நீதிமன்ற ஆணையின்படி விஜிலென்ஸ் ஆணையராக நியமிக்கப்பட்டு - குட்கா வழக்கை விசாரித்து வந்த வி.கே. ஜெயக்கொடி ஐ.ஏ.எஸ். 5 மாதங்களில் தூக்கியடிக்கப்பட்டார். உயர் நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்...
ஊரடங்கு நீடிக்கும் போது சுங்க கட்டணத்தை உயர்த்துவது அப்பாவி மக்களின் ரத்தத்தை உறுஞ்சும் செயல் – சீமான் கடும் கண்டனம்

ஊரடங்கு நீடிக்கும் போது சுங்க கட்டணத்தை உயர்த்துவது அப்பாவி மக்களின் ரத்தத்தை உறுஞ்சும் செயல் – சீமான் கடும் கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் இந்தியாவில் சுங்கக் கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக் சொல்லப்பட்டு வரும் நிலையில் அதை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். சீமானின் அறிக்கை:- வரும் செப்டம்பர் 1 முதல் சுங்கச்சாவடிக் கட்டணங்கள் 10 விழுக்காடு அளவிற்கு உயர்த்தப்படலாம் என வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. கடந்த 5 மாதத்திற்கும் மேலாகத் தொடரும் ஊரடங்கினால் நாடு முழுமைக்கும் தொழில்கள், வேலைவாய்ப்பு என யாவும் பாதிக்கப்பட்டு மிகப்பெரும் பொருளாதார முடக்கமும், பணவீக்கமும் நிலவும் நிலையில் நடுத்தர வர்க்கத்தினரும், அடித்தட்டு உழைக்கும் மக்களும் பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்து, அத்தியாவசியத் தேவைகளுக்கே வழியற்று நிற்கையில், சுங்கச்சாவடிக் கட்டணம் உயர்த்தப்பட்டால் அது அவர்கள் தலை மீது விழும் பேரிடியாய் மாறும் என்பதில் ஐயமில்லை. ஏற்கனவே பெட்ரோல், டீசல் உ...
இ – பாஸ் முறை, தனிமைப்படுத்துதல், வீடுகளில் ஸ்டிக்கர் உள்ளிட்ட அனைத்து விதிகளையும் அடியோடு ரத்து செய்தது கர்நாடக அரசு!

இ – பாஸ் முறை, தனிமைப்படுத்துதல், வீடுகளில் ஸ்டிக்கர் உள்ளிட்ட அனைத்து விதிகளையும் அடியோடு ரத்து செய்தது கர்நாடக அரசு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  *இ - பாஸ் முறை, தனிமைப்படுத்துதல், வீடுகளில் ஸ்டிக்கர் உள்ளிட்ட அனைத்து விதிகளையும் அடியோடு ரத்து செய்தது கர்நாடக அரசு!!* பெங்களூரு: மத்திய அரசின் வழிக்காட்டுதலின்படி கர்நாடக மாநில அரசு இ-பாஸ் முறையை ரத்து செய்துள்ளது. மேலும் இடம்பெயர்வோரை தனிமைப்படுத்தும் நடவடிக்கையும் கைவிட்டுள்ளது. இது குறித்து, கர்நாடக மாநில அரசின் குடும்பம் மற்றும் சுகாதார துறை கூடுதல் தலைமை செயலாளர் ஜாவித் அக்தார் கூறியிருப்பதாவது: கர்நாடக மாநிலத்திற்கு வெளி மாநிலத்தில் இருந்து வருகிற நபர்கள் சேவா சிந்து என்ற செயலியில் பதிவு செய்து இ-பாஸ் பெற வேண்டும், விமானம் மற்றும் ரோடு வழியாக வந்தால் மருத்துவ பரிசோதனை அவசியம் செய்ய வேண்டும், மாநில எல்லைகளில் வாகனங்களை பரிசோதித்தல், இடம் பெயர்வோர் கையில் முத்திரை குத்தப்படுவது,தனிமைப்படுத்தபடுவோர் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்படுதல்,14 நாள் தனிமையில் இருப்பது உ...
வீட்டுக்குள் வயதானவர்களை வைத்து தகர ஷீட்டால் மூடி மனித உரிமை மீறிய பல்லாவரம் நகராட்சி!

