புதன்கிழமை, ஏப்ரல் 24
Shadow

நடிகர்கள்

பாலிவுட்டில் ரீமேக் ஆகும் ‘ஒத்த செருப்பு’ – ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?!

பாலிவுட்டில் ரீமேக் ஆகும் ‘ஒத்த செருப்பு’ – ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பாலிவுட்டில் ரீமேக் ஆகும் ‘ஒத்த செருப்பு’ - ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?! நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, தனி ஒருவனாக நடித்த படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’. விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற இப்படத்துக்கு 2 தேசிய விருதுகள் கிடைத்தது. சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிப்பு ஆகிய விருதுகளையும் வென்றது. ஆஸ்காருக்கும் சென்று வந்தது. ஒத்த செருப்பு படத்தை, இந்தி, ஆங்கிலத்தில் ரீமேக் செய்ய முடிவு செய்து இருப்பதாகவும், இந்தி பதிப்பில் நடிக்க அபிஷேக் பச்சனிடம் பேசி வருவதாகவும் பார்த்திபன் ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில் நடிக்க அபிஷேக் பச்சன் இந்த படத்தில் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஒத்த செருப்பு இந்தி ரீமேக் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. பார்த்திபன் கதாபாத்திரத்தில் அபிஷேக் பச்சன் நடித்து வருகிறார். இப்படத்தை பார்த்திபன் இயக்...
மீண்டும் இயக்குனர் பாலாவுடன் கூட்டணி அமைக்கும் சூர்யா!

மீண்டும் இயக்குனர் பாலாவுடன் கூட்டணி அமைக்கும் சூர்யா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மீண்டும் இயக்குனர் பாலாவுடன் கூட்டணி அமைக்கும் சூர்யா! நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் படத்தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். இதுவரை அவர் தயாரித்த 36 வயதினிலே, பசங்க 2, 24, உறியடி 2, கடைக்குட்டி சிங்கம், பொன்மகள் வந்தாள், சூரரைப் போற்று ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது சூர்யா தயாரிப்பில் ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’, ‘உடன்பிறப்பே’, ‘ஜெய் பீம்’, ‘ஓ மை டாக்’ ஆகிய 4 படங்கள் உருவாகி உள்ளன. இந்த 4 படங்களும் விரைவில் ஓடிடி-யில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யா அடுத்ததாக தயாரிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இயக்குனர் பாலா இயக்க உள்ள படத்தை சூர்யா தயாரிக்க உள்ளாராம். இப்படத்தில் நடிகர் அதர்வா ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் குறித்த அத...
ராதிகா சரத்குமாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழுவினர்!

ராதிகா சரத்குமாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழுவினர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ராதிகா சரத்குமாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழுவினர்! பிரபல நடிகையாக இருக்கும் ராதிகா சரத்குமார், சினிமாவில் அறிமுகமாகி இன்றுடன் 43 வருடங்கள் நிறைவடைகிறது. 1978ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியான 'கிழக்கே போகும் ரயில்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ராதிகா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களிலும், தமிழில் பல டிவி தொடர்களிலும் நடிகை ராதிகா நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகும் படத்தில் ராதிகா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு காரைக்குடியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராதிகாவின் 43 வருடம் நிறைவை ஒட்டி படக்குழு சார்பில் பெரிய கேக் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் படப்பிடிப்பு இடைவேளையில் சர்ப்ரைசாக பாட்டு பாடி உற்சாகமாக கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடி இருக்கிறார்கள். இதையடு...
ஜெர்மனி பெண் அளித்த மோசடி புகார் – நடிகர் ஆர்யாவிடம் சைபர் கிரைம் போலீசார் அதிரடி விசாரணை!

ஜெர்மனி பெண் அளித்த மோசடி புகார் – நடிகர் ஆர்யாவிடம் சைபர் கிரைம் போலீசார் அதிரடி விசாரணை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ஜெர்மனி பெண் அளித்த மோசடி புகார் - நடிகர் ஆர்யாவிடம் சைபர் கிரைம் போலீசார் அதிரடி விசாரணை! ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு புகார் மனு ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த புகாரில் தமிழ் திரைப்பட நடிகர் ஆர்யா, தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னிடம் 70 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் மனு உரிய விசாரணைக்காக தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டிலும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். நடிகர் ஆர்யாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதை ஏற்றுக்கொண்ட நடிகர் ஆர்யா, நேற்று இரவு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார்....
மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா!

மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா! நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் ஆகியோர் வில்லனாக நடிக்கின்றனர். மேலும் அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிகப்பு நிற கோர்ட் அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, கோடு ரெட் (code RED) என குறிப்பிட்டுள்ளார். விக்ரம் படத்தின் பர்ஸ்ட...
நவரசாவின் ‘புராஜெக்ட் அக்னி’ முழுநீள படமாகிறதா? – கார்த்திக் நரேன் சூசக பதில்!!

