வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

World News

மலேசியாவில் ‘மிரள்’ படத்தை  வெளியிடும் பிரபல நிறுவனம்!

மலேசியாவில் ‘மிரள்’ படத்தை வெளியிடும் பிரபல நிறுவனம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, World News, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  'மிரள்' படத்தை மலேசியாவில் வெளியிடும் பிரபல நிறுவனம். Axess Film Factory G டில்லி பாபு தயாரிப்பில், M சக்திவேல் இயக்கத்தில் பரத்-வாணி போஜன் நடித்துள்ள திரைப்படம் “மிரள்”. புதுமையான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது. இந்த படத்தின் வெளி நாட்டு உரிமத்தை வாங்கியுள்ள பிரபல நிறுவனமான அம்மா புரொடக்சன்ஸ் SDN bhd நிறுவனம் மலேசியா சிங்கப்பூர் நாடுகளில் வெளியிடுகிறது. இந்த படத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி மலேசியாவில் நடைபெருகிறது இந்த நிகழ்வில் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் கலந்துகொள்கிறார்கள். ...
11000 ஊழியர்களை அதிரடியாக நீக்கியது பேஸ்புக்!

11000 ஊழியர்களை அதிரடியாக நீக்கியது பேஸ்புக்!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
பிரபல சமூக வலைத்தளமன பேஸ்புக் நிறுவனத்தில் இருந்து 11000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா இத்தகவலை அறிவித்துள்ளது. வருவாய் வீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக 11000 ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 'மெட்டா நிறுவன வரலாற்றில் நாங்கள் செய்த மிகவும் கடினமான சில மாற்றங்கள் தொடர்பாக தகவலை இன்று பகிர்கிறேன். எங்கள் குழுவின் வலிமையை சுமார் 13 சதவீதம் குறைக்கவும், 11,000-க்கும் மேற்பட்ட எங்கள் திறமையான பணியாளர்களை விடுவிக்கவும் முடிவு செய்துள்ளேன்' என பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட செலவினங்களைக் குறைப்பது மற்றும் முதல் காலாண்டு வரை ஆட்சேர்ப்பை நிறுத்தி வைப்பதன் மூலம் திறமையான நிறுவனமாக மாறுவதற்கு கூடுதல் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறி உள்ளார். பண...
ஜப்பானில் நவம்பர் 18-ம் தேதி வெளியாகும் விஜய்யின் மாஸ்டர்!

ஜப்பானில் நவம்பர் 18-ம் தேதி வெளியாகும் விஜய்யின் மாஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, World News, உலக செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் மாஸ்டர். வருடத்திற்கு ஒரு படம் வீதம் விஜய் நடித்து வருவதால், ஒவ்வொரு வருடமும் அவருடைய படங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்படும். வாத்தி கம்மிங் பாடலில் ஒரே ஒரு வரியில் பாடலையே முடித்திருப்பார் இசையமைப்பாளர் அனிரூத்.   விஜய்யை காட்டிலும் வில்லனாக நடித்திருந்த விஜய்சேதுபதி ஸ்கோர் செய்து தன்னை வில்லனாகவும் நிரூபித்துக் காண்பித்திருந்தார். தமிழ்நாட்டை தாண்டி பிற மொழிகளிலும் படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. பெரும்பாலும் தமிழ் படங்கள் வெளி மாநிலங்களை தாண்டி வெளிநாடுகளிலும் வரவேற்பை பெறுவதுண்டு. அந்த வகையில் ஜப்பானில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வரும் நவம்பர் 18-ம் தேதி திரையிடப்படவுள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்....
சிறிய வீட்டில் குடும்பத்துடன் குடியேறும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்

சிறிய வீட்டில் குடும்பத்துடன் குடியேறும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்

HOME SLIDER, World News, உலக செய்திகள்
  சிறிய வீட்டில் குடும்பத்துடன் குடியேறும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இங்கிலாந்து புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கபட்டார். அந்நாட்டு வரலாற்றில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் பிரமதமரானது இதுவே முதல் முனறயாகும். ரஷி சுனக்கின் மனைவி பெயர் அக்‌ஷயா மூர்த்தி . இவர் இன்போசிஸ் நிறுவன தலைவர் நாராயணமூர்த்தியின் மகள் ஆவார். ரிஷி சுனக்-அக்‌ஷதா மூர்த்தி தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இங்கிலாந்தில் போரிஸ்ஜான்சன் பிரதமராக இருந்த போது ரிஷி சுனக் நிதி மந்தரியாக இருந்தார். அந்த சமயம் அவர் லண்டன் டவுணிங் வீதியில் உள்ள 10-வது இல்லத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து மேற்கு லண்டனில் இருக்கும் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார். மகள்கள் படிக்கும் பள்ளி இதன் அருகில் இருப்பதால் அவர் இந்த வீட்டில் க...

