வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

NEWS

டெல்டா வகை கொரோனாவை சமாளிக்க தடுப்பூசி-முகக்கவசம் அவசியம்: உலக சுகாதார அமைப்பு அறிவுரை!

டெல்டா வகை கொரோனாவை சமாளிக்க தடுப்பூசி-முகக்கவசம் அவசியம்: உலக சுகாதார அமைப்பு அறிவுரை!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
டெல்டா வகை கொரோனாவை சமாளிக்க தடுப்பூசி-முகக்கவசம் அவசியம்: உலக சுகாதார அமைப்பு அறிவுரை! கொரோனா வைரஸ், பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றம் அடைந்துள்ளது. இங்கிலாந்து, பிரேசில், தென்ஆப்பிரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து இருக்கிறது. இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரசுக்கு டெல்டா என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் டெல்டா வகை வைரஸ் மீண்டும் உருமாற்றம் அடைந்து டெல்டா பிளஸ் வைரஸ்களும் பரவி வருகிறது. இந்த டெல்டா வகை வைரஸ் 85 நாடுகளில் பரவி உள்ளதாக தெரிவித்துள்ளனர். டெல்டா வகை வைரஸ் மிகவும் வேகமாக பரவக்கூடியது. மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ராஸ் ஆதநோம் கூறியதாவது:- டெல்டா வகை கொரோனா 85 நாடுகளில் பரவி உள்ளது. இதுவரை மக்களிடையே பரவிய கொரோனா வைரஸ் வகைகளில் டெல்டா வகை உருமாறிய கொரோனாத...
தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சம்- 35 மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100!

தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சம்- 35 மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சம்- 35 மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100! பெட்ரோல்-டீசல் விலை நாடு முழுவதும் கடுமையாக உயர்ந்துள்ளது. நாட்டின் பெட்ரோலிய தேவைகளுக்கு இந்தியா இறக்குமதியையே நம்பியுள்ளது. அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக நமது நாடு உள்ளது. மொத்த தேவையில் 82 சதவீதம் அளவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டாக கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மே மாதம் கச்சா எண்ணெயின் விலை (ஒரு பேரல்) ரூ.2,800ஆக இருந்தது. இது தற்போது பல மடங்கு உயர்ந்து ரூ.5,021ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் மத்திய- மாநில அரசுகளும் பெட்ரோல்- டீசல் மீது வரியை விதிக்கின்றன. இந்த 2 காரணங்களாலும் பெட்ரோல்- டீசல் விலை மின்னல் வேகத்தில் உயர்ந்து இருக்கிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பே 100-ஐ கடந்து இர...
என்னுடைய பயோபிக்கில் அவர்தான் நடிக்க வேண்டும் – சுரேஷ் ரெய்னா!

என்னுடைய பயோபிக்கில் அவர்தான் நடிக்க வேண்டும் – சுரேஷ் ரெய்னா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, sports, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
என்னுடைய பயோபிக்கில் அவர்தான் நடிக்க வேண்டும் - சுரேஷ் ரெய்னா! தோனி, மேரி கோம், சாய்னா நேவால் என விளையாட்டு வீரர்களின் பயோபிக் படங்கள் எடுக்கப்பட்டு அவை வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. இதனால், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்று படங்களை எடுக்க இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளில் தொடர்ச்சியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, சமூக வலைத்தளத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பாக பேட்டியளித்தார். அப்போது, ’உங்களுடைய பயோபிக் எடுக்கப்பட்டால் யார் நடிக்கவேண்டும் என்று விருப்பப்படுகிறீர்கள்?’ என்று கேட்டதற்கு, “தென்னிந்தியாவில் என்னுடைய பயோபிக் எடுக்கப்பட்டால் என்னுடைய பேவரைட் ஹீரோ சூர்யாதான் நடிக்கவேண்டும். அவரால்தான், என்னுடைய கதாபாத்திரத்தைச் செய்யமுடியும்” என்று பதிலளித்துள்ளார்....
விளையாட்டு வீரர்களுக்கு தடுப்பூசி முகாம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

விளையாட்டு வீரர்களுக்கு தடுப்பூசி முகாம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
விளையாட்டு வீரர்களுக்கு தடுப்பூசி முகாம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!' சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று தொடங்கி வைத்தார். 18,000 வீரர்களில் 10 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் மீதி உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 6 விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்....
டெல்டா வைரஸ் 85 நாடுகளுக்கு பரவியது – ஆதிக்கம் செலுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

டெல்டா வைரஸ் 85 நாடுகளுக்கு பரவியது – ஆதிக்கம் செலுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
டெல்டா வைரஸ் 85 நாடுகளுக்கு பரவியது - ஆதிக்கம் செலுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை! சீனாவின் உகான் நகரத்தில் தோன்றிய கொரோனா வைரஸ், உருமாறி வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் என பல நாடுகளில் உருமாறிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட ‘பி.1.617.1’ வைரசுக்கு காப்பா என்றும், ‘பி.1.617.2’ வைரசுக்கு டெல்டா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ள ‘பி.1.1.7’ உருமாறிய வைரஸ் ஆல்பா, தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘பீ.1.351’ வைரஸ் பீட்டா, பிரேசில் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘பி.1’ வைரஸ் கமா, ‘பி.2 ’வைரஸ் ஜீட்டா என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ் எப்சிலான், அயோட்டா என அழைக்கப்படுகிறது. இந்த உருமாறிய வைரஸ்கள் பற்றிய வாராந்திர தொற்றுநோயியல் அறிக்கையை உலக சுக...
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? – முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? – முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? - முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை! தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பின் கொரோனா பரவலைத் தடுக்க கடந்த மாதம் முதல் ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின் காரணமாக தொற்று குறைந்த மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 28-ம் தேதி வரை அமலில் உள்ளது. தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், ஊரடங்கு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனையில் ஈடுபடுகிறார். ஊரடங்கை நீட்டிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து இன்று காலை 11 மணியளவில் மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத் துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு ம...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் – கதாயுதத்துடன் வாகை சூடிய நியூசிலாந்து!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் – கதாயுதத்துடன் வாகை சூடிய நியூசிலாந்து!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - கதாயுதத்துடன் வாகை சூடிய நியூசிலாந்து! இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 217 ரன்களும், நியூசிலாந்து 249 ரன்களும் எடுத்தன. 32 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்த நிலையில், 5வது நாள் ஆட்டம் நிறைவடைந்தது. புஜாரா 12 ரன்னுடனும், கோலி 8 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 6வது நாளான இன்று தொடர்ந்து ஆடிய இந்தியா, விரைவில் விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் கோலி 13 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். புஜாரா 15 ரன்கள், ரகானே 15 ரன்கள், ஜடேஜா 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மிகவும் பொறுமையாக ஆடிய ரிஷப் பண்ட், 41 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக...
இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம்!

இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம்! தமிழ்நாட்டின் 16-வது சட்டசபையின் முதல் கூட்டம் கலைவாணர் அரங்கில் கடந்த 21-ந்தேதி கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் மறைந்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்பட்டது. இது குறித்து சட்டசபையில் இடம்பெற்ற அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற விவாதம் நடந்தது. அவர்களின் கருத்துகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. ஆட்சி குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். 3 தினங்கள் சட்டசபையில் நடந்த விவாதத்துக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதில் அளித்து பேசினார். இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு அம...
மெட்ரோ ரெயிலில் 34 ஆயிரம் பேர் பயணம்!

மெட்ரோ ரெயிலில் 34 ஆயிரம் பேர் பயணம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மெட்ரோ ரெயிலில் 34 ஆயிரம் பேர் பயணம்! மெட்ரோ ரெயில் சேவை ஒரு மாதத்திற்கு பின்பு நேற்று முன்தினம் மீண்டும் தொடங்கியது. காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் 5 நிமிடத்திற்கு ஒரு சேவையும் மற்ற நேரங்களில் 10 நிமிடத்திற்கு ஒரு சேவையும் அளிக்கப்படுகிறது. கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். ரெயில் நிலையங்களில் குளிர்சாதன வசதி தடை செய்யப்பட்டுள்ளது. 2 வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகிறது. குறைந்த அளவிலேயே மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் அதிக அளவு பயணம் செய்தனர். முதல் நாளில் 29 ஆயிரம் பேர் பயணித்தனர். நேற்று இந்த எண்ணிக்கை 34 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கோயம்பேடு பஸ் நிலையம், சென்ட்ரல், விமான நிலையங்களில் அதிக பயணிகள் பயணம் செய்தனர். அதேபோல ஆலந்தூர், திரு...
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அதிமுக துணை நிற்கும் -சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி உறுதி!

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அதிமுக துணை நிற்கும் -சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி உறுதி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அதிமுக துணை நிற்கும் -சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி உறுதி! தமிழக சட்டசபையில் இன்று நீட் தேர்வு விவகாரம் எதிரொலித்தது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக திமுக, அதிமுக இடையே  விவாதம் நடைபெற்றது. நீட் தேர்வு நடக்குமா, நடக்காதா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வுக்கு திமுக ஒருபோதும் துணை நிற்காது, தேர்வில் இருந்து நிச்சயம் விலக்கு பெறுவோம் என்றார். ‘அதிமுக ஆட்சியில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட தீர்மானம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. டெல்லியில் பிரதமரை சந்தித்தபோது நீட் விவகாரம் குறித்து வலியுறுத்தினேன். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அதிமுகவும் துணை நிற்கவேண்டும்’ என கேட்டுக்கொண்டார். இதையடுத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்...