சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

திரைப்படங்கள்

17 மொழிகளில் வெளியாகும் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’!

17 மொழிகளில் வெளியாகும் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
17 மொழிகளில் வெளியாகும் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’! கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் மாதம் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. தமிழில் உருவாகி உள்ள ஜகமே தந்திரம் படத்தை தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்பட 17 மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை பல தமிழ் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானாலும், அவை அதிக மொழிகளில் டப் செய்யப்படவில்லை. ஓடிடியில் வெளியாகும் தமிழ் படம் ஒன்று 17 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது....
அடுத்த படம் ரஜினியுடனா? – இயக்குனர் தேசிங்கு பெரியசாமி விளக்கம்!

அடுத்த படம் ரஜினியுடனா? – இயக்குனர் தேசிங்கு பெரியசாமி விளக்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அடுத்த படம் ரஜினியுடனா? - இயக்குனர் தேசிங்கு பெரியசாமி விளக்கம்! துல்கர் சல்மானின் 25-வது படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. புதுமுக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கிய இப்படம் கடந்தாண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டினர். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டினார். முடிந்தால், தனக்கும் ஒரு கதை தயார் செய்யும்படி ரஜினி கேட்டிருந்தார். இதையடுத்து, இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, ரஜினிக்காக ஒரு கதை தயார் செய்ததாகவும், அந்தக் கதையை ரஜினியிடம் சொல்லி சம்மதம் வாங்கியதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. மேலும் ரஜினியின் அடுத்த படத்தை இவர் இயக்க உள்ளதாகவும் செய்திகள் வலம்வந்தன. இந்நிலையில், இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள தேசிங்கு பெரியசாமி, டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “என்னுடைய அடுத...
பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் விக்ரம் பட நடிகை!

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் விக்ரம் பட நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் விக்ரம் பட நடிகை! பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம் ‘கே.ஜி.எப்’. இப்படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகும் ‘கோப்ரா’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இதுதவிர கே.ஜி.எப். படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி அடுத்ததாக பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் ‘சலார்’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடித்து வருகிறார். கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சலார் படப்பிடிப்பு, மீண்டும் தொடங்கும்போது பிரபாசுடன் ஸ்ரீநிதி ந...
நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் சேதுபதியின் மலையாள படம்!

நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் சேதுபதியின் மலையாள படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் சேதுபதியின் மலையாள படம்! நடிகர் விஜய்சேதுபதி, கடந்த 2019ம் ஆண்டு வெளியான ‘மார்க்கோனி மத்தாய்’ என்கிற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து இந்து வி.எஸ் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் 19 (1)(a) என்கிற மலையாள படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்தப்படத்தில் ஹீரோயினாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி எழுத்தளார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. இந்நிலையில், இப்படம் விரைவில் ஓடிடி-யில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக முன்னணி ஓடிடி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனம், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளதாம். இதேபோல் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தமிழில் உருவாகி உள்ள துக்ளக் தர்பார் படமும் ...
இறுதிக்கட்டத்தில் அண்ணாத்த… அடுத்த படத்திற்காக இளம் இயக்குனர்களிடம் கதை கேட்ட ரஜினி!

இறுதிக்கட்டத்தில் அண்ணாத்த… அடுத்த படத்திற்காக இளம் இயக்குனர்களிடம் கதை கேட்ட ரஜினி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
இறுதிக்கட்டத்தில் அண்ணாத்த... அடுத்த படத்திற்காக இளம் இயக்குனர்களிடம் கதை கேட்ட ரஜினி! சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. ஐதராபாத்தில் 3 வாரங்களுக்கு மேல் முகாமிட்டு இந்த படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இன்னும் ஒரு வாரத்தில் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். அண்ணாத்த படத்தை முடித்ததும் தொடர்ந்து புதிய படமொன்றில் நடிக்க ரஜினி தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்குனர்கள் கார்த்திக் சுப்புராஜ் அல்லது தேசிங்கு பெரியசாமி இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜ் ஏற்கனவே ரஜினியை வைத்து பேட்ட படத்தை இயக்கினார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, கண்ணும் ...
விஷாலுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை!

விஷாலுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஷாலுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை! விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான படம் சக்ரா. அறிமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கிய இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, சிருஷ்டி டாங்கே, மனோபாலா உள்பட பலர் நடித்திருந்தனர். இதையடுத்து ஆர்யாவுடன் இணைந்து எனிமி படத்தில் நடித்துள்ளார் விஷால். அரிமா நம்பி, இருமுகன் படங்களின் இயக்குநர் ஆனந்த் சங்கர் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் படத்தில் விஷால் நடிக்கிறார். இதில் அவருடன் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க உள்ளார். ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடித்த அடங்க மறு படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேலு இந்தப் படத்தை இயக்குகிறார். அடங்க மறு போலவே ஆக்ஷன் அதிரடியுடன் இந்தப் படம் உருவாக உள்ளது....
சஞ்சிதா ஷெட்டி படக்குழுவினருக்கு அபராதம்!

சஞ்சிதா ஷெட்டி படக்குழுவினருக்கு அபராதம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
சஞ்சிதா ஷெட்டி படக்குழுவினருக்கு அபராதம்! தமிழில் சூது கவ்வும் படம் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி. இவர் தற்போது பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மகன் லியோ சிவகுமார் ஹீரோவாக அறிமுகமாகும் அழகிய கண்ணே படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சீனு ராமசாமியின் துணை இயக்குனர் விஜயகுமார் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் அருகே உள்ள கோணப்பட்டி கிராமத்தில் நடந்து வருகிறது. இதில் கிராமத்து மக்களும் கலந்து கொள்ள 100க்கும் மேற்பட்டவர்களை கொண்டு படப்பிடிப்பு நடந்தது. மேலும் கிராம மக்கள் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க கூடியிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொரோனா தடுப்பு குழுவினர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றனர். குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றாததால் படப்பிடிப்பு குழுவினருக்கு தடுப்பு பிரிவினர் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேற...
விஜய் சேதுபதிக்காக ‘விடுதலை’ படத்தில் அதிரடி மாற்றம் செய்த தயாரிப்பாளர்!

விஜய் சேதுபதிக்காக ‘விடுதலை’ படத்தில் அதிரடி மாற்றம் செய்த தயாரிப்பாளர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் சேதுபதிக்காக ‘விடுதலை’ படத்தில் அதிரடி மாற்றம் செய்த தயாரிப்பாளர்! தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன் அடுத்ததாக சூரி நாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். நடிகர் விஜய் சேதுபதியும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் இணைந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் ‘விடுதலை’ படத்தை தமிழில் மட்டுமே வெளியிட திட்டமிட்டிருந்த தயாரிப்பாளர், விஜய் சேதுபதியின் வருகையாலும், அவருக்கு தெலுங்கு, இந்தி போன்ற திரையுலகில் இருக்கும் மார்க்கெட் காரணமாக பான் இந்தியா படமாக வெளியிட திட்டமிட்டுள்ளார். அதன்படி ...
ஓடிடி-யில் வெளியாகவுள்ள மணிரத்னத்தின் 26 படங்கள்!

ஓடிடி-யில் வெளியாகவுள்ள மணிரத்னத்தின் 26 படங்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
ஓடிடி-யில் வெளியாகவுள்ள மணிரத்னத்தின் 26 படங்கள்! இயக்குனர் மணிரத்னம் தமிழில் ‘பகல் நிலவு’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் ‘மௌன ராகம்’, ‘நாயகன்’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘தளபதி’, ‘ரோஜா’, ‘பம்பாய்’ என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து நட்சத்திர அந்தஸ்தை பெற்றார். இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 26 படங்கள் டிஜிட்டலில் மாற்றப்பட உள்ளதாம். இதற்கான பணிகள் சென்னையில் உள்ள பிரபல ஸ்டூடியோ ஒன்றில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த 26 படங்களும் டிஜிட்டலில் மாற்றப்பட்ட பின் வரிசையாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகும் இப்படத்தில், கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம...
கர்ணன் பட நடிகைக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு… சூர்யா படத்தில் நடிக்கிறார்!

கர்ணன் பட நடிகைக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு… சூர்யா படத்தில் நடிக்கிறார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
கர்ணன் பட நடிகைக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு... சூர்யா படத்தில் நடிக்கிறார்! மலையாள நடிகையான ரஜிஷா விஜயன், தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியாகி வெற்றிபெற்ற ‘கர்ணன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் அவருக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இவர் தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘சர்தார்’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ரஜிஷா விஜயன், அடுத்ததாக சூர்யா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல், அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில், நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் தான் ரஜிஷா ஹீரோயினாக நடிக்க உள்ளாராம். ஆனால் அவர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறாரா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. இ...