செவ்வாய்க்கிழமை, மே 24
Shadow

REVIEWS

பள்ளிப் பருவத்திலே விமர்சனம்

பள்ளிப் பருவத்திலே விமர்சனம்

REVIEWS, விமர்சனம்
கிராமத்தில் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியராக வருகிறார் கே.எஸ்.ரவிக்குமார். அதே பள்ளியில் படிக்கும் அவரது மகன் நந்தன் ராம், நாயகி வெண்பாவை காதலிக்கிறார். ஆனால் நந்தன் ராமின் காதலுக்கு வெண்பா எதிர்ப்பு தெரிவிக்கிறாள். ஒரு கட்டத்தில் நந்தன் ராம், வெண்பாவை காதலிப்பது வெண்பாவின் அப்பாவான பொன்வண்ணனுக்கு தெரிய வருகிறது. கே.எஸ்.ரவிக்குமார் மீதுள்ள மதிப்பினால், நந்தன் ராமை நேரில் அழைத்து காதல் வேண்டாம் என்று அறிவுரை கூறி, எச்சரித்து அனுப்புகிறார். ஆனால் பொன்வண்ணனின் பேச்சை பொறுட்படுத்தாத நந்தன் ராம் தொடர்ந்து வெண்பாவிடம் தனது காதலை வெளிப்படுத்தி வருகிறார். ஒரு கட்டத்தில் வெண்பாவின் கையை பிடித்து பேசுவதை பொன்வண்ணனும், வெண்பாவின் சித்தப்பா ஆர்.கே.சுரேஷும் பார்த்து விடுகின்றனர். இதையடுத்து இருவீட்டாருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. அதில் நந்தன் ராமை தான் காதலிக்கவில்லை என்று வெண்பா ...
இந்திரஜித் விமர்சனம்

இந்திரஜித் விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
  1400 வருடம் முன் சூரியனில் இருந்து விழுந்த மருத்துவ குணம் வாய்ந்த ஒரு அபூர்வ பொருளைத் தேடும் இந்திய தொல்லியல் துறையின் வீர தீரம் தான் கரு! பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக சூரியனிலிருந்து தெறித்துவரும் ஒரு சிறியதுகள் பூமியில் வந்து விழுகிறது.மனிதனுக்கு ஏற்படும், எப்பேர்பட்ட காயங்களையும், தீராத நோய்களையும் குணப்படுத்தும் சக்தி அந்த துகளுக்கு இருப்பதால் சித்தர்கள்அதை ஒரு ரகசிய இடத்தில் வைக்கிறார்கள். அவர்கள்காலத்திற்குப் பிறகு அந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்பது தெரியாமலேயே போய்விடுகிறது.இதை தொல்பொருள்ஆராய்ச்சியின்பேராசிரியராக இருக்கும் சச்சின்கேதகர் தேட ஆரம்பிக்கிறார். இவரிடம் உதவியாளராக வந்துசேருகிறார் இந்திரஜித். -கௌதம் கார்த்திக், அதேநேரத்தில் ,இந்திய தொல்லியல்துறையைச் சேர்ந்த அதிகாரிஒருவரும் அந்தப்பொருளைத்தேடுகிறார். இறுதியில் அந்த சக்தி வாய்ந்தசிறு துகள் யாரிடம் கிடைத...
தீரன் அதிகாரம் ஒன்று விமர்சனம்

