வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

அரசியல்

பஞ்சாப் தேர்தல் – காலை 9 மணி வரை 4.80 சதவீத வாக்குகள் பதிவு!

பஞ்சாப் தேர்தல் – காலை 9 மணி வரை 4.80 சதவீத வாக்குகள் பதிவு!

HOME SLIDER, NEWS, அரசியல், செய்திகள்
பஞ்சாப்பில் 117 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பஞ்சாப் அமைச்சர் பர்கத் சிங், ஜலந்தரின் மிதாபூரில் உள்ள வாக்கு சாவடியில் வாக்களித்தார். மற்றொரு அமைச்சர் பாரத் பூஷன் ஆஷு,  லூதியானா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான், மொஹாலியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி லூதியானாவில் உள்ள வாக்குச் சாவடியில் தமது வாக்கை பதிவு செய்தார்.  காலை 9 மணி நிலவரப்படி  பஞ்சாப்பில்  4.80 சதவீத வாக்குகள் பதிவாகின. உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெறும் மூன்றாம் கட்ட தேர்தலில் காலை 9 மணி வரை   8.15 சதவீத வாக்குகள் பதிவாகின. சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் சகோதரர் அபய் ராம் யாதவ் சைஃபாய் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடிய...
கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பகுதிகளில் தாக்குதல் – போர் பதற்றம் தீவிரம் அடைகிறது!

கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பகுதிகளில் தாக்குதல் – போர் பதற்றம் தீவிரம் அடைகிறது!

HOME SLIDER, NEWS, அரசியல், உலக செய்திகள், செய்திகள்
ரஷியா-உக்ரைன் நாடுகள் இடையே போர் பதற்றம் இருந்து வருகிறது. எல்லையில் ரஷியா ஒரு 1½ லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்களை குவித்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனும் எல்லையில் போர் பயிற்சி செய்து வருகிறது. இவ்விவகாரத்தில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆதரவாக உள்ளன. உக்ரைன் மீது ரஷியா எந்த நேரத்திலும் படையெடுக்கலாம் என்று அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் அதனை ரஷியா மறுத்துள்ளது. கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பஸ் மாகாணத்தில் ஒரு பகுதி அரசு கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி ரஷியா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலும் உள்ளன. இப்பகுதியில் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகள் ரஷியா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ளது. இங்கு சில நாட்களாக அரசு படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. மேலும் கிளர்ச்சியாளர்கள் பகுதிகள...
வேலூர் மாநகராட்சியில் 6 இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது!

வேலூர் மாநகராட்சியில் 6 இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
வேலூர் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வேலூர் மாநகராட்சி பகுதியில் 6 இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதாகியது. காட்பாடி அருப்புமேடு 12-வது வார்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 56 வது பூத்தில் எந்திரம் பழுதானது. வேலூர் கொசப்பேட்டை மடத்தெருவில் உள்ள அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 39 வது வார்டில் 195 வது பூத்தில் 2 வாக்குப்பதிவு எந்திரங்களும், 104 வது பூத்திலும் ஒரு வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. அதில் உடனடியாக 4 எந்திரங்கள் சரி செய்யப்பட்டன. 2 வாக்குச் சாவடிகளில்மாற்று எந்திரம் வைக்கப்பட்டது. இதையடுத்து 30 நிமிடங்கள் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது....
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதலே அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். தேனாம்பேட்டையில் உள்ள வாக்குப் பதிவு மையத்திற்கு வருகை தந்த  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார். அவருடன் வந்திருந்த துர்கா ஸ்டாலினும் தமது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது: வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்.  உள்ளாட்சி அமைப்புகள் மூலமே அரசின் திட்டங்களை செயல்படுத்த முடியும். ராணுவம் வரக் கூடிய அளவிற்கு கோவையில் எந்த சம்பவமும் நடை பெறவில்லை. தோல்வி பயம் காரணமாக அதிமுகவினர் போராட்டம்...
முல்லை பெரியாற்றில் கேரளா சார்பில் புதிய அணை: சட்டசபையில் ஆளுநர் உரை!

முல்லை பெரியாற்றில் கேரளா சார்பில் புதிய அணை: சட்டசபையில் ஆளுநர் உரை!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
கேரள மாநில சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆளுநர் ஆரிப் முகமது கான் உரை நிகழ்த்தினார். அப்போது, முல்லை பெரியாற்றில் கேரளா சார்பில் புதிய அணை கட்டப்படும். முல்லை பெரியாறு அணையில் 136 அடிக்கு மேல் நீர் மட்டம் உயர்த்தப்படாது என பேசினார். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை பலமுறை கேரள மாநில அரசு மீறிய நிலையில், தற்போது ஆளுநர் உரையில் புதிய அணை கட்டப்படும் என்பது இடம் பெற்றுள்ளது....
இந்தியாவின் இளம் வயது பெண் மேயரை கரம்பிடிக்கும் கேரள எம்.எல்.ஏ.

இந்தியாவின் இளம் வயது பெண் மேயரை கரம்பிடிக்கும் கேரள எம்.எல்.ஏ.

