செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 16
Shadow

சினி நிகழ்வுகள்

ஸ்டண்ட் மாஸ்டர் வீட்டில் திருட்டு – தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார்!

ஸ்டண்ட் மாஸ்டர் வீட்டில் திருட்டு – தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
ஸ்டண்ட் மாஸ்டர் வீட்டில் திருட்டு - தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார்! பிரபல சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ கே.கே.ரத்தினம் (வயது 92). இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 1,500 திரைப்படங்களுக்கு மேலாக சண்டை பயிற்சி அமைத்துள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, என்.டி.ஆர்., ராஜ்குமார், பிரேம்நசீர், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித் என அனைத்து தரப்பு கதாநாயகர்கள் படங்களுக்கு சண்டை பயிற்சி அமைத்து உள்ள இவர் தற்போது வயது மூப்பின் காரணமாக தனது சொந்த ஊரான குடியாத்தம் தரணம்பேட்டை பெரியப்ப முதலி தெருவில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 16-ந் தேதி ஜூடோ ரத்தினம் சென்னையில் திரைப்பட நடிகர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றார். பின்னர் சென்னையில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி இருந்தார். இந்த நிலையில் ஜூடோ ரத்தினத்தின் வீட்டின் எதிர் வீட்டில் வசிப்பவர்கள் அவரின் வீட்டின் கதவு திறந்திரு...
Simbu’s Mother Usha Thrashes Vishal on “Red Card” issue!

Simbu’s Mother Usha Thrashes Vishal on “Red Card” issue!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
Simbu's Mother Usha Thrashes Vishal on "Red Card" issue! Simbu’s mother Usha T. Rajendar released a video thrashing former President of Tamil Film Producers Council Vishal who imposed red card against the “Eeswaran" actor. The Tamil Film Producers Council and the Film Employees Federation of South India were involved in a face-off after FEFSI allowed the shoot of Silambarasan TR’s new film 'Vendhu Thanindhathu Kaadu' (VTK), directed by Gautham Vasudev Menon. The TPFP has reportedly requested FEFSI not to cooperate with the film's shot till Simbu pays the pending dues. The shooting of 'Vendhu Thanindhadhu Kaadu was abruptly stopped on Thursday due to this issue. Now Simbu's mother Usha opened up about their side of the events and slammed Vishal for the judgement he provided against...
மீரா மிதுனின் யூடியூப் சேனலை முடக்க கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடிதம்!

மீரா மிதுனின் யூடியூப் சேனலை முடக்க கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடிதம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
மீரா மிதுனின் யூடியூப் சேனலை முடக்க கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடிதம்! தமிழில், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள நடிகை மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார். சமூக வலைதளங்களில் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வரும் இவர், சமீபத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றியும், சினிமாவில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இயக்குனர்கள் பற்றியும் இழிவான கருத்துகளை தெரிவித்து யூடியூபில் வீடியோ பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து மீரா மிதுனை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவரை சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், நடிகை...
சூர்ப்பனகையை முடித்த ரெஜினா!

சூர்ப்பனகையை முடித்த ரெஜினா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
சூர்ப்பனகையை முடித்த ரெஜினா! பிரபல நடிகையான ரெஜினா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சூர்ப்பனகை’. இவருடன் இப்படத்தில் அக்‌ஷரா கவுடா, மன்சூர் அலிகான், ஜெய பிரகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். கார்த்திக் ராஜு இயக்கி இருக்கும் இப்படம் இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. ஆப்பிள் ட்ரி ஸ்டுடியோஸ் சார்பில் ராஜசேகர் வர்மா தயாரித்திருக்கும் இப்படத்தின் பெரும்பான்மையான காட்சிகள், குற்றாலம் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதுமாக முடிவடைந்துள்ளது. இதையடுத்து பின்னணி வேலைகளை படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ரெஜினா இப்படத்தில் தொல் பொருள் ஆய்வாளராக நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கும் நிலையில், அடுத்ததாக விரைவில் இதன் டிரைலரை படக்குழுவினர் வெளியிட இருக்கிறார்க...
மாஸாக ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகும் வடிவேலு…. கைவசம் இத்தனை படங்களா?!

மாஸாக ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகும் வடிவேலு…. கைவசம் இத்தனை படங்களா?!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாஸாக ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகும் வடிவேலு.... கைவசம் இத்தனை படங்களா?! நகைச்சுவை நடிகராக கொடி கட்டி பறந்த வடிவேலு, இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் 2-ம் பாகத்தில் நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் மறுத்தனர். இதனால் பல வருடங்களாக நடிக்காமல் இருக்கிறார். ஆனாலும் அவரது மீம்ஸ்கள் சமூக வலைத்தளத்தை தொடர்ந்து ஆக்கிரமித்து வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு டிடெக்டிவ் நேசமணி என்ற துப்பறியும் கதையில் வடிவேல் நடிக்க இருப்பதாக போஸ்டருடன் தகவல் வந்தது. பின்னர் அது வதந்தி என்று தெளிவுப்படுத்தினர். ஓடிடி தளத்தில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அழைத்து இருப்பதாகவும் பேசப்பட்டது. அதுவும் உறுதியாகவில்லை. இந்நிலையில், ஓடிடி தளத்துக்காக தயாராகும் புதிய படங்களிலும், சுராஜ் இயக்கும் ‘நாய் சேகர்’ திரைப்படத்திலும் வடிவேலு நடிக்க உள்ளதாக புதிய தகவல் பரவி வருகிறது. ...
மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற ஆண்ட்ரியா!

மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற ஆண்ட்ரியா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற ஆண்ட்ரியா! கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. இதையடுத்து விஜய், அஜித், கமல், தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் கடைசியாக விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் கைவசம் ‘பிசாசு 2’ படம் உள்ளது. இப்படத்தை மிஷ்கின் இயக்கியுள்ளார். இதுதவிர லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘விக்ரம்’ படத்திலும் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வரும் ஆண்ட்ரியா தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களையும், வீடியோவையும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன....
‘சார்பட்டா பரம்பரை’ பட விவகாரம் – பா.ரஞ்சித்துக்கு அதிமுக நோட்டீஸ்!

‘சார்பட்டா பரம்பரை’ பட விவகாரம் – பா.ரஞ்சித்துக்கு அதிமுக நோட்டீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், திரைப்படங்கள்
‘சார்பட்டா பரம்பரை’ பட விவகாரம் - பா.ரஞ்சித்துக்கு அதிமுக நோட்டீஸ்! பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம், கடந்த மாதம் ஓடிடி-யில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வடசென்னை மக்களிடையே 70-களில் பிரபலமாக இருந்த குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டு இருந்தது. அதே சமயம் எமர்ஜென்சி காலத்தில் தமிழ்நாட்டில் நிலவிய அரசியல் சூழலையும் இயக்குனர் பா.ரஞ்சித், இப்படத்தில் காட்சிப்படுத்தி இருந்தார். இந்த காட்சிகள் சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதாக அதிமுக தரப்பில் ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், சார்பட்டா பரம்பரை பட விவகாரம் தொடர்பாக பா.ரஞ்சித் உள்பட 4 பேருக்கு அதிமுக நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், வரலாற்றுப் படம் என்று கூறிவிட்டு உண்மைக்குப் ப...
பிரபல தொகுப்பாளரும், நடிகருமான ஆனந்த கண்ணன் திடீர் மரணம்!

பிரபல தொகுப்பாளரும், நடிகருமான ஆனந்த கண்ணன் திடீர் மரணம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
பிரபல தொகுப்பாளரும், நடிகருமான ஆனந்த கண்ணன் திடீர் மரணம்! 90ஸ் கிட்ஸின் மனம் கவர்ந்த தொகுப்பாளராக விளங்கியவர் ஆனந்த கண்ணன். இவர், நகைச்சுவையாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து இருந்தார். தமிழில் பிரபலமான சிந்துபாத் சீரியலில் நாயகனாக நடித்த இவர், சரோஜா, அதிசய உலகம் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆனந்த கண்ணன், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையேயும், ரசிகர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆனந்த கண்ணன் மறைவுக்கு, இரங்கல் தெரிவித்து இயக்குனர் வெங்கட் பிரபு டுவிட்டரில், “சிறந்த நண்பன், சிறந்த மனிதன் தற்போது இல்லை. ஆழ்ந...
துப்பாக்கி சுடுதலில் அடுத்த லெவலுக்கு செல்லும் அஜித்!

துப்பாக்கி சுடுதலில் அடுத்த லெவலுக்கு செல்லும் அஜித்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
துப்பாக்கி சுடுதலில் அடுத்த லெவலுக்கு செல்லும் அஜித்! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், சமீப காலமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு, 6 பதக்கங்களை வென்று அசத்தினார் அஜித். மாநில அளவிலான போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க உள்ளார் அஜித். இந்தப் போட்டி வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதற்காக படப்பிடிப்பு இல்லாத சமயங்களில், தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார் அஜித். தேசிய அளவிலான போட்டியிலும் அஜித் நிச்சயம் பதக்கம் வெல்வார் என்ற நம்பிக்கையுடன் அவருடைய ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். நடிகர் அஜித் நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது....
லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட பாலிவுட் நடிகை!

லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட பாலிவுட் நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட பாலிவுட் நடிகை! தொழிலதிபர் லெஜண்ட் சரவணன், தமிழ் திரையுலகில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். அவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் புதிய படத்தை இரட்டை இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்குகின்றனர். இவர்கள் ஏற்கனவே உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கியுள்ளனர். இப்படத்தில் யோகிபாபு, ரோபோ ஷங்கர், மயில்சாமி, பிரபு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்த படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்துலா நடிக்கிறார். இப்படத்தின் மூலம் இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார் நடிகை ஊர்வசி ரவ்துலா. அதன்படி சென்னையில் நடைபெற்று வந்த இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவ...