வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

NEWS

மூச்சுதிணறலால் அவதி… நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

மூச்சுதிணறலால் அவதி… நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
மூச்சுதிணறலால் அவதி... நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி! மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனரான நடிகர் கார்த்திக்குக்கு, கடந்த மாதம் 21-ந் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதுரை, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கார்த்திக் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரம் முடிந்து சென்னை திரும்பிய அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கார்த்திக்குக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தொற்று இல்லை என்று தெரியவ...
கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான்!

கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான்! தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  பொதுமக்கள் மாஸ்க் அணிவதை ஒழுங்குபடுத்தவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. புதிய கட்டுப்பாடுகள் நாளை அமலுக்கு வர உள்ள நிலையில், தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் கடந்த வாரம் முதல் சராசரி நோய்த்தொற்று 3900 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம் 1.41 சதவீதம் என குறைவாகவே உள்ளது. நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் 95.55 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 34.87 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மார்ச் 16 முதல் இதுவரை விதிகளை மீறியவர்களிடம் ரூ.2.88 கோடி அபராதம் வசூலிக...
சென்னையில் நாளை முதல் கூடுதலாக 400 மாநகர பஸ்கள் இயக்க ஏற்பாடு!

சென்னையில் நாளை முதல் கூடுதலாக 400 மாநகர பஸ்கள் இயக்க ஏற்பாடு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னையில் நாளை முதல் கூடுதலாக 400 மாநகர பஸ்கள் இயக்க ஏற்பாடு! தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் நாளை (10-ந்தேதி) முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் பஸ்களில் நின்று பயணம் செய்ய அனுமதிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை முதல் அரசு மற்றும் தனியார் பஸ்களில் நின்று பயணம் செய்வதற்கு கண்டக்டர்கள் அனுமதிக்கமாட்டார்கள். தமிழகத்தில் 22 ஆயிரம் அரசு பஸ்கள் இருந்த போதிலும் கொரோனா பாதிப்பின் காரணமாக 15 ஆயிரம் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. கூட்டம் குறைவாக இருப்பதால் பஸ்களும் குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன. சென்னை தவிர தமிழகத்தில் பிற மாவட்டங்களில் 4 ஆயிரம் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. அரசின் புதிய உத்தரவால...
மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200, எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்- கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அதிரடி!

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200, எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்- கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அதிரடி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200, எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்- கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அதிரடி! கொரோனா நோய் தொற்று மீண்டும் அதிகமாக பரவி வருவதையடுத்து தமிழ்நாட்டில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாளை முதல் இது அமலுக்கு வருகிறது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சியும் நோயை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ் ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:- தற்போது கொரோனா நோய் தொற்றின் 2-வது அலை அதிகரித்து வருவதால் நோய் தொற்று பரவலை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதற்காக பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதை மீறினால் அபராதம் விதிப்பதுடன் நடவடி...
பிளஸ்-2 தேர்வை பாதுகாப்புடன் நடத்த முடிவு!

பிளஸ்-2 தேர்வை பாதுகாப்புடன் நடத்த முடிவு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பிளஸ்-2 தேர்வை பாதுகாப்புடன் நடத்த முடிவு! கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் அதிகமானதை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. பின்னர் இந்த ஆண்டு தொடக்கத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதன்பிறகு பிப்ரவரி மாதத்தில் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் பிப்ரவரி மாத இறுதியில் இந்த 3 வகுப்பு மாணவர்களும் ஆல்பாஸ் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதன் பிறகு அவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நீடித்து வருகிறது. பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் தொடர்ந்து நேரடி வகுப்புகள் நடந்து வந்தன. பண்டிகைகள், தேர்தல் காரணமாக கடந்த 2-ந்தேதியில் இருந்து 6 நாட்கள் அவர்களுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பிளஸ்-2 மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் முழுமைய...
தமிழகத்தில் ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்! மதுபான கடைகளுக்கு விலக்கு?

தமிழகத்தில் ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்! மதுபான கடைகளுக்கு விலக்கு?

