வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

CINI NEWS

இந்தியில் ரீமேக் ஆகும் ‘ஆரண்ய காண்டம்’!

இந்தியில் ரீமேக் ஆகும் ‘ஆரண்ய காண்டம்’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
இந்தியில் ரீமேக் ஆகும் ‘ஆரண்ய காண்டம்’! தியாகராஜன் குமாரராஜா இயக்குனராக அறிமுகமான படம் ‘ஆரண்ய காண்டம்’. எஸ்.பி.பி. சரண் தயாரித்த இந்தப் படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியானது. இதில் ஜாக்கி ஷெராப், ரவி கிருஷ்ணா, சம்பத் ராஜ், யாஷ்மின் பொன்னப்பா, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. வெளியீட்டின் போது வெற்றி பெறாமல், பின்னர் மக்களால் கொண்டாடப்பட்ட படங்களில் ‘ஆரண்ய காண்டம்’ முக்கியமானது. இப்படம் வசூல் ரீதியாக நஷ்டமடைந்தாலும், விருதுகளை வென்று குவித்தது. குறிப்பாக சிறந்த படத்தொகுப்பு, சிறந்த அறிமுக இயக்குனர் ஆகிய தேசிய விருதுகளையும் வென்றது. இப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். பாலிவுட் திரையுலகின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான டிப்ஸ் நிறுவனம் இதன் ரீமேக் உரிமையை கைப்பற்...
அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிக்கும் விக்ரம், சூர்யா பட நடிகைகள்!

அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிக்கும் விக்ரம், சூர்யா பட நடிகைகள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிக்கும் விக்ரம், சூர்யா பட நடிகைகள்! சூது கவ்வும், தெகிடி படங்களின் மூலம் பிரபலமான அசோக் செல்வன் கடந்த ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் வெற்றி படமான ஓ மை கடவுளே மூலம் முன்னணி நடிகராகி விட்டார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில், அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை அறிமுக இயக்குனர் ஆர்.கார்த்திக் இயக்குகிறார். பெயரிடப்படாத இப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ரீத்து வர்மா, அபர்ணா பாலமுரளி, சிவாத்மிகா ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இவர்களில் ரீத்து வர்மா விக்ரமுக்கு ஜோடியாக ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும், அபர்ணா பாலமுரளி சூர்யாவுக்கு ஜோடியாக ‘சூரரைப் போற்று’ படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜார்ஜி சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு ...
‘குருதி ஆட்டம்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியானது!

‘குருதி ஆட்டம்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியானது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
‘குருதி ஆட்டம்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியானது! ‘எட்டு தோட்டாக்கள்’ படத்தை இயக்கி, தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர், ஸ்ரீகணேஷ். இவர் அடுத்ததாக இயக்கி இருக்கும் புதிய படம், ‘குருதி ஆட்டம்’. அதர்வா முரளி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி குருதி ஆட்டம் படத்தில் இடம்பெறும் ‘ரங்க ராட்டினம்’ எனும் பாடலை வருகிற ஜூலை 1-ந் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது....
4 மொழிகளில் நேரடியாக ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் ‘டாக்டர்’!

4 மொழிகளில் நேரடியாக ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் ‘டாக்டர்’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
4 மொழிகளில் நேரடியாக ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் ‘டாக்டர்’! சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டாக்டர். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இந்த படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தில் நடித்து பிரபலமான பிரியங்கா மோகன் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள, இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த மார்ச் மாதமே ரிலீஸ் ஆக இருந்த இப்படம் தமிழக சட்டசபை தேர்தல் மற்றும் கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களால் தள்ளிப்போனது. இந்நிலையில், டாக்டர் படம் விரைவில் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் ஓடிடி உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம்...
சிரஞ்சீவி படத்திற்காக பிரபல இசையமைப்பாளருடன் முதன்முறையாக இணையும் மோகன் ராஜா!

சிரஞ்சீவி படத்திற்காக பிரபல இசையமைப்பாளருடன் முதன்முறையாக இணையும் மோகன் ராஜா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சிரஞ்சீவி படத்திற்காக பிரபல இசையமைப்பாளருடன் முதன்முறையாக இணையும் மோகன் ராஜா! மலையாளத்தில் மோகன்லால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘லூசிபர்’. இந்தியாவையே மிரள‌ வைத்த இந்த படத்தில் மோகன்லால் அரசியல்வாதியாகவும், அண்டர்கிரவுண்ட் கேங்ஸ்டராகவும் நடித்திருந்தார். இப்படத்தை பார்த்த தெலுங்கு நடிகர் ராம்சரண், தன் தந்தை சிரஞ்சீவிக்கு இந்தக் கதை பொருத்தமாக இருக்கும் என கருதி, அதன் தெலுங்கு ரீமேக் உரிமையை கைப்பற்றினார். தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், தனி ஒருவன் போன்ற படங்களை இயக்கி பிரபலமான மோகன்ராஜா, லூசிபர் தெலுங்கு ரீமேக்கை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில், இப்படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இயக்குனர் மோகன் ராஜாவுடன் அவர் இணைந்து பணியாற்றுவது இதுவே முதன்முறை. தற்போது இப்படத்தின் இசைப் பணிகள் தொடங்கப்பட்டு உ...
முன்னாள் அமைச்சர் புழல் சிறைக்கு அதிரடி மாற்றம்- காரணம் என்ன!

முன்னாள் அமைச்சர் புழல் சிறைக்கு அதிரடி மாற்றம்- காரணம் என்ன!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
முன்னாள் அமைச்சர் புழல் சிறைக்கு அதிரடி மாற்றம்- காரணம் என்ன! நடிகை சாந்தினி அளித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள  முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர், சொகுசு வசதிகளோடு இருந்ததை போலீசார் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சைதாப்பேட்டை சிறையில் இருந்து மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். மேலும், மணிகண்டனுக்கு சொகுசு வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்த காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்....
யுவன் இசையில் பாடிய சிம்பு!

யுவன் இசையில் பாடிய சிம்பு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
யுவன் இசையில் பாடிய சிம்பு! இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், நடிகர் சிம்புவும் நெருங்கிய நண்பர்கள். இவர் இருவரும் இணைந்து பணியாற்றிய ‘மன்மதன்’, ‘வல்லவன்’, ‘சிலம்பாட்டம்’, ‘வானம்’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. தற்போது சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு படத்திற்கும் யுவன் தான் இசையமைக்கிறார். இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. அதன்படி யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள ஆல்பம் பாடலை சிம்பு பாடி உள்ளார். இதில் காளிதாஸ் ஜெயராமும், மேகா ஆகாஷும் நடித்துள்ளனர். பிரபல நடன இயக்குனர் சாண்டி இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். இந்த ஆல்பம் பாடலின் வீடியோ விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
முதல்முறையாக கமலுடன் ஜோடி சேரும் நதியா!

முதல்முறையாக கமலுடன் ஜோடி சேரும் நதியா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
முதல்முறையாக கமலுடன் ஜோடி சேரும் நதியா! மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் 2013-ல் வெளியாகி வசூல் குவித்த திரிஷ்யம் படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் கமல்ஹாசன், கவுதமி நடித்து இருந்தனர். தெலுங்கு, இந்தி, கன்னடம், சீன மொழிகளிலும் திரிஷ்யம் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது. இந்நிலையில், திரிஷ்யம் படத்தின் 2-ம் பாகமும் மோகன்லால், மீனா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தையும் தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் சீன மொழிகளில் ரீமேக் செய்வதாக அறிவித்து உள்ளனர். தமிழிலும் ‘திரிஷ்யம் 2’ படம் பாபநாசம் 2-ம் பாகமாக உருவாக உள்ளதாகவும், இதில் நடிக்க கமல் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் பேசப்படுகிறது. மேலும் முதல் பாகத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த கவுதமி, இரண்டாம் பாகத்தில் நடிக்க மாட்டார் என்றும், அவருக்கு பதிலாக நடிகை நதியாவை நடிக்க வைக்க பேச்...
கமலின் ‘விக்ரம்’ படத்தில் இணைந்த ‘கைதி’ பட பிரபலம்!

கமலின் ‘விக்ரம்’ படத்தில் இணைந்த ‘கைதி’ பட பிரபலம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கமலின் ‘விக்ரம்’ படத்தில் இணைந்த ‘கைதி’ பட பிரபலம்! நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அதேபோல் நடிகர் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்நிலையில், பிரபல நடிகர் நரேன், விக்ரம் படத்தில் இணைந்துள்ளார். இதன்மூலம், கமல்ஹாசனுடன் நடிக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நடிகர் நரேன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் 2-வது படம் இதுவாகும். அவர் ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்...
அமெரிக்கா செல்ல ரஜினிகாந்துக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது? – நடிகை கஸ்தூரி கேள்வி!

அமெரிக்கா செல்ல ரஜினிகாந்துக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது? – நடிகை கஸ்தூரி கேள்வி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
அமெரிக்கா செல்ல ரஜினிகாந்துக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது? - நடிகை கஸ்தூரி கேள்வி! ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றது குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: “மே முதல் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் கொரோனா காரணமாக இந்தியாவில் இருந்து நேரடி பயணத்தை அமெரிக்கா தடை செய்துள்ளது. மருத்துவ விதிவிலக்குகள் எதுவும் வழங்கப்படவில்லை. பிறகு எப்படி, ஏன் இந்த நேரத்தில் ரஜினிகாந்த் பயணம் செய்தார்? அவர் திடீரென அரசியலில் இருந்து விலகியது, இப்போது இது என எதுவும் சரியாகப் படவில்லை. ரஜினி சார் தயவு செய்து தெளிவுபடுத்துங்கள். தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்க காரணம் இருக்கிறது. ஏனெனில் அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் அல்லது படிக்கும் இந்தியர்களுக்கு மட்டுமே  அமெரிக்காவுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுகிறது. அதுவும் மற்ற நாடுகளின் வழியாக பயணிக்கும் இந்தியர்கள் பயணம் செய்ய அ...