வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

politics

கொரானாவால் இறந்தவர்களை புதைக்க இடம் தருவதாக சொன்ன கடவுள் மனசுக்காரார் விஜயகாந்த் – பிரபல தயாரிப்பாளர் பாராட்டு

கொரானாவால் இறந்தவர்களை புதைக்க இடம் தருவதாக சொன்ன கடவுள் மனசுக்காரார் விஜயகாந்த் – பிரபல தயாரிப்பாளர் பாராட்டு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  கொரானாவால் இறந்தவர்களை புதைக்க இடம் தருவதாக சொன்ன கடவுள் மனசுக்காரார் விஜயகாந்த் - பிரபல தயாரிப்பாளர் பாராட்டு கொரானாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்யும் போது ஏற்பட்ட வன்முறையை டிவியில் பார்த்த ஒவ்வொரும் வெட்கி தலைகுனிய வேண்டிய அவலம். அந்த அளவுக்கு மனிதாபிமானம் செத்துப்போன நிலையில் இனியும் இப்படி சம்பவங்கள் நடக்கக் கூடாது என்றும், அப்படி கொரானாவால் பாதிக்கப்பட்டு பலியானவர்களை புதைக்க தனது கல்லூரியில் இடம் தருவதாகவும் நடிகரும், தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்த் அறிவித்தது அனைத்து தரப்பு மக்களின் வரவேற்பை பெற்றது. இதற்கு நன்றி தெரிவித்து பிரபல தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்திரன் வெளியிட்ட அறிக்கை:   ...
கொரானாவிலிருந்து பூரண குணமடைந்து மீண்டும் பணிகளை துவங்கினார் இங்கிலாந்து பிரதமர்!

கொரானாவிலிருந்து பூரண குணமடைந்து மீண்டும் பணிகளை துவங்கினார் இங்கிலாந்து பிரதமர்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  கொரானாவிலிருந்து பூரண குணமடைந்து மீண்டும் பணிகளை துவங்கினார் இங்கிலாந்து பிரதமர்! இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரானாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அவர் குணனடைய வேண்டும் அதற்கான அனைத்து உதவிகளும் செய்யத்தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் உட்பட பல நாடுகளின் தலைவர்கள் அறிவித்திருந்தனர். தீவிர சிகிச்சைக்கு பின் ஓரளவுக்கு உடல் நிலை தேறியதும் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட போரீஸ் ஜான்சன் கடந்த வாரம் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பினார். முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்பதால் தனது பண்ணை வீட்டில் தங்கி இருக்கும் போரீஸ் ஜான்சன் தற்போது மீண்டும் தனது பணிகளை செய்ய துவங்கி இருக்கிறார். மேலும், அவரை வெளியுறவுத்துறை மந்திரி டொமினிக் ராப், போரிஸ் ஜான்சனின் தலைமை ஆலோசகர் டொமினிக் கம்மிங்ஸ், தகவல் தொடர்பு இயக்குனர் லீ கெயின் ஆகியோர் நேரில் சந்தித்...
தாணு-முரளி-டி.சிவா மும்முனைப் போட்டியில்  சினிமாவின் அடுத்த தலைமை பதவி யாருக்கு…? – கோடங்கி ஸ்பெஷல்

தாணு-முரளி-டி.சிவா மும்முனைப் போட்டியில் சினிமாவின் அடுத்த தலைமை பதவி யாருக்கு…? – கோடங்கி ஸ்பெஷல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
    தமிழ் சினிமாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் இடமாக இருந்த முதலாளிகள் அமைப்பு... அதாங்க தயாரிப்பாளர் சங்கம் கடந்த சில ஆண்டுகளாக மேய்ப்பன் இல்லாத ஆட்டுக் கிடையாக மாறியதால்... சில தயாரிப்பாளர்களைத் தவிர பெரும்பாலான தயாரிப்பாளர்கள் பெரும் சிரமத்தில் இருக்கிறார்கள். முன்பெல்லாம் பட ரிலீஸ் சிக்கல் என்றாலும், ஷூட்டிங் சிக்கல் என்றாலும், நடிகர்கள் பிரச்சினை என்றாலும் என சினிமா துறையில் எந்த சிக்கல் இருந்தாலும் அதை தீர்த்து வைக்கும் இடமாக இருந்த தயாரிப்பாளர் சங்கம் ஏன் இந்த நிலைக்கு போனது. சமீப காலத்தில் பெரும் முதலீட்டில் எடுத்த படங்களை கூட ரிலீஸ் செய்ய முடியாதபடி தடை அறிவித்த விஷயங்கள் நடக்காமல் இல்லை. இன்றைக்கு பேசி தீர்க்க வேண்டிய விஷயங்களை நீதிமன்றம் வரை கொண்டு சென்று திரையுலகத்தை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து வருகின்றனர். இதற்கு முழு காரணம் திரைத்துறையை தலையாக இர...
மறு உத்தரவு வரும்வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் – தமிழக அரசு அறிவிப்பு

மறு உத்தரவு வரும்வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் – தமிழக அரசு அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மறு உத்தரவு வரும்வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் - தமிழக அரசு அறிவிப்பு கொரானா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அரசின் ஊரடங்கு உத்தரவு, மக்கள் ஒத்துழைப்பு ஆகியவற்றால் கொரானா பரவல் பெருமளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே, பிரதமர் மோடி கடந்த 14-ம் தேதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ஏப்ரல் 20-ம் தேதி வரை கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும். அதன்பின் தளர்வுகள் இருக்கும். ஏப்ரல் 20-ம் தேதிக்கு பிறகு அதிகம் பாதிப்பு ஏற்படாத பகுதிகளில் விதிவிலக்குகள் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். தற்போதைய நிலவரப்படி நாட்டில் கொரானாவுக்கு இதுவரை 507 பேர் பலியாகி உள்ளனர்.  இந்தியாவில் கொரானா பாதிப்பு எண்ணிக்கை 15,712 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 1,372 பாதிக்கப்பட்ட நிலையில் 365 பேர் குணம...
கொடூர கொரானாவை ஒழிக்க உலக நாடுகளுக்கு மருந்து அனுப்பிய இந்தியாவுக்கு ஐ.நா. பாராட்டு!

கொடூர கொரானாவை ஒழிக்க உலக நாடுகளுக்கு மருந்து அனுப்பிய இந்தியாவுக்கு ஐ.நா. பாராட்டு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொடூர கொரானாவை ஒழிக்க உலக நாடுகளுக்கு மருந்து அனுப்பிய இந்தியாவுக்கு ஐ.நா. பாராட்டு! உலகம் முழுவதும் ஆட்டிப் படைத்து வரும் கொரானா வைரஸ் நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மலேரியா காய்ச்சலை குணப்படுத்த உதவும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் கொரானா நோயாளிகளை குணப்படுத்த உதவுவதாக கண்டறியப்பட்டது. இந்த மாத்திரைகள் இந்தியாவில் தான் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில் கொரானா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியதால், இந்த மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. இதற்கிடையே, கொரானாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை தங்களுக்கு வழங்க வேண்டும் என அமெரிக்கா, நேபாளம், இலங்கை உள்ளிட்ட பல்வேறு ...
நாளை முதல் எதற்கெல்லாம் ஊரடங்கு தளர்வு யாருக்கெல்லாம் பயன் லிஸ்ட் வெளியிட்ட மத்திய அரசு!

நாளை முதல் எதற்கெல்லாம் ஊரடங்கு தளர்வு யாருக்கெல்லாம் பயன் லிஸ்ட் வெளியிட்ட மத்திய அரசு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    நாளை முதல் எதற்கெல்லாம் ஊரடங்கு தளர்வு யாருக்கெல்லாம் பயன் லிஸ்ட் வெளியிட்ட மத்திய அரசு! கொரானா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் நாளை 20ம் தேதி முதல் ஊரடங்கு சில நிபந்தனைகளுடன் தளர்வு செய்யப்படுகிறது. அதே போல 20-ந்தேதி முதல் செயல்பாட்டிற்கு வரும் சேவைகள், தொழில்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனை மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- * ஆயுஷ் உள்பட அனைத்து மருத்துவ சேவைகள் செயல்படும். * வேளாண் மற்றும் தோட்டத் தொழில்களுக்கு அனுமதி. * மீன்பிடித் தொழில் தொடர்ந்து இயங்கும். * தேயிலை, காப்பி, ரப்பர் தோட்டத் தொழில்கள், அதிகபட்சம் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம். * நிதித்துறை மற்றும் சமூக நலத்துறை செயல்படும். * தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடரும். இதில் ஊழியர்கள் முக கவசம் அணிந்து ச...
ஊரடங்கு நேரத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன் திருமணம்!

ஊரடங்கு நேரத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன் திருமணம்!

HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், வீடியோ
    ஊரடங்கு நேரத்தில் முன்னாள் பிரதமர் பேரன் திருமணம்! முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும் கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி மகன் நிகில் குமாரசாமிக்கும் காங்கிரஸ் கட்சியைச் முன்னாள் அமைச்சர் மகள் ரேவதிக்கும் பெங்களூரு அருகேயுள்ள பண்ணை வீட்டில் இன்று திருமணம் நடைபெற்றது. கொரானா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஹெச்.டி.குமாரசாமியின் மகன் திருமணம் நடைபெறுவது ஊடகங்களில் முக்கிய தலைப்புச் செய்தியாக இடம் பிடித்தது. கர்நாடகா மாநில அரசு சார்பில் சமூக இடைவெளி முறையாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. திருமண இடம் அமைந்துள்ள ராமநகரத்திற்குள் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் குமாரசாமி குடும்பத்தின் பிரமாண்டமான திருமணத்தில் பங்கேற்க சுமார் 30-40 கார்கள் பெங்களூரிலிருந்து திருமண மண்டபத்தை நோ...
கொரானா இடர் நீங்க 3 மாத பயிற்சி முடித்து மருத்துவ உதவியாளராக பணியில் சேர்ந்த சுவீடன் இளவரசி!

கொரானா இடர் நீங்க 3 மாத பயிற்சி முடித்து மருத்துவ உதவியாளராக பணியில் சேர்ந்த சுவீடன் இளவரசி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  கொரானா இடர் நீங்க 3 மாத பயிற்சி முடித்து மருத்துவ உதவியாளராக பணியில் சேர்ந்த சுவீடன் இளவரசி! ஐரோப்பிய நாடான சுவீடனில் இதுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 1,200-க்கும் அதிகமானோரின் உயிரை இந்த வைரஸ் பறித்துள்ளது. இந்த நிலையில், அந்த நாட்டின் இளவரசி சோபியா, கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படும் மருத்துவமனையில் பணியாற்ற தொடங்கியுள்ளார்.   35 வயதான இவர், ஆன்லைன் மூலம் 3 நாள் சிறப்பு பயிற்சியினை முடித்த பின்பு தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள சோபியாஹெமெட் மருத்துவமனையில் தனது சேவை பணியை தொடங்கி இருக்கிறார். மருத்துவமனையில் சுகாதார உதவியாளராக சேர்ந்துள்ள இளவரசி சோபியா, கொரானா நோயாளிகளை கையாள்வதில் நேரடியாக ஈடுபட மாட்டார். அதே சமயம் டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கு தேவையான உதவிகளை செய்வார். சோப...

அமெரிக்காவில் தொடர்ந்து ஆயிரங்களில் உயிர்பலி வாங்கி கோர தாண்டவம் ஆடும் கொரானா!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    அமெரிக்காவில் தொடர்ந்து ஆயிரங்களில் உயிர்பலி வாங்கி கோர தாண்டவம் ஆடும் கொரானா! உலகம் முழுவதும் 21 லட்சத்து 81 ஆயிரத்து 43 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 5 லட்சத்து 47 ஆயிரத்து 14 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு இதுவரை ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 457 பேர் பலியாகியுள்ளனர். கொரானா சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டாலும் அமெரிக்காவில் வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 6 லட்சத்து 77 ஆயிரத்து 482 பேருக்கு கொரானா பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 29 ஆயிரத்து 479 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
விற்பனைக்கு செல்லும் விவசாயிகளை யாரும் தடுத்து நிறுத்தக் கூடாது – சேலத்தில் முதல்வர் உத்தரவு

விற்பனைக்கு செல்லும் விவசாயிகளை யாரும் தடுத்து நிறுத்தக் கூடாது – சேலத்தில் முதல்வர் உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    விற்பனைக்கு செல்லும் விவசாயிகளை யாரும் தடுத்து நிறுத்தக் கூடாது - சேலத்தில் முதல்வர் உத்தரவு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராமன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் கிரிலோஸ்குமார், மஞ்சுநாதா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- சேலம் மாவட்டத்தில் கொரானா பரவிய 9 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சேலத்தில் கொரானாவை கட்டுக்குள் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் கொரானா பாதித்த 24 பேரில் 7 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரானா நிவாரணத் தொகையான ரூ.1,000 குடும்ப அட்டைதாரர்களில் 98 சதவீதம் பேருக்கு...