பிலிப்பைன்ஸ் நாட்டின் மகுயிண்டனாவ் மாகாணத்தை பந்தாடிய ‘நால்கே’ புயல்! பேய் மழை!!

flood news, HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள்
பிலிப்பைன்ஸ் நாட்டின் மகுயிண்டனாவ் மாகாணத்தை பந்தாடிய 'நால்கே' புயல்! பேய் மழை!! தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 20 புயல் மற்றும் சூறாவளிகள் தாக்குகின்றன. இவை மக்கள் மற்றும் கால்நடைகளை கொன்று, பண்ணைகள், வீடுகள், சாலைகள் மற்றும் பாலங்களை அழிக்கின்றன. இந்த சூழலில் பருவநிலை மாற்றத்தால் உலகம் வெப்பமடைந்து வருவதன் எதிரொலியால் பிலிப்பைன்சை தாக்கும் புயல்கள் அதிக சக்தி வாய்ந்ததாக மாறுவதாக விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணங்களை 'நால்கே' என்கிற சக்தி வாய்ந்த புயல் நேற்று தாக்கியது. குறிப்பாக இந்த புயல் அங்குள்ள மகுயிண்டனாவ் மாகாணத்தை பந்தாடியது. மணிக்கு பல கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று சுழன்று அடித்ததில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்தன. கட்...
இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர் விருது பெற்ற நடிகர் சௌந்தரராஜா!

இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர் விருது பெற்ற நடிகர் சௌந்தரராஜா!

CINI NEWS, HOME SLIDER, World News, உலக செய்திகள், செய்திகள், நடிகர்கள்
சிறந்த மனிதநேய விருதை பெற்றார் நடிகர் சௌந்தரராஜா நடிகர் சௌந்தரராஜா விற்கு இந்த ஆண்டிற்கான சிறந்த மனிதநேய விருது 2022 மலேசியா கோலாலம்பூரில் வழங்கப்பட்டது. Take Care International Foundation என்ற அமைப்பு மக்களுக்காக சேவை செய்யும் சிறந்த மனிதர்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு ஆண்டும் "Pride of Humanity" விருது வழங்கி கௌரவிக்கிறது. தமிழகம் முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரசெடிகளை நட்டு, இயற்கை மற்றும் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தையும் மக்களிடம் எடுத்துக்கூறி பொது வாழ்க்கையிலும் ஈடு படுத்தி கொள்ளும் நடிகர் சௌந்தரராஜாவிற்கு இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர் என்ற விருது மலேஷியா கோலாலம்பூரில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மலேஷியா செலங்கூர் மன்னர் சலாகுத்தீன் அப்துல் அஜிஸ் ஷா, டத்தோ சசிகலா சுப்ரமணியம் ( Deputy Director of police - Malaysia Royal polic...
ஆப்கானிஸ்தானில் ஒரு வருடத்திற்கு பிறகு சினிமா தியேட்டர்கள் திறப்பு!

ஆப்கானிஸ்தானில் ஒரு வருடத்திற்கு பிறகு சினிமா தியேட்டர்கள் திறப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள்
20 வருட போருக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த ஆண்டு ஆட்சியை கைப்பற்றினார்கள். அவர்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்து ஒரு வருடம் முடிந்துள்ளது. தலிபான்கள் ஆட்சிக்கு வந்தது முதல் அவர்கள் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். பெண்கள் தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என்று கூறியுள்ளனர். பெண்கள் வெளியே வந்தால் உடலை முழுவதும் மூடியபடி வர வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பெண்கள் மேல்நிலை கல்வி கற்க தடை பிறப்பித்துள்ளனர். கல்விக்காக வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு சினிமா தியேட்டர்களையும் மூடிவிட்டனர். இந்த நிலையில் ஒரு வருடத்துக்கு பிறகு சினிமா தியேட்டர்களை திறக்க தலிபான்கள் அனுமதி அளித்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானில் ஒரு வருடத்துக்கு பிறகு மீண்டும் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட உள...
இலங்கை உள்நாட்டுப் போரை நோக்கித் தள்ளப்படும் ஆபத்து…முன்னிலை சோசலிசக் கட்சி எச்சரிக்கை!