HOME SLIDER, NEWS, politics
இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று வெகுவேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்கள் நடத்தப்பட்டன. அந்த கூட்டங்களில் பெரும்பாலானோர் முககவசம், சமூக இடைவெளி போன்ற கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை. எனவே தொற்று வெகுவேகமாக பரவி, தொற்று எண்ணிக்கை மளமளவென்று உயர்ந்தது. கொரோனா பரவலுக்கு பிரசார கூட்டங்களும் காரணமாய் அமைந்தன. எனவே மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்று மக்கள் மத்தியில் பரவலாக கேள்வி எழுந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது: * தமிழகத்தில் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏப். 10 முதல் தடை விதிக்கப்படுகிறது. * திருமண நிகழ்வுகளில் 100...
ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் ரத்து! கொரோனா பரவல் எதிரொலி!!

ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் ரத்து! கொரோனா பரவல் எதிரொலி!!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் ரத்து! கொரோனா பரவல் எதிரொலி!! கொரோனா தொற்று பரவல் எதிரொலியால் ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் 12-ந்தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது, என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம் தங்கும் விடுதியிலும், அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்சிலும் ஏற்கனவே மொத்தம் 22 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன. அதன் பிறகு 7 ஆயிரம் தரிசன டோக்கன்கள் குறைக்கப்பட்டு, தற்போது 15 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவுவதால், தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல் தி...
‘விவிபேட்’ எந்திரங்களை எடுத்துச்சென்ற 3 பேர் பணியிடை நீக்கம்..!

‘விவிபேட்’ எந்திரங்களை எடுத்துச்சென்ற 3 பேர் பணியிடை நீக்கம்..!

HOME SLIDER, NEWS, politics
‘விவிபேட்’ எந்திரங்களை எடுத்துச்சென்ற 3 பேர் பணியிடை நீக்கம்! ‘விவிபேட்’ எந்திரங்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற சம்பவம் தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய என்ஜினீயர் மற்றும் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் 2 பேர் என 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. சென்னை வேளச்சேரி டான்சி நகரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் இருந்து 3 ‘விவிபேட்’ எந்திரங்களை 2 பேர் மோட்டார் சைக்கிளில் வைத்து கொண்டு சென்றனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், அவர்களை மோட்டார் சைக்கிளுடன் சிறைபிடித்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா மற்றும் தி.மு.க., காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் விரைந்து வந்து 2 பேரிடமும் விசாரித்தனர். இதற்கிடையில் அங்கு வந்த வேளச்சேரி போலீசார், ‘விவிபேட்’ எந...
முதல் ஆளாக வாக்களித்தேன்… விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை – சமுத்திரகனி!

முதல் ஆளாக வாக்களித்தேன்… விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை – சமுத்திரகனி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
முதல் ஆளாக வாக்களித்தேன்... விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை - சமுத்திரகனி! தமிழகத்தில் நேற்று முன்தினம் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. திரையுலகினர் பலரும் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். அதேசமயம் பல முக்கிய திரைப்பிரபலங்கள் ஓட்டளிக்கவில்லை என தகவல் பரவியது. அதில் நடிகரும் இயக்குனருமான சமுத்திரகனியின் பெயரும் இடம்பெற்றிருந்தது. படங்களில் சமூக கருத்துக்களை கூறும் சமுத்திரகனி ஓட்டு போடவில்லை என விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், அவர் ஓட்டு போட்ட விரல் ‘மை’ அடையாளத்துடன் புகைப்படம் வெளியிட்டு குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும் இதுகுறித்து விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், அதில் கூறியதாவது: “நானும், என் மனைவியும் காலை 6.55 மணிக்கே வாக்குச்சாவடிக்கு சென்றுவிட்டோம். ஆனால் ஓட்டுப் பதிவு செய்யும் இயந்திரத்தில் சிறு கோளாறு ஏற்பட்டதால், அதை சரிசெய்ய 40 நிமிடம் ஆனது. ...
தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகை நக்மாவுக்கு கொரோனா பாதிப்பு!

தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகை நக்மாவுக்கு கொரோனா பாதிப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகை நக்மாவுக்கு கொரோனா பாதிப்பு! இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆரம்பக் கட்டத்தில் இருந்ததைப் போலவே பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மும்பையில் வசித்து வரும் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அமீர் கான், மாதவன், அக்‌ஷய் குமார், ஆலியா பட், கத்ரீனா கைப் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது நடிகை நக்மாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறாராம் நக்மா. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் நடிகை நக்மா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது....