Photos

என் மீதோ, என் ரசிகர்கள் மீதோ அரசியல் சாயம் பூசவேண்டாம்… வாக்களிப்பது மட்டுமே என் அதிகபட்ச அரசியல்பணி – அஜீத் அதிரடி அறிக்கை

என் மீதோ, என் ரசிகர்கள் மீதோ அரசியல் சாயம் பூசவேண்டாம்… வாக்களிப்பது மட்டுமே என் அதிகபட்ச அரசியல்பணி – அஜீத் அதிரடி அறிக்கை

CINI NEWS, HOME SLIDER, NEWS, Photos, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
வாக்களிப்பது மட்டுமே எனது அரசியல் கடமை தமிழ்நாட்டு அரசியலில் கடந்த சில நாட்களாக அஜித் ரசிகர்கள் சிலர் பாஜக-வில் இணைந்ததாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றிற்கு பதிலளிக்கும் விதமாக அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். வாக்களிப்பது மட்டுமே எனது உச்சகட்ட அரசியல் தொடர்பு என்று தெரிவித்திருக்கிறார். மேலும், சமூக வலைத்தளங்களில் மற்ற நடிகர்களைப் பற்றி வசைபாடுவதை தான் என்றுமே ஆதரித்ததில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். ”நான்‌ தனிப்பட்ட முறையிலோ அல்லது நான்‌ சார்ந்த திரைப்படங்களில்‌ கூட அரசியல்‌ சாயம்‌ வந்து விடக்‌கூடாது என்பதில்‌ மிகவும்‌ தீர்மானமாக உள்ளவன்‌ என்பது அனைவரும்‌ அறித்ததே. என்னுடைய தொழில்‌ சினிமாவில்‌ நடிப்பது மட்டுமே என்பதை நான்‌ தெளிவாக புரிந்து வைத்து இருப்பதே இதற்குக் காரணம்‌. சில வருடங்களுக்கு முன்னர்‌ என்‌ ரசிகர்‌ இயக்கங்களை நான
தமிழ் படத்தில்  ஆபாச பட நாயகி மியா ராய்!

தமிழ் படத்தில் ஆபாச பட நாயகி மியா ராய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
விமல் -  ஆஷ்னா ஜவேரி, ஆனந்தராஜ் ,மன்சூரலிகான், சிங்கம்புலி நடிக்க AR முகேஷ் இயக்கத்தில் சர்மிளா மாண்ட்ரே தயாரிப்பில் உருவாகியுள்ள படம் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு ..   இந்த படத்தில் சன்னி லியோனின் உறவு முறை சகோதரி மியா ராய் லியோன் முக்கிய வேடத்தில் முதன் முறையாக அறிமுகமாகிறார். ஐரோப்பிய பட உலகில் ஆபாச பட நாயகிகளில் முதல் பெயர் இவரது பெயர்   தான். இவரை தமிழில் அறிமுகப் படுத்தி உள்ளனர். கவர்ச்சியை வாரி வழங்கி உள்ளார் மியா ராய் லியோன். படம் டிசம்பர் 7 ம் தேதி வெளியாகிறது. போலிஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார். ஆபாச பட நாயகி என்றெ விளம்பர படுத்தி தமிழ் சினிமாவை படுத்தி எடுக்கிறார்களோ...
ஜெய் நடிக்கும் ‘நீயா 2’ படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டைன்மெண்ட்..!

ஜெய் நடிக்கும் ‘நீயா 2’ படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டைன்மெண்ட்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  ஜெய் நடிக்கும் 'நீயா 2' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டைன்மெண்ட் ஜெய், வரலக்ஷ்மி சரத்குமார், ராய் லக்ஷ்மி மற்றும் காத்ரீனா தெரேசா நடிக்கும் நீயா 2 படத்தின் தமிழ்நாட்டு உரிமத்தை புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமும், விநியோக ஸ்டுடியோவுமான 'ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட்' தமிழ்நாட்டின் உரிமத்தை வாங்கியுள்ளது. 1979-ல் வெளியாகி மாபெரும் வெற்றிகண்ட படம் 'நீயா'. தற்போது 'நீயா 2' படத்தை வேறொரு கதை களத்தில் புதிதாக, உணர்ச்சிபூர்வமாக பிரம்மாண்டபடுத்தியிருக்கிறார் இயக்குநர் எல்.சுரேஷ். மேலும், ஜெய், வரலக்ஷ்மி சரத்குமார், ராய் லக்ஷ்மி மற்றும் காத்ரீனா தெரேசா போன்ற மக்களைக் கவரக்கூடிய நடிகர், நடிகைகள் இருப்பது படத்திற்கு கூடுதல் பலம். 'நீயா' படத்தில் அனைவரின் மனதையும் கவர்ந்த 'ஒரே ஜீவன்' பாடலை மறுஉருவாக்கம் செய்திருக்கின்றனர்.  அதோடு, ஷபீர் இச
உயரம் குறைந்த நலிந்த கலைஞர்களுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் நிதி உதவி!

உயரம் குறைந்த நலிந்த கலைஞர்களுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் நிதி உதவி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, Photos, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (TMJA) தீபாவளி மலர் வெளியிடும் நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்தது. செயற்குழு உறுப்பினர் முபாஷர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து தலைவர் கவிதா பேசினார். சங்க செயலாளர் கோடங்கி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக பிக்பாஸ் புகழ் ஆரவ் வெளியிட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பெற்றுக் கொண்டார். விழா மிக சிறப்பாக நடந்தது. மிகவும் சிரமத்தில் இருக்கும் உயரம் குறைந்த நடிகர்களுக்கு சங்கம் சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டது. முன்னதாக செயற்குழு உறுப்பினர் சஞ்சய் சிறப்பு விருந்தினர்களை வாழ்த்தி பேசினார். முடிவில் சங்க துணை தலைவர் ஒற்றன் நன்றி கூறினார்.  
துப்பாக்கிச்சூட்டில் பலியான எஞ்சிய 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய ஐகோர்ட் தடை

துப்பாக்கிச்சூட்டில் பலியான எஞ்சிய 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய ஐகோர்ட் தடை

HOME SLIDER, NEWS, Photos, politics, Uncategorized, செய்திகள்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தாலும் பதப்படுத்தி வைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஏற்கனவே, 7 பேரின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. இதனை, அடுத்து மீதமுள்ள 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய அரசு அனுமதி கோரியிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தங்களது தரப்பு மருத்துவர் இல்லாமல் பிரேத பரிசோதனை செய்ய கூடாது என வழக்கறிஞர் சங்கரச்சுப்பு வாதிட்டார். இதனை அடுத்து, மீதமுள்ள 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய நீதிபதிகள் தடை விதித்தனர். பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 7 பேரின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன்

கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன்

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகைகள்
வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், தற்போது, பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் தமிழில் வீரமாதேவி என்ற படத்திலும் நடித்து வருகிறார். நடிகைகன் அவ்வப்போது தங்களுடைய நிர்வாண அல்லது அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்து வழக்கம். அந்த வகையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை சன்னி லியோன் அவரது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி உள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வடிவுடையான் இயக்கத்தில் சன்னி லியோன் நடிக்கும் வீரமாதேவி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 18-ஆம் தேதி (நாளை) வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நடிகை சன்னி லியோன் அவரது கவர்ச்சி படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.