இலங்கை உள்நாட்டுப் போரை நோக்கித் தள்ளப்படும் ஆபத்து…முன்னிலை சோசலிசக் கட்சி எச்சரிக்கை!

HOME SLIDER, politics, World News, உலக செய்திகள், உலகம்
அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் செயற்பாடுகள் காரணமாக இலங்கை உள்நாட்டுப் போரை நோக்கித் தள்ளப்படும் ஆபத்து இருப்பதாக முன்னிலை சோசலிசக்கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார். ஜூலை 15 ஆம் தேதி தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்க, கொழும்பு வாலுக்காரம விகாரையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.குறைந்தது இரண்டு நாட்களுக்காகவது அதிபர் பதவிக்கு வர வேண்டும் என்ற சிறுப்பிள்ளை தனமான எதிர்ப்பார்ப்புடன் அவர் அதிபர் பதவியை கட்டிப்பிடித்துக்கொண்டார். கோத்தபய ராஜபக்சே பதவி விலகி ரணிலை அந்த இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரவில்லை.1988,1989 ஆம் ஆண்டுகளில் பட்டலந்தை சித்திரவதை முகாமில் கொலை செய்த காலம் என நினைத்துக்கொண்டிருக்கின்றார். இல்லை, இது 2022 ஆம் ஆண்டில் இருக்கும் இலங்கை.இந்த காலத்தில் விளையாட முடியாது.அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையில் இணக...
ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் இருந்து தாக்குதல் நடத்தும் ரஷியா!

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் இருந்து தாக்குதல் நடத்தும் ரஷியா!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
தென் கிழக்கு உக்ரைனில் டினிப்ரோ ஆற்றங்கரையில், ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜியா அணு மின் நிலையம் அமைந்துள்ளது. தொடர் தாக்குதல்களுக்கு பிறகு இந்த அணுமின் நிலையத்தை ரஷிய படைகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தன. அங்கு உக்ரைன் ஊழியர்கள் இன்னும் பணியாற்றி வந்தாலும், அணு மின் நிலைய வளாகம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் முழுவதும் ரஷிய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில், அணு மின் நிலையம் மற்றும் அந்த வளாகம் முழுவதையும் ரஷிய படைகள் தனது ராணுவ தளமாக பயன்படுத்திவருகிறது. அங்கு ஏவுகணை அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை குவித்து வைத்துள்ள ரஷியா, அங்கிருந்தபடி சுற்றி உள்ள பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பயங்கர ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பதால் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதாக...
இலங்கையில் நிலவும் நெருக்கடிக்கு ரஷ்யா தான் பொறுப்பு- உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி!

இலங்கையில் நிலவும் நெருக்கடிக்கு ரஷ்யா தான் பொறுப்பு- உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
இலங்கை மட்டுமின்றி உலகம் முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்யா பயன்படுத்திய முக்கிய தந்திரத்தில் ஒன்று பொருளாதார நெருக்கடி உருவாக்குவதாகும். விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட இடையூறு காரணமாக உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை அனுபவிக்கும் பல நாடுகள் ரஷியாவின் நிகழ்ச்சி நிரலை அனுபவித்துள்ளனர் என்று ஜெலென்ஸ்கி கூறினார். சியோலில் நடைபெற்ற ஆசிய தலைமைத்துவ மாநாட்டில் அண்மையில் உரையாற்றியபோது, ​​இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எடுத்துரைத்த அவர், "அதிர்ச்சியூட்டும் உணவு மற்றும் எரிபொருள் விலையேற்றம் ஒரு சமூக பிளவுக்கு வழிவகுத்தது. அது எப்படி முடிவடையும் என்பது இப்போது யாருக்கும் தெரியாது" என்றார்....