வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

NEWS

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 14-ந் தேதி தொடக்கம்!

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 14-ந் தேதி தொடக்கம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 14-ந் தேதி தொடக்கம்! அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது. கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பல பெற்றோர் தனியார் பள்ளிகளில் சேர்ப்பதை தவிர்த்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் சேர்த்தனர். இதனால் சுமார் 5 லட்சம் மாணவர்கள் கடந்த ஆண்டு கூடுதலாக சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் கொரோனா 2-ம் அலை தமிழகத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஏப்ரல் மாதத்தில் நடைபெற வேண்டிய மாணவர் சேர்க்கை பாதிக்கப்பட்டது. பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதோடு அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தடைப்பட்டது. இந்த நிலையில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வருகிற 14-ந் தேதி ...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்லணையில் ஆய்வு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்லணையில் ஆய்வு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்லணையில் ஆய்வு! திருச்சி மாவட்டம் கல்லணையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தூர்வாரும் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். நாளை மேட்டூர் அணையை திறந்து வைக்க உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கல்லணையில் ஆய்வு செய்தார்....
உலகிலேயே முதல் நாடாக எல்சல்வடாரில், பிட்காயினுக்கு சட்ட அங்கீகாரம்!

உலகிலேயே முதல் நாடாக எல்சல்வடாரில், பிட்காயினுக்கு சட்ட அங்கீகாரம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
உலகிலேயே முதல் நாடாக எல்சல்வடாரில், பிட்காயினுக்கு சட்ட அங்கீகாரம்! சத்தோஷி நகமோட்டோ என்ற ஜப்பானியரால் உருவாக்கப்பட்ட மெய்நிகர் நாணயம்தான் பிட்காயின் ஆகும். இந்த நாணயத்தை நாம் கையிலோ, பையிலோ வைத்துக்கொண்டு பயன்படுத்த முடியாது. கணினியில் கண்களால் மட்டுமே பார்க்க முடியும். பரிமாற்றம் செய்ய இயலும். இந்த நாணயம் இதுவரை உலகில் எந்தவொரு நாட்டிலும் சட்டபூர்வ அங்கீகாரத்தைப் பெறவில்லை. இந்த பிட்காயினை சட்டபூர்வ பணமாக மத்திய அமெரிக்க நாடான எல்சல்வடார் ஆக்கி உள்ளது. அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 84 வாக்குகளில் 62 வாக்குகள் விழுந்தன. அதைத் தொடர்ந்து அந்த நாட்டின் அதிபர் நயீப் புக்கெல் ஒப்புதல் அளித்தார். இதுபற்றி அவர் கூறுகையில்,“எல்சல்வடார் அரசு ஒரு வரலாற்றை உருவாக்கி உள்ளது. இந்த நடவடிக்கையால் வெளிநாட்டில் வசிக்கிற நம் நாட்டவர்கள் வீட்டுக்கு பணம் அனுப்புவத...
தீங்கு செய்தால் வலுவான பதிலடி… ரஷியாவுக்கு ஜோ பைடன் கடும் எச்சரிக்கை!

தீங்கு செய்தால் வலுவான பதிலடி… ரஷியாவுக்கு ஜோ பைடன் கடும் எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
தீங்கு செய்தால் வலுவான பதிலடி... ரஷியாவுக்கு ஜோ பைடன் கடும் எச்சரிக்கை! அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த ஜனவரி 20-ந் தேதி பதவி ஏற்றார். அப்போது அந்த நாட்டை கொரோனா தொற்று ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. இப்போது அந்த தொற்றில் இருந்து அமெரிக்கா மீண்டுவந்து விட்டது. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது முதல் வெளிநாட்டுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். 8 நாள் ஐரோப்பிய பயணத்தில் முதல் கட்டமாக அவர் நேற்று இங்கிலாந்து சென்றார். மனைவி ஜில் பைடனுடன் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் அவர் சபோல்கில் உள்ள அமெரிக்க விமானப்படை தளமான மில்டன்ஹாலில் வந்து தரை இறங்கினார்.அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐரோப்பிய பயணத்தின் இறுதிகட்டமாக சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகருக்கு செல்லும் ஜோ பைடன், அங்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசுகிறார். பருவநிலை மாற்றம், உக்ரைனில் ரஷிய ராணுவ...
சர்வதேச டெஸ்ட் வீரர்கள் தரவரிசை – இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 5-ம் இடம்!

சர்வதேச டெஸ்ட் வீரர்கள் தரவரிசை – இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 5-ம் இடம்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
சர்வதேச டெஸ்ட் வீரர்கள் தரவரிசை - இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 5-ம் இடம்! டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில், பேட்ஸ்மேன்களில் இந்திய கேப்டன் விராட் கோலி 5- வது இடத்திலும், ரிஷப் பண்ட் மற்றும் ரோகித் சர்மா (747 புள்ளிகள்) கூட்டாக இணைந்து 6-வது இடத்திலும் நீடிக்கின்றனர். ஜூன் 18 முதல் நியூசிலாந்திற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கோலி இந்தியாவை வழிநடத்துவார். ஒரு இடத்தைப் பெற்ற பந்த் மற்றும் ரோகித் தலா மதிப்பீட்டு புள்ளிகளைப் பெற்றுள்ளனர். பந்துவீச்சாளர் தரவரிசையில் தமிழக வீரர் அஸ்வின் மட்டும் 2-வது இடத்தில் நீடித்து, டாப் 10 வரிசையில் இருக்கும் ஒரே இந்திய வீரர் ஆவார். அதேபோல் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா 2-வது இடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4-வது இடத்திலும் தொடர்ந்து நீடி...
தர்பூசணிகளை ராணுவத்துக்கு இலவசமாக வழங்கிய விவசாயி!

தர்பூசணிகளை ராணுவத்துக்கு இலவசமாக வழங்கிய விவசாயி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தர்பூசணிகளை ராணுவத்துக்கு இலவசமாக வழங்கிய விவசாயி! ஜார்கண்டை சேர்ந்த விவசாயி ரஞ்சன் குமார் மாடோ (வயது25). பட்டதாரியான இவர், விரும்பியபடி வேலை அமையாததால், 25 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்ய ஆரம்பித்தார். இவரது பண்ணைக்கு அருகில் இருந்து ராணுவ அதிகாரிகள், வீரர்கள் வந்து விளைபொருட்களை வாங்கி செல்வது உண்டு. ரஞ்சன் தற்போது 6 ஏக்கர் நிலத்தில் பயிரிட்ட தர்பூசணி பழங்களை அறுவடை செய்தார். ஆனால் ஊரடங்கு காரணமாக பழங்களை விற்பனை செய்ய முடியவில்லை. இந்த நிலையில் தேசத்திற்காக போராடும் ராணுவ வீரர்களுக்கு அந்த பழங்களை விவசாயி ரஞ்சன் இலவசமாக வழங்கினார். அவர் குறிப்பிட்ட அளவு பழங்களை ராணுவத்திற்கு இலவசமாக வழங்க, மீதி பழங்களை ராணுவ பிரிவினர், சந்தை விலையில் விவசாயியிடம் இருந்து விலைக்கு வாங்கிக்கொண்டனர்....
50 கோடி கொரோனா தடுப்பூசிகளை 92 நாடுகளுக்கு நன்கொடையாக அனுப்ப உள்ளோம் – ஜோ பைடன்!

50 கோடி கொரோனா தடுப்பூசிகளை 92 நாடுகளுக்கு நன்கொடையாக அனுப்ப உள்ளோம் – ஜோ பைடன்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
50 கோடி கொரோனா தடுப்பூசிகளை 92 நாடுகளுக்கு நன்கொடையாக அனுப்ப உள்ளோம் - ஜோ பைடன்! 50 கோடி பைசர் தடுப்பூசிகளை வாங்கி 92 நாடுகளுக்கு வழங்குவது குறித்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டு உள்ளார். இதுதொடர்பாக, வெள்ளை மாளிகையில் அதிபர் பைடன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: அமெரிக்கா 50 கோடி பைசர் தடுப்பூசிகளை வாங்கி அதை குறைந்த மற்றும் நடுத்தரத்துக்கும் குறைவான வருவாய் உள்ள நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம் என 92 நாடுகளுக்கு வழங்க உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை மூலம் பல மில்லியன் நபர்களின் உயிர்கள் காப்பாற்றப்படும் என தெரிவித்துள்ளார்....
பிக்பாஸ் சீசன் 5 எப்போது?

பிக்பாஸ் சீசன் 5 எப்போது?

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
பிக்பாஸ் சீசன் 5 எப்போது? தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தனர். வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நடத்தப்படும். ஆனால் கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் போடப்பட்டதால், பிக்பாஸ் 4 நிகழ்ச்சி திட்டமிட்டபடி ஜூன் மாதம் தொடங்கப்படவில்லை. பின்னர் அக்டோபர் மாதம் தொடங்கி இந்தாண்டு ஜனவரி 16-ந் தேதி வரை ‘பிக்பாஸ் 4’ நடைபெற்றது....
தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை!

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை! தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வருகிற 14-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தொற்று பரவல் தொடர்ந்து கூடுதலாகவே இருந்ததால் முழு ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்பட்டது. ஒருசில தளர்வுகள் மட்டும் அங்கு அறிவிக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு  முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உயர் அதிகாரிகளுடன்  ஊரடங்கு  குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க உயர் அதிகாரிகள் பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனா தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களுக்கு தளர்வுகள் இல்லாத ஊரடங்கு  அ...
ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வருமா?- மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை!

ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வருமா?- மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வருமா?- மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை! தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து கொரோனா வைரஸ்  2-வது அலை பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. கடந்த மாதம் 2-வது வாரத்திற்கு மேல் பாதிப்பு உச்சத்தை தொட்டது. 21-ந் தேதி அதிகபட்சமாக தினசரி பாதிப்பு 36 ஆயிரத்து 184ஆக இருந்தது. மேலும் பலி எண்ணிக்கையும் 467ஆக உயர்ந்தது. இதனால் தமிழ்நாட்டில் 24-ந்தேதி முதல் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு ஒரு வாரத்திற்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து பாதிப்பு 30 ஆயிரத்துக்கு மேல் இருந்ததால் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகு தொற்று தொடர்ந்து சரிந்து வந்ததால் கடந்த 7-ந்தேதி முதல் சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதன்படி கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்கள் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. க...