வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

விமர்சனம்

திமிரு புடிச்சவன் விமர்சனம்

திமிரு புடிச்சவன் விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம், வீடியோ
திமிரு புடிச்சவன் விமர்சனம் சிறார் குற்றவாளிகள் செய்கிற கொடூரங்களை செய்திகளில் பார்க்கும்போது நம்மையறியாமல் ஒரு பதட்டம் ஏற்படும்... அந்த குழந்தைகள் தப்பித்தவறியும் நமக்கு வேண்டியவர்களாக இருக்கக்கூடாது என்று மனசு வேண்டிக்கொள்ளும்... ஆனால் அம்மா அப்பா இல்லாத சூழலில் தம்பியை நல்லபடியாக வளர்க்கப்போராடும் அண்ணன்... அண்ணனின் கெடுபிடி பாசத்தை உணராத தறுதலை தம்பி இந்த காம்பினேஷனில் உருவான கதைதான் விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன். போலீஸ் அதிகாரியான விஜய் ஆண்டனி காக்கி யூனிபார்முக்கு கொஞ்சமும் கவுரவம் குறைந்து விடக்கூடாது என்பதற்காக ரொம்பவே மெனக்கெடும் சூழலில் தவிர்க்க முடியாத கட்டாயம் ஏற்படும்போது உயிராய் நேசித்த சொந்த தம்பியையே சுட்டுக் கொல்கிறார். அந்த கொலைக்கு பிராயச்சித்தம் தேட புறப்படும்போது சிறார் குற்றவாளிகள் என்ற மிகப்பெரிய நெட்வொர்க் தெரிகிறது... அதன் தலைவனை தன் பாணியில் எப...
காற்றின் மொழி விமர்சனம்

காற்றின் மொழி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  காற்றின் மொழி விமர்சனம் கிரிக்கெட் மேட்ச்ல செகண்ட் இன்னிங்ஸ்ல முதல் ஓவர்ல முதல் பால் தொடங்கி 6 பால்லயும் சிக்ஸ்சர் அடிச்சா எப்படியிருக்கும்... அதேநேரம் அதுல சில பால் நோ பாலா மாறி அதுக்கும் சேர்த்து எக்ஸ்ட்ரா பால் கிடைச்சி அதுலயும் சிக்ஸ்சர் அடிச்சா எப்படியிருக்குமோ அப்படியிருக்குது ஜோதிகாவின் செகண்ட் இன்னிங்ஸ்... அதுலயும் குறிப்பா இந்த படத்துல ஜோ செம... ஒரு பையனுக்கு அம்மா... சராசரி மிடில் கிளாஸ் புருஷனுக்கு அன்பான பொண்டாட்டி... அப்படின்னு அடுப்பாங்கரையிலயே தன் உலகத்தை முடிச்சிக்கிற சாதாரண குடும்பஸ்திரி... இஸ்திரி போட்ட காட்டன் புடவைய கட்டிகிட்டு மிடுக்கா வேலைக்கு போன என்ன சந்தோஷம் இருக்குமோ அதை அப்படியே ஸ்கிரீன்ல காட்டுகிறார்... சமையல்கட்டுல இருக்குறவங்ககிட்டயும் திறமை இருக்கும்... அதுக்கு படிப்பு முக்கியம் இல்ல... அனுபவம்தான் முக்கியம்னு சொல்ற கதைதான் காற்றின்மொ...
சண்டகோழி 2 விமர்சனம்

சண்டகோழி 2 விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  சண்டகோழி 2 விமர்சனம் விஷால்& ராஜ்கிரண்&லிங்குசாமி கூட்டணியில் 13 ஆண்டுகளுக்கு முன்பு ரிலீஸ் ஆகி வசூல் வேட்டையையும், ரசிகர் பட்டாளத்தையும் விஷாலுக்கு அள்ளித்தந்த படம் சண்டகோழி. இந்த படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ள படம் சண்டகோழி 2. இதிலும் விஷால்,ராஜ்கிரண்,லிங்குசாமி கூட்டணி இணைந்திருக்கிறது. மீராஜாஸ்மினுக்கு பதிலாக கீர்த்திசுரேஷ் இவர்களோடு வரலட்சுமி சரத்குமார், கஞ்சாகருப்பு, முனீஸ்காந்த், சண்முகராஜேந்திரன், கயல்தேவராஜ், அழகம்பெருமாள், முதல்முறையாக கவிஞர் பிறைசூடன் நடிகராக அவதாரம் என ஒரு நட்சத்திரபட்டாளமே நடித்திருக்கிறது. அதோடு, விஷாலின் 25வது படம் இது. கதைப்படி வழக்கம்போல விஷாலின் அப்பா ராஜ்கிரண் ஊர் தலைவர். அந்தபகுதியில் உள்ள சுத்துபட்டி கிராமங்களில் இவர் வைத்ததுதான் சட்டம். மக்களிடம் நல்லபேர் வாங்கியிருக்கிறவர். 7 ஆண்டுகளுக்கு முன்பு கோயில் திருவிழாவில் ப...
தமிழ் சினிமாவின் தப்பான படம் ‘வடசென்னை’ – கோடங்கி விமர்சனம்

தமிழ் சினிமாவின் தப்பான படம் ‘வடசென்னை’ – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
தமிழ் சினிமாவின் தப்பா படம் ‘வடசென்னை’ -கோடங்கி விமர்சனம் ...த்தா... மக்கு... தி... கொம்மால... என காதுகளில் எப்போதுமே ரீங்கரிக்கும் ஆபாச அருவறுப்பான வசனங்களை சபை நாகரீகமே இல்லாமல் ஒரு சைக்கோ போல ரசித்து ரசித்து 3 ஆண்டுகளாக எடுத்திருக்கிறார் தமிழ் சினிமாவை உச்சாணிக்கு கொண்டு செல்ல விரும்புவதாக சொல்லிக்கொண்டு அச்சாணியை அடிப்புறத்தில் சொருகிக் கொண்டிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். வடசென்னை.... தனுஷ் நடிப்பில் இந்த பெயரை வைத்து படம் அறிவித்ததுமே கண்டிப்பாக வெட்டுகுத்து ரவுடியிச கலாச்சாரத்தை கொடுக்கிற படமாக இருக்கும் என்று எல்லாருமே எதிர்பார்த்திருப்பார்கள். படமும் அதற்கு கொஞ்சமும் ஏமாற்றத்தை கொடுக்காமல் ரவுடியிசத்தை தூக்கிப்பிடித்து கொடி நாட்ட புறப்பட்டிருக்கிறது. வடசென்னை என்றாலே அங்கே வசிக்கிற மக்கள் எப்போதுமே அழுக்கானவர்களாகத்தான் இருப்பார்கள்... அவர்களின் அன்றாட வாழ்க்...
ஆண் தேவதை – விமர்சனம்

ஆண் தேவதை – விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  ஆண் தேவதை விமர்சனம் தாமிரா இயக்கத்தில் சமுத்திரகனி நடிப்பில் வெளியாகியிருக்கிற படம் ஆண்தேவதை. படத்தலைப்பே மிக கவிதையாக இருப்பதால் படமும் அப்படியே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. கை நிறைய சம்பாதிக்கும் ஐடி நிறுவன ஊழியர்களின் உண்மையான வாழ்க்கையை வெளிச்சம் போட நினைத்திருக்கிறார் இயக்குனர் தாமிரா. பணமும், பகட்டும், மேலைநாட்டு கலாச்சாரமும்தான் வாழ்க்கையின் அங்கீகாரம் என நினைக்கிற கதாநாயகி... சமூக அக்கறை, குழந்தைகள், அளவான வருமானம், அமைதியான வாழ்க்கை, மகிழ்ச்சியான குடும்பம் என வாழ நினைக்கும் கதாநாயகன். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் அவர்கள் வாழ்க்கை எப்படி அமைகிறது எப்படி அவர்கள் அமைத்துக் கொள்கிறார்கள் என்பதையும் இன்றைய சூழலை எடுத்து காட்டுகிறார் இயக்குனர். மிக யதார்த்தமான கதையை சமூகத்தில் நடக்கும் அவலத்தை அதே சமூகத்திற்கு எச்சரிக்கை மணியாக செல்ல நினை...
மனுசங்கடா விமர்சனம்

மனுசங்கடா விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
    ரொம்ப நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் யதார்த்தங்களும், வாழ்வியல் நிஜங்களும் திரைப்படங்களாக வந்து உலக சினிமாவுக்கு தமிழ் சினிமாவும் சளைத்தது இல்லை என குரல் எழுப்ப தொடங்கியிருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் தொடங்கி சமீபத்திய பரியேறும் பெருமாள் படம்வரைக்கும் பல படங்கள் இந்த வாழ்வியல் வலியை ரத்தமும் சதையுமான மனிதர்களின் நிஜத்தை செல்லுலாய்டில் பதித்து கண்முன்பாக நிறுத்தியது. அந்த வரிசையில் இணைந்திருக்கிற படம் மனுசங்கடா.... பிழைப்புக்காக கிராமத்தில் இருந்து சென்னையில் வேலை செய்கிற மகன்... ஒரு நள்ளிரவில் திடீரென அப்பா இறந்து விட்டதாக தகவல் வருகிறது. அவசர அவரசமாக கிராமத்துக்கு வருகிறான் மகன். அங்கே இறந்து கிடக்கும் அப்பாவின் உடலை அடக்கம் செய்ய பொதுப்பாதையை பயன்படுத்தக் கூடாது ஆதீக்க ஜாதியினர் தடுக்கிறார்கள். உடலை அடக்கம் செய்யும் வேலையை நிறுத்திவிட்டு சட்டப்படி போ...
96 திரை விமர்சனம்

96 திரை விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  தமிழ் சினிமாவில் எப்போதாவதுதான் இப்படி ஒரு படங்கள் தலைகாட்டும்... அந்த படங்களை பார்க்கிற அத்தனை தலைகளும் தங்கள் கடந்த கால வாழ்க்கையை திரும்பி பார்க்க வைக்கும்... அப்படி ஒரு படம்தான் விஜய்சேதுபதி&த்ரிஷா நடித்திருக்கிற 96 பள்ளிப்பருவ காதல் கதையை அதுவும் நிறைவேறாத காதலை இத்தனை நீளமாக... அத்தனை அழகாக... கவிதையாக... படத்திலும், படம் பார்க்கிறவர்களையும் வெட்கப்பட வைத்து... யப்பா இயக்குனரே... இவ்ளோ நாளா எங்கய்யா இருந்த... என்று கேட்க வைத்திருக்கிறார் இயக்குனர் பிரேம்குமார். பள்ளிக்காதல் முடிந்து திடீரென காணாமல் போன ராமச்சந்திரன் தன் முன்பு 22 வருஷங்களுக்கு பிறகு தாடி மீசையுடன் 40ஐ தாண்டிய முதிர்ந்த வயசுடன் வந்து நிற்கும்போது... எதிரில் நிற்பது பள்ளியில் உருகி உருகி ஆசைப்பட்ட ஜானு என்பதை அறிந்து வெட்கப்படும் விஜய் சேதுபதி... அதை பார்த்து வயசை மறந்து படம் பார்க்கும் எல்லாரும...