தீரன் அதிகாரம் ஒன்று விமர்சனம்

REVIEWS, விமர்சனம்
  1995 முதல் 2005 வரை, போலீசுக்கே மிகப் பெரிய சவாலாக இருந்த பவாரியா வழக்கின் மறு உருவாக்கம் இது. வடநாட்டில் இருந்து தமிழ்நாட்டுக்கு லாரி லோடு கொண்டு வருபவர்களில் ஒரு குழுவினர், போகும்போது சென்னை புறநகரில் தனித்து இருக்கும் வீடுகளில் புகுந்து, அங்கிருப்பவர்களை கொடூரமாகத் தாக்கி கொன்றுவிட்டு, நகைகளைக் கொள்ளையடித்துச் செல்கிறார்கள். போலீசுக்கே சவாலாக இருக்கும் இந்தக் குற்றங்களுக்கு எந்த தடயமும் கிடைப்பதில்லை. சம்பவங்களும், சாவும் அதிகரிக்கிறது. இளம் தலைமுறை காவல்துறை அதிகாரி தீரன் திருமாறன் (கார்த்தி), இந்த குற்றவழக்கைக் கையிலெடுத்து துப்பறிகிறார். ஒரு சிறிய துப்பு கிடைக்கிறது. அதைப் பின்தொடர்ந்து வடநாடு சுற்றி, ராஜஸ்தான் பாலைவனம் வரை தன் டீமுடன் பயணப்படுகிறார். போலீசுக்கு அரசால் வழங்கப்படும் சிறு உதவி, சென்ற இடமெல்லாம் கிடைக்கும் அவமானம், அலட்சியம், எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு...
இப்படை வெல்லும் விமர்சனம்

இப்படை வெல்லும் விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
இப்படை_வெல்லும் உதயநிதி ஸ்டாலினின் திரைப்பயணத்தில் புதுசாக இருக்கும் படம். அதிரடிகள் இல்லாத ஆக்‌ஷன் படம்.  கதையில் தான் யார் என்பதை  முழுமையாய் உள்வாங்கி நடித்திருக்கிறார் உதயநிதி. கதை வழக்கம் போல தங்கை காதலுக்கு குறுக்கே நிற்கும் போலீஸ் அண்ணன். சூழல் காரணமாக தீவிரவாதியாக சித்தரிக்கப்படும் காதலன் இவற்றை எதிர் கொள்ளும் நாயகி. கதை பெரிதாக இல்லாவிட்டாலும் திரைக்கதையை நம்பி களமிறங்கி புதுசாக முயற்சித்து வெற்றி பெற்று இருக்கிறார் கவுரவ்.  இயக்குனரின் முதல் படம் தூங்கா நகரம், அடுத்து சிகரம்தொடு  படங்களை தொடர்நது  இப்படை வெல்லும் 3வது  படம். முதலிரண்டு போலவே புதுசாக முயற்சித்து ஹாட்ரிக் வெற்றி பெற்று இருக்கிறார் இயக்குனர் கவுரவ்.  நாயகனுக்கு இணையாக படம் முழுவதும் வரும் வேடம் நாயகி மஞ்சிமா மோகனுக்கு... அதை அருமையாக செய்திருக்கிறார். அழகான நாயகியை கேமராவும் அழகாகவே கா...
இயக்குனரின் ஆழ்மன அழுக்கை வெளிப்படுத்தும் “ஸ்பைடர்” –  விமர்சனம் கோடங்கி

இயக்குனரின் ஆழ்மன அழுக்கை வெளிப்படுத்தும் “ஸ்பைடர்” – விமர்சனம் கோடங்கி

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
இயக்குனரின் ஆழ்மன அழுக்கை வெளிப்படுத்தும் "ஸ்பைடர்" - விமர்சனம் கோடங்கி   மித மிஞ்சிய பணம், தகுதிக்கு மீறிய செல்வாக்கு, தான் என்ற ஆணவம் இவை எல்லாம் எப்போது ஒரு நல்ல படைப்பாளிக்குள் நுழைகிறதோ அப்போது அவன் கற்பனைகள் பயன்படாமல் ... திறமைகள் பயன்படுத்தப் படாமல் பாழடைந்து கிடக்கும் இடங்களில் கிழிந்து தொங்கும் சிலந்தி வலை போல ஆகிவிடும். அப்படி ஒரு நிலையில்தான் இருக்கிறது ஏ.ஆர்.முருகதாசின் "ஸ்பைடர்".. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் இதுவரை இப்படி ஒரு கேவலமான படத்தை கொடுத்தது இல்லை. எந்த ஒரு படைப்பும் இயக்குனரின் திறமையை காட்டும் கண்ணாடி என்பார்கள். ஸ்பைடர் கண்ணாடி காட்டும் திறமை ஆழ் மன அழுக்கும், ஆணவமும், எதை எடுத்தாலும் ரசிக்க ஒரு கூட்டம், கை தட்ட ஒரு கூட்டம், பணத்தை கோடிகளில் கொட்ட ஒரு கூட்டம் என்ற மமதையை வெளிப்படுத்துகிறது. ஸ்பைடர் படு தோல்விக்கும், மோசமான விமர்சனம் வ...
ஹர ஹர மகாதேவகி விமர்சனம்

ஹர ஹர மகாதேவகி விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
  மரணத்திற்கு பின் இறுதி காரியங்களுக்கு தேவை படும் வண்டி, பூ அலங்காரம், மேளதாள ஆட்களை அனுப்பும் தொழில் செய்கிறவர் கதாநாயகன். பொறியியல் படித்தாலும் இந்த தொழிலை விரும்பி செய்கிறார். கோயில் குளத்தில் நீராடிவிட்டு துண்டுடன் கரையேறும் கதாநாயகனை அதே குளத்தில் தோஷ நிவர்த்திக்கு மூழ்கி எழும் கதாநாயகி நிக்கி கல்ராணி பார்க்கக் கூடாத கோலத்தில் பார்த்து "கடவுளே... கடவுளே... கடவுளே" என கத்துகிறார். அதன் பிறகும் ஒரு முறை பாத்ரூமிலும், இன்னொரு முறை தெருவிலும் ஏடாகூடமாக பார்க்க இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. அதுவே காதலாகவும் மாறி கடைசியாக காதலும் பிரேக் அப் ஆகிவிடுகிறது. காதலித்த போது ஒருவருக்கு ஒருவர் வாங்கி கொடுத்த பரிசு பொருட்களை ஒரு ரிசார்ட்டில் திருப்பி கொடுக்க முடிவு செய்கிறார்கள். இந்த பொருட்களை அரசியல் கட்சி கொடுத்த பையில் வைத்து எடுத்து செல்கிறார் ஹீரோ.   தேர்தலில் அன...
வித்தியாசமான முயற்சி  ‘ஆறாம் வேற்றுமை’ விமர்சனம்

வித்தியாசமான முயற்சி ‘ஆறாம் வேற்றுமை’ விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
  வித்தியாசமான முயற்சி ‘ஆறாம் வேற்றுமை’ - கோடங்கி   ‘ஆறாம் வேற்றுமை’ கதை தொடங்குவதற்கு முன்பு மலை கிராமங்களின் விவரங்கள், அதன் மக்கள்... அதில் இருந்து விலகி நிற்கும் மர்மம் நிறைந்த ‘கூனிக்காடு’ மலை கிராமம்... என பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தியபடியே தொடங்குகிறது படம்..!   கூனிக்காடு, கோட்டைக்காடு என்ற இரு மலைக் கிராமங்கள். இதில் கோட்டைக்காடு மலை கிராமத்தில் திடீர் திடீரென ஆட்கள் கொலை செய்யப்படுகிறார்கள். இந்த கொலைகளை யார் செய்வது என்பது தெரியாமல் கிராமத்து ஆட்கள் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். போலீஸ் அதிகாரிகள் தனி குழு வைத்து கொலையாளியை பிடிக்க வருகிறார்கள். கொலைகள் ஏன் நடக்கிறது. கொலையாளியை போலீஸ் பிடித்ததா கூனிக்காடு, கோட்டைக்காடு இரண்டுக்கும் ஏற்பட்ட பகை என்ன, காட்டுவாசி கூட்டம் என்ன ஆனது என்பதை விளக்குகிறது ‘ஆறாம் வேற்றுமை’ படம். கோட...
நெருப்புடா விமர்சனம்

நெருப்புடா விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
  நெருப்புடா விமர்சனம் கோடங்கி     வேலை என்று செய்தால் அது `தீயணைப்பு வீரர்’ பணிதான் என்ற லட்சியத்தை கொண்ட இளைஞன்தான் விக்ரம்பிரபு இவரது நண்பர்கள் 4 பேரும் இவரோடு கைகோர்க்கிறார்கள். இந்த ஐவர் குழு சொந்தமாக தீயணைப்பு வாகனம் ஒன்றை வைத்துக் கொண்டு தீ பிடிக்கும் இடங்களுக்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியை செய்கிறார்கள். தீயணைப்பு துறையில் சேருவதற்கு முயற்சிக்கிறார்கள். இதற்காக தேர்வு எழுத காத்திருக்கிறார்கள். தேர்வுக்கு முதல் நாள் இரவு ஒரு எதிர்பாராத சம்பவம் இந்த 5 பேரில் ஒருவருக்கு நடக்கிறது. அதன் மூலம் ஏற்படும் திருப்பங்களால் இவர்கள் தேர்வு எழுதினார்களா, இவர்கள் லட்சியம் வெற்றி பெற்றதா... அந்த சம்பவத்தால் ஹீரோவுக்கு என்ன பாதிப்பு என்பதை எல்லாம் சொல்கிறது நெருப்புடா படம்.   சென்னை சிலேட்டர்புரத்தைச் சேர்ந்தவர்கள் விக்ரம்பிரபுவும் அவரின் நான்கு நண்ப...
சதுர அடி 3500 விமர்சனம்..!

சதுர அடி 3500 விமர்சனம்..!

REVIEWS, விமர்சனம்
  வேகமாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றில் சிவில் இன்ஜினியர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். அவரது இறப்பில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தாலும், அவரது சாவில் இருக்கும் உண்மையை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அந்த கட்டிடத்தில் பேய் இருப்பதாகவும் செய்திகள் வெளிவர போலீசும் அந்த கட்டிடத்திற்குள் செல்ல பயப்படுகின்றனர். கட்டிடத்தின் பாக்கி வேலைகளும் நிறுத்தப்படுகிறது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை போலீஸ் அதிகாரியான நாயகன் நிகில் மோகனிடம் வழங்கப்படுகிறது. இந்த வழக்கு குறித்த தீவிர விசாரணையில் இறங்கும் நிகில் மோகன் கொலையில் இருக்கும் மர்மம் என்ன என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். இதில் அவருக்கு பல தடங்கல்கள் வருகின்றன.   அந்த தடங்கல்கள் அனைத்தையும் தாண்டி, கொலைக்கான மர்மத்தை கண்டுபிடித்தாரா? உண்மை...
உழைக்காமல் வரும் பணம் நிலைக்காது ‘ரூபாய்’ விமர்சனம்..!

உழைக்காமல் வரும் பணம் நிலைக்காது ‘ரூபாய்’ விமர்சனம்..!

REVIEWS, விமர்சனம்
    இயக்குனர் தயாரிப்பாளர் பிரபுசாலமோன் நிறுவனத்தின் புதிய படம் ‘ரூபாய்’. பெயரை பார்த்ததும் ஏதோ அரசை குறை சொல்லப்போகும் படம் என்ற நினைப்பில் உள்ளே வருபவர்களுக்கு உண்மையை சொல்லியிருக்கிறது கதை அதற்காகவே இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் ஒரு சபாஷ் போடலாம். விமர்சனத்திற்கு போவதற்கு முன்பு கதை... குடியிருக்கும் வீட்டுக்கு வாடகையே தராமல் இழுத்தடிக்கும் ஒரு கேரக்டர் சின்னி ஜெயந்த். அவர் மகள் ஆனந்தி. வீட்டை காலி செய்ய வாடகை வண்டி தேடுகிறார். தேனியில் இருந்து கோயம்பேடுக்கு பூ ஏற்றி வரும் ஹீரோவின் வண்டியை அழைக்கிறார். அங்கே ஆனந்தியை பார்த்ததும் ஆனந்தி மீது காதல் ஏற்படுகிறது. வீட்டு சாமான்களை வண்டியில் ஏற்றிக் கொண்டு போகிறார்கள். அங்கே வீட்டுக்காரர் வீடு தரமறுக்கிறார். வேறு வீடு தேடி அலைகிறார்கள். இதற்கிடையில் வங்கியில் கொள்ளை அடித்த பணத்தை போலீஸ் சோதனைக்கு பயந்து இவர்களின...