CINI NEWS

நெட்டில் திருட்டுத்தனமாக படம் பார்த்த விவகாரம்  எச்.ராஜாவுக்கு வெட்கமில்லையா  விஷால் ஆவேசம்..!

நெட்டில் திருட்டுத்தனமாக படம் பார்த்த விவகாரம் எச்.ராஜாவுக்கு வெட்கமில்லையா விஷால் ஆவேசம்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
நெட்டில் திருட்டுத்தனமாக படம் பார்த்த விவகாரம் எச்.ராஜாவுக்கு வெட்கமில்லையா விஷால் ஆவேசம்   ஒரு தேசியக் கட்சியின் தேசிய செயலாளர் பொறுப்பில் இருப்பவர் பொதுவெளியில் ‘நான் திருட்டுத்தனமாக இணையத்தில் புதிய படத்தை சட்டவிரோதமாக பார்த்தேன்’ என்று ஒப்புக்கொண்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. ஒருவேளை பைரசி எனப்படும் திருட்டுக் குற்றத்தை சட்டபூர்வமாகவே ஆக்கிவிட்டதா அரசுகள்? அதனால்தான் இந்த விஷயத்தில் சினிமா சிதைந்து அதை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அழியவிட்டு வேடிக்கை பார்க்கின்றனவா இந்த அரசுகள் என்ற சந்தேகம் எழாமல் இல்லை. எச். ராஜா அவர்களுக்கு... மக்கள் அறிந்த ஒரு தலைவராக இருந்துகொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி இப்படி பைரசியை ஆதரிக்கிறீர்கள்? உங்களை போன்ற ஒரு அரசியல்வாதி ஒரு படத்தின் திருட்டு பிரதியை பார்ப்பது என்பது ஒரு உண்மையான குடிமகனாகவும், கடின உழைப்பாளியாகவு
சமூக கருத்து சொல்ல எங்களுக்கும் அக்கறை உள்ளது – மெர்சல் விவகாரத்தில்   விஷால் கருத்து

சமூக கருத்து சொல்ல எங்களுக்கும் அக்கறை உள்ளது – மெர்சல் விவகாரத்தில் விஷால் கருத்து

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  மெர்சல் படம் மூலம் மக்களுக்கு சமூகக் கருத்துகளை சொன்ன நடிகர் விஜய், இயக்குநர் அட்லீ, தயாரிப்பாளர் முரளி ஆகியோருக்கு நன்றியும் பாராட்டுகளும்! மெர்சல் படத்தில் இடம்பெற்ற வசனங்களுக்கு பாஜகவை சேர்ந்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும் அந்த வசனங்களையும் காட்சிகளையும் நீக்க சொல்லி வற்புறுத்துவதும் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக விடப்பட்டிருக்கும் மிரட்டலாகவே பார்க்கிறேன். ஹாலிவுட் படங்களில் அமெரிக்க அதிபரையே கிண்டலடிக்கும் காட்சிகள் வைக்கப்படுகின்றன. அதுதான் ஜனநாயக சட்டம் அனைவருக்கும் வழங்கியிருக்கும் கருத்து சுதந்திரம். இங்கே எல்லோரையும் திருப்திப்படுத்துதல் என்பது இயலாத காரியம். ஒரு அரசியல் கட்சி ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிகளையும் வசனங்களையும் தீர்மானித்தால் பின்னர் சென்சார் போர்டு என்பது எதற்கு இருக்கிறது? சென்சார் செய்யப்பட்ட படத்தை மீண்டும் சென்சார் செய்ய சொல்ல யார
எம்.ஜி.ஆரின் பேரன் ஹீரோவாக நடிக்கும் ‘வாட்ஸ் அப்’..!

எம்.ஜி.ஆரின் பேரன் ஹீரோவாக நடிக்கும் ‘வாட்ஸ் அப்’..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  ஷஜினா ஷஜின் மூவிஸ் மற்றும் SPK Films ஆகிய நிறுவனங்கள் சார்பாக ஷாஜகான் & செல்வ குமார் இணைந்து தயாரிக்கும் படம் தான் ‘வாட்ஸ் அப்’.. இந்தப்படத்தில் எம்.ஜி.ஆரின் பேரன் வி.ராமச்சந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி அம்மாளின் தம்பி மகள் சுதா விஜயகுமாரின் மகன் தான் இந்த வி.ராமச்சந்திரன்.. இவருக்கு தன்னுடைய பெயரையே சூட்டியதும் கூட எம்.ஜி.ஆர் தான். இந்தப்படத்தில் ராமச்சந்திரனுக்கு ஜோடியாக பெங்களூரை சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தீப்தி நடிக்கிறார். இவர்கள் தவிர 'அஞ்சல்' மோகன் - ஜீவிதா, அர்ஜுன் – சாட்ரியா , சங்கர் விஜய் - ரக்ஷிதா, காதல் சுகுமார் - லாலித்தியா என இன்னும் நான்கு ஜோடிகள் நடிக்கின்றனர். இயக்குனர் ரஷீத் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். மேலும் JV இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த வருட துவக்கத்தில் தமிழகத்தை மட்ட
கவுதம் வாசுதேவமேனன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் கோலி சோடா 2

கவுதம் வாசுதேவமேனன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் கோலி சோடா 2

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகிவரும் 'கோலி சோடா 2' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இதில் ''ஸ்டைலிஷ் ' இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன் ஒரு சிறப்பு தோற்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதே தற்போதய சுவாரஸ்யமான செய்தி. இது குறித்து இப்படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் பேசுகையில் , '' இந்த கதையை நான் எழுதும் பொழுதே இக்கதாபாத்திரத்தில் கவுதம் வாசுதேவ மேனன் அவர்கள் நடித்தால் சிறப்பாகவும் பொருத்தமாகவும் இருக்கும் என நினைத்தேன். இது ஒரு கௌரவ கதாபாத்திரமாக இருந்தாலும் கதையை முன்னோக்கி கொண்டு செல்லும் கதாபாத்திரமாகும். இக்கதையையும் கதாபாத்திரத்தையும் கவுதம் வாசுதேவ மேனனிடம் நான் சொன்னபொழுது சந்தோஷமாக நடிக்க ஒப்புக்கொண்டார். அவரது நிஜ வாழ்க்கை இயல்பிற்கும் குணாதிசயங்களிற்கும் மிகவும் ஒத்துப்போகும் கதாபாத்திரம் இது என்பதாலேயே அவரை நான் அணுகினேன். அவர் நடிக்க ஒப
சட்டத்தை சாதகமாக்கி கல்லா கட்டும் உதயம் தியேட்டர்… கண்டு கொள்ளாத காவல்துறை..!

சட்டத்தை சாதகமாக்கி கல்லா கட்டும் உதயம் தியேட்டர்… கண்டு கொள்ளாத காவல்துறை..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  உதயம் தியேட்டரின் இன்றைய நிர்வாகிகளின் உள்ளடி வேலை! சினிமாவில் ஏற்கெனவே எக்கச்சக்கமான பிரச்னைகள் இருக்கிறது.அத்தனையையும் தாண்டிதான் வாரா வார்ம் சில பல திரைப்படங்கள் வெளியாகின்றன. அப்படி கோடி கணக்கில் உருவான பல படங்கள் வெளியாகி ரிலீஸான அடுத்த நாளே இணையத்தில் லீக்-காகி வருமானத்தை கெடுத்து விடுகிறது. அத்துடன் பெரும்பாலான தியேட்டர்கள் அன்றாடம் வசூலாகும் தொகையை உண்மையான கணக்குடன் தயாரிப்பாளர்களிடம் சேர்க்கும் போகும் குறைந்து வருகிறது. இது குறித்து நம்மிடம் பேசிக் கொண்டிருந்த ஒரு சீனியர் புரொடியூசர், “இப்போ பார்த்தீங்கண்ணா டாப் ஹீரோக்கள் பலரும் தயாரிப்பாளர்களாக மாறி வாராங்க.. அதை கவனிச்சீங்களா?அதுக்குக் காரணம் இங்கே தயாரிப்பாளர்கள் குறைந்துகொண்டே போவதுதான். இதே தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்த ஏ.வி.எம்., சூப்பர் குட் பிலிம்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்களது படத் தயாரிப்புகளை வெகுவா
கார்த்தி வெளியிட்ட கர்ஜனை வீடியோ போஸ்டர்..!