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
  கேரளாவில் கடந்த 2020 ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் திருவனந்தபுரத்தில் பெரும்பாலான பகுதிகளில் ஆளும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. அதனையடுத்து, திருவனந்தபுரத்தின் மேயராக 21 வயதேயான ஆர்யா ராஜேந்திரன் என்பவரை மேயராக அறிவித்தது மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இந்தியாவில் மிகக் குறைந்த வயதில் மேயரானவர் என்ற பெருமையை ஆர்யா ராஜேந்திரன் பெற்றார். அது திருவனந்தபுரம் போன்ற மாநிலத் தலைநகருக்கு மேயரானது கூடுதல் சிறப்பாக அமைந்தது. அவருடைய அப்பா ஒரு எலக்ட்ரீசியன். அம்மா எல்.ஐ.சி முகவராக இருக்கிறார். சாதாரண குடும்பப் பின்னணியிலிருந்து வந்து இந்த உயரத்தை அவர் எட்டியிருந்தார். தற்போது அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டுவருகிறார். தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்...
வன்னியர் நல வாரியம் செயல்படுத்த வேண்டும், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு – சி.என்.இராமமூர்த்தி தலைமையில் தீர்மானம்!

வன்னியர் நல வாரியம் செயல்படுத்த வேண்டும், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு – சி.என்.இராமமூர்த்தி தலைமையில் தீர்மானம்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
  வன்னியர் நல வாரியம் செயல்படுத்த வேண்டும், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு - சி.என்.இராமமூர்த்தி தலைமையில் தீர்மானம்! வன்னியர் கூட்டமைப்பு மற்றும் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக்கட்சியின் நிறுவன தலைவர் சி.என்.இராமமூர்த்தி அவர்களின் பிறந்த நாள் விழாவும், அமைப்பின் மாநில செயற்குழு கூட்டமும் சென்னையில் நடை பெற்றது. இந்த கூட்டத்திற்கு முனபாக தனது பிறந்த நாளை முன்னிட்டு தென்னமரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடை பெற்றது. முன்னதாக பிறந்த நாளை முன்னிட்டு தாயாரிடம் சி.என்.ஆர். ஆசி பெற்றார்.   சென்னை சாலிகிராமம் சாய் நகரில் உள்ள சேவா மந்திர் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கபபட்டது. பின்னர் வன்னியர் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் நிறுவனத் தலைவர் சமூகநீதிப் போராளி இடஒதுக்கீட்டு நாயகர் சி.என். இராமமூர்த்தி அவர்கள் தலைமையில் சென்னையில் உ...
வாட்ஸ்ஆப் மூலம் பொய்களை பரப்புகிறது பாஜக – தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ்

வாட்ஸ்ஆப் மூலம் பொய்களை பரப்புகிறது பாஜக – தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ்

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
  வாட்ஸ்ஆப் மூலம் பாஜக மக்கள் மத்தியில் பொய்களை பரப்பி வருவதாகவும், சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியதற்கான ஆதாரத்தை கேட்பதில் என்ன தவறு உள்ளது என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பேசியுள்ளார். ஐதராபாத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சந்திரசேகர ராவ் கூறியதாவது- விவசாயிகள் விரும்பாத வேளாண் புதிய சட்டங்களை எதற்காக பாஜக கொண்டு வந்தது? போராட்டத்தின்போது பலர் உயிரிழந்தனர். சட்டங்களை திரும்பப் பெற்ற பின்னர், பாஜக ஏன் விவசாயிகளிடத்தில் மன்னிப்பு கேட்கவில்லை? வாட்ஸ்ஆப் மூலம் பொய்களை பாஜக பரப்புகிறது. மத சார்ந்த நம்பிக்கைகள் மற்றொரு தரப்பினருக்கு எதிராக நாடு முழுவதும் தூண்டப்படுகிறது. இவை எல்லாவற்றையும் புறம் தள்ளிவிட்டு, நாம் முன்னோக்கி செல்ல வேண்டும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியதற்கான ஆதாரங்களை ராகுல் காந்தி கேட்கிறார். அதில் என்ன தவறு இருக்கிறது? நானும் கூட அதை...
பஞ்சாப் மாநில மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் -மோடி பிரசாரம்!

பஞ்சாப் மாநில மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் -மோடி பிரசாரம்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி முதல் முறையாக நேரடியாக பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். ஜலந்தரில் நடந்த பிரசார கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது:- பஞ்சாப் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும். மாநிலத்தில் வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தொடங்கும்.  மாநில மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் அவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக சாத்தியமான அனைத்து பணிகளையும் மேற்கொள்வோம் என உறுதியளிக்கிறேன். காங்கிரஸ் கொள்கைகள் பஞ்சாப் மாநிலத்தில் தொழில்களை அழித்துவிட்டது, வேலைவாய்ப்பை பாதித்துள்ளது. தங்களுக்குள் சண்டை போடுபவர்கள் நிலையான அரசாங்கத்தை தருவார்களா? இவ்வாறு அவர் பேசினார். 117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ், சுக...
முதல்வர் மு.க ஸ்டாலினை போனில் தொடர்பு கொண்டமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி!

முதல்வர் மு.க ஸ்டாலினை போனில் தொடர்பு கொண்டமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
  மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் அம்மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரை முடக்கியதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு பேசியதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் அம்மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரை முடக்கியதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரித்திருந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு பேசியதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் அரசிலமைப்பு சட்டத்தின் 174வது பிரிவு மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கு வங்க சட்டப்பேரவையை பிப்ரவரி 12ம் தேதி முதல் முடக்கி வைக்க உத்தரவிட்டார். இதனால், மேற்கு வங்க மாநில அரசியலில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. ...