நவரசாவின் ‘புராஜெக்ட் அக்னி’ முழுநீள படமாகிறதா? – கார்த்திக் நரேன் சூசக பதில்!!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நவரசாவின் ‘புராஜெக்ட் அக்னி’ முழுநீள படமாகிறதா? - கார்த்திக் நரேன் சூசக பதில்! துருவங்கள் பதினாறு, மாஃபியா, நரகாசூரன் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் கார்த்திக் நரேன். இவர் சமீபத்தில் வெளியான நவரசா ஆந்தாலஜியில் ‘புராஜெக்ட் அக்னி’ என்கிற குறும்படத்தை இயக்கி இருந்தார். அரவிந்த்சாமி, பிரசன்னா, பூர்ணா நடிப்பில் வெளியாகி இருந்த இந்த குறும்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஹாலிவுட் பட ரேஞ்சில் இருந்ததாக பாராட்டுக்களும் கிடைத்தன. இப்படத்தை முழு நீள படமாக எடுக்குமாறு ஏராளமான ரசிகர்கள் சமூக வலைதளம் வாயிலாக கார்த்திக் நரேனுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், “புராஜெக்ட் அக்னிக்கு மாபெரும் வரவேற்பை அளித்த ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. விஷ்ணு, கிருஷ்ணா, கல்கி ஆகியோரின் பயணம் இப்போது தான் ஆரம்பமாகியுள்ளது” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் கார்த்திக் நரேன...
‘சார்பட்டா பரம்பரை’ ரங்கன் வாத்தியாரை மீம் போட்டு கலாய்த்த சந்தோஷ் நாராயணன்!

‘சார்பட்டா பரம்பரை’ ரங்கன் வாத்தியாரை மீம் போட்டு கலாய்த்த சந்தோஷ் நாராயணன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘சார்பட்டா பரம்பரை’ ரங்கன் வாத்தியாரை மீம் போட்டு கலாய்த்த சந்தோஷ் நாராயணன்! பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. கடந்த மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் நடித்த பசுபதி, துஷாரா விஜயன், ஜான் விஜய், ஷபீர் ஆகியோரின் கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. தற்போது, சார்பட்டா பரம்பரை பட காட்சிகளை வைத்து உருவாக்கப்படும் மீம்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக இதில் ரங்கன் வாத்தியாராக நடித்துள்ள பசுபதியும், கபிலனாக நடித்துள்ள ஆர்யாவும் சைக்கிளில் போகும் காட்சியை அடிப்படையாக கொண்டு ஏராளமான மீம்ஸ் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சார்பட்டா பரம்பரை படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணனும் தன் பங்கிற்கு ரங்கன் வாத்தியாரை மீம் போட்டு கலாய்த்து உள்ளார். அவர் தன் மனைவியுடன் சைக்கிளில...
சொகுசு காருக்கான நுழைவு வரியை முழுமையாக செலுத்தினார் நடிகர் விஜய்!

சொகுசு காருக்கான நுழைவு வரியை முழுமையாக செலுத்தினார் நடிகர் விஜய்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
சொகுசு காருக்கான நுழைவு வரியை முழுமையாக செலுத்தினார் நடிகர் விஜய்! தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘ரோல்ஸ் ராய்ஸ்’ காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதுடன் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில், அபராத தொகையை தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு 2 வாரங்களில் வழங்க வேண்டும் என்றும் வரி என்பது நன்கொடை அல்ல, கட்டாய பங்களிப்பு. நடிகர்கள் ரீல் ஹீரோக்களாக இல்லாமல், ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும் என நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கூறியிருந்தார். நீதிபதியின் விமர்சனம் மற்றும் தீர்ப்பு குறித்து அதிருப்தி அடைந்த விஜய், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு கடந்த ஜூலை 27-ந் தேதி, விஜய்க்கு விதிக்கப்...
மிரட்டலான போஸ்டர்களுடன் ராகவா லாரன்ஸ் இயக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியானது!

மிரட்டலான போஸ்டர்களுடன் ராகவா லாரன்ஸ் இயக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியானது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மிரட்டலான போஸ்டர்களுடன் ராகவா லாரன்ஸ் இயக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியானது! தமிழ் திரையுலகில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்குபவர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கி நடித்த காஞ்சனா படத்தின் மூன்று பாகங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதைத்தொடர்ந்து காஞ்சனா முதல் பாகத்தை இந்தியில் ‘லட்சுமி’ என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்ட ராகவா லாரன்ஸ், தற்போது ருத்ரன், அதிகாரம், சந்திரமுகி 2ம் பாகம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘துர்கா’ என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தை லாரன்ஸ் இயக்கி, நடிப்பதோடு மட்டுமின்றி தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கவும் உள்ளார். அதோடு 2 மிரட்டலான போஸ்டர்களையும் வெளியிட்டு உள்ளார். இதன்மூல...
பீஸ்ட் அப்டேட் – விஜய்க்கு வில்லனாகும் செல்வராகவன்!

பீஸ்ட் அப்டேட் – விஜய்க்கு வில்லனாகும் செல்வராகவன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பீஸ்ட் அப்டேட் - விஜய்க்கு வில்லனாகும் செல்வராகவன்! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், தற்போது ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் யோகிபாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிக்க இயக்குனர் செல்வராகவன் ஒப்பந்தமாகி உள்ளார். அவர் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர் நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும், இவர் இதற்கு முன்னர் ‘சாணிக் காயிதம்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்னும் ரிலீசாகவில்ல...