கார்த்தி வெளியிட்ட கர்ஜனை வீடியோ போஸ்டர்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பாக ஜோன்ஸ் தயாரித்து, சுந்தர் பாலு இயக்கத்தில் த்ரிஷா நடித்து வெளிவர இருக்கும் படம் 'கர்ஜனை' காதலிக்க மறுத்த பெண்ணை, தன் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்கிறார்கள். இதன் பின்னணியில் நடக்கும் கதை ஆக்‌ஷன் திரில்லராக படமாக்கப்பட்டுள்ளது.   உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் த்ரிஷா நடித்துள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டரை 'பருத்தி வீரன்' புகழ் கார்த்தி இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டார். https://youtu.be/dP0aIZcBRu0 இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. Motion Poster Link : https://www.youtube.com/watch?v=dP0aIZcBRu0  
மெர்சல் படத்தை வரவேற்று டீசர் வெளியிட்ட விசிறி படக்குழு..!

மெர்சல் படத்தை வரவேற்று டீசர் வெளியிட்ட விசிறி படக்குழு..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
“மெர்சல்” படத்தை இனிதே வரவேற்கிறது “விசிறி” படக்குழு. தலைமுறை தலைமுறையாக நடைபெறும் ரசிகர்களின் மோதல். ஆம்! தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்கள் “தியாகராஜ பாகவதர் – பி.யூ.சின்னப்பா” இவர்களின் ரசிகர்களிடம் ஏற்பட்ட மோதல்… “எம்.ஜி.ஆர். – சிவாஜி” , “ரஜினி – கமல்” என்று தொடர்ந்தது. இன்றைய சூப்பர் ஸ்டார்களாகிய “தல – தளபதி” ரசிர்களின் மோதலை மையக்கருவாக கொண்டு விரைவில் வெளிவரவிருக்கும் படம் “விசிறி” “J Sa Productions” மூலமாக A.ஜமால் சாகிப்-A.ஜாபர் சாதிக் பெருமையுடன் வழங்க… நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை கருவாக கொண்டு வெளிவந்த “வெண்நிலா வீடு” திரைப்படத்தின் இயக்குனர் “வெற்றி மகாலிங்கம்”, “மகாலிங்கம் புரொடக்‌ஷன்ஸ்” சார்பில் தயாரித்து இயக்கியிருக்கும் படம் “விசிறி” படத்தை வெளியிட தயாராக இருக்கும் படக்குழு... உலகத்தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் “இளைய
ரஜினி-ஷங்கர் கூட்டணியின் 2.0 பட ஆடியோ 27ம் தேதி துபாயில் பிரமாண்டமாக வெளியாகிறது..!

ரஜினி-ஷங்கர் கூட்டணியின் 2.0 பட ஆடியோ 27ம் தேதி துபாயில் பிரமாண்டமாக வெளியாகிறது..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
ரஜினி-ஷங்கர் கூட்டணியின் 2.0 பட ஆடியோ 27ம் தேதி துபாயில் பிரமாண்டமாக வெளியாகிறது..! ஷங்கர் இயக்கத்தில் மெஹா பட்ஜெட்டில் உருவாகி வரும் ரஜினியின் 2.0 படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் ஆடியோ ரிலீஸ் துபாயில் பிரமாண்டமான கலை நிகழ்ச்சியில் வெளியிடப்படுகிறது. வரும் 27ம் தேதி இந்த விழா துபாயில் நடக்கிறது. தமிழ், இந்தி முன்னணி நட்சத்திரங்கள் பலர் விழாவில் கலந்து கொள்கிறார்கள்.