வீட்டுக்குள் வயதானவர்களை வைத்து தகர ஷீட்டால் மூடி மனித உரிமை மீறிய பல்லாவரம் நகராட்சி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பல்லாவரம் நகராட்சி அதிகாரிகளின் அப்பட்டமான மனித உரிமை மீறல் !? குரோம்பேட்டை, புருஷோத்தமன் நகரில் அமைந்துள்ளது பாதல் அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவர் 14நாட்கள் கோரோனா சிகிச்சை பெற்று இன்று மதியம் நலமுடன் வீடுதிரும்பினார். இன்று மாலை பல்லாவரம் நகராட்சி ஆனையரின் உத்திரவின்படி அந்த வளாகத்தில் ஒரு பகுதி வாயிலை அடைக்க வந்தார்கள். அப்போது குடியிருப்போரின் போராட்டத்தினால் அந்த வீட்டின் வாயிலை மட்டும் அடைத்தார்கள். எல்லோரும் கெஞ்சியும் கெட்காத ஊழியர்கள் யாரும் வெளியே வரமுடியாது வகையில் அடைத்து விட்டார்கள். அந்த வீட்டில் சிரிது நாட்கள் முன் தான் ஒரு முதியவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்தது. இப்படி நகராட்சி இறக்கம் இன்றி நடந்தால் என்ன செய்வது. திடிரென்று அந்த முதியவருக்கு உடம்பு சரியில்லை என்றால் எப்படி மருத்துவ மனைக்கு செல்வார்கள். இந்த அரசாங்கம் மக்கள் நலனுக்காகவா அல்ல...
இப்போதைக்கு தியேட்டர்கள் திறக்க வாய்ப்புகள் இல்லை – தமிழக அரசு

இப்போதைக்கு தியேட்டர்கள் திறக்க வாய்ப்புகள் இல்லை – தமிழக அரசு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
இப்போதைக்கு தியேட்டர்கள் திறக்க வாய்ப்புகள் இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ கொரோனா ஊரடங்கிற்குப்பிறகு கடந்த மே மாதத்தில் இருந்து மத்திய அரசு படிப்படியாக தளர்வுகள் அளித்து வருகிறது. பெரும்பாலானவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 10-ந்தேதி உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. வரும் 1-ந்தேதியில் இருந்து மத்திய அரசு மெட்ரோ ரெயில்களை இயக்க அனுமதி வழங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தியேட்டர்களையும் திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில் ‘‘மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் தமிழகத்தில் தற்போதைக்கு தியேட்டர்களை திறக்கும் வாய்ப்பு இல்லை. கொரோனா வைரஸ் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர்தான் அதுகுறித்து முடிவு எடுக்கப்படும். குறைந்த ரசிகர்களுடன் தியேட்டர்கள் திற...
செப்டம்பரில் மெட்ரோ ரயில் இயங்க அனுமதி கிடைக்குமாம்!

செப்டம்பரில் மெட்ரோ ரயில் இயங்க அனுமதி கிடைக்குமாம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    செப்டம்பரில் மெட்ரோ ரயில் இயங்க அனுமதி கிடைக்குமாம்!   கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25-ந் தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த ஜூன் 1-ந் தேதியில் இருந்து மாதந்தோறும் ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. 4-ம் கட்ட தளர்வுகள், செப்டம்பர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. இந்த தளர்வுகளை இவ்வார இறுதியில் மத்திய அரசு அறிவிக்கிறது. இந்நிலையில், 4-ம் கட்ட தளர்வுகள் எப்படி இருக்கும் என்று மத்திய அரசு உயர் அதிகாரிகள் கூறியதாவது:- 4-ம் கட்ட தளர்வின்போது, நாடு முழுவதும் மெட்ரோ ரெயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், அந்தந்த மாநில அரசுகள், அங்குள்ள கொரோனா சூழ்நிலையை பொறுத்து, மெட்ரோ ரெயிலை இயக்குவது பற்றி இறுதி முடிவு எடுத்துக்கொள்ளலாம். பள்ளி, கல்லூரிகளை திறக்க இப்போதைக்கு அனுமதி அளிக்கப்படாத...
தமிழகத்திலும் இ-பாஸ் ரத்தா?! 29ம் தேதி முதல்வர் முக்கிய முடிவு!

தமிழகத்திலும் இ-பாஸ் ரத்தா?! 29ம் தேதி முதல்வர் முக்கிய முடிவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் கொரோனா பரவல் குறையாமல் நீடிக்கிறது. எனவே மக்களுக்கான பொது போக்குவரத்தை கடந்த மார்ச் 23-ந் தேதி முதல் அரசு தடை செய்துள்ளது. மிகவும் அவசியம் என்றால் மட்டும் இ-பாஸ் பெற்று வேறு மாவட்டங்களுக்கு செல்ல அரசு அனுமதி அளித்தது. ஆனாலும் இ-பாஸ் பெறுவதில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவசிய காரணங்களுக்கும் இ-பாஸ் மறுக்கப்படுகிறது என்றும், அதில் முறைகேடுகள் உள்ளதாகவும் புகார்கள் கூறப்பட்டன. எனவே இ-பாஸ் வழங்குவதில் தளர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள், வியாபாரிகள் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த உத்தரவு கடந்த 17-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. ...
வாகன ஆவணஙகளையும்,  டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்கவும் டிசம்பர் 31வரை கால அவகாசம்

வாகன ஆவணஙகளையும்,  டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்கவும் டிசம்பர் 31வரை கால அவகாசம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  வாகன ஆவணஙகளையும்,  டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்கவும் டிசம்பர் 31வரை கால அவகாசம் வழஙகி உள்ளது மத்திய அரசு!   கொரோனா பரவல் காரணமாக ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களை புதுப்பிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து,  பிப்ரவரி 1 ஆம் தேதிக்கு பிறகு காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களின் செல்லுபடி காலத்தை  மத்திய  அரசு நீட்டித்து வருகிறது.  செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களின் செல்லத்தக்க காலம் நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், வரும் டிசம்பர் 31 ஆம் தேதிவரை ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனங்களில் செல்லத்தக்க காலம் நீட்டிக்கப்படுவதாக மத்திய நெடுஞ்சாலைதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  கொரோனா  பெருந்தொற்று சூழல் இன்னும் முழுமையாக நீங்காததால், இதை கருத்தில் கொண்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது....
அதானி குழுமத்திற்கு விமான நிலையம் குத்தகை விடும் மத்திய அரசுக்கு எதிராக கேரளாவில் தீர்மானம்!

அதானி குழுமத்திற்கு விமான நிலையம் குத்தகை விடும் மத்திய அரசுக்கு எதிராக கேரளாவில் தீர்மானம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு குத்தகைக்கு விடும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து கேரள சட்டசபையில் தீர்மானம். திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்கள் அதானி குழுமத்திற்கு குத்தகைக்கு விடுவது தொடர்பாக மத்திய அரசு முடிவெடுத்தது. அந்த முடிவுக்கு எதிராக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு குத்தகைக்கு விட கூடாது என வலியுறுத்தி நேற்று கேரளா முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கட்சி அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் போராட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இன்று கேரள விமானநிலையங்களை, குத்தகைக்கு விடும் மத்திய அரசின் தீர்மானத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் கேரள முதல்வரால் முன் வைக்கப்பட்ட தீர்மானம் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது....