வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

டிரைலர்கள்

பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் பிரபுதேவாவின் ‘ரேக்ளா’

பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் பிரபுதேவாவின் ‘ரேக்ளா’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் பிரபுதேவாவின் 'ரேக்ளா'   ஒலிம்பியா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அம்பேத் குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கவிருக்கும் புதிய படத்திற்கு 'ரேக்ளா' என பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் டைட்டில் லுக்கை நடிகர் ஆர்யா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். 'வால்டர்' படத்தை இயக்கிய இயக்குநர் அன்பு இயக்கத்தில் தயாராகவிருக்கும் புதிய படம் 'ரேக்ளா'. இதில் கதையின் நாயகனாக பிரபுதேவா நடிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தின் டைட்டில் லுக்கை இன்று நடிகர் ஆர்யா வெளியிட்டார். படத்தில் பணியாற்றும் நடிகைகள் மற்றும் ஏனைய தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபுதேவாவின் நடிப்பில் 58-வது படமாக உருவாகும் 'ரேக்ளா' படத்த...
அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த  ‘வலிமை ‘ திரைப்படத்தின் டிரைலர்

அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த  ‘வலிமை ‘ திரைப்படத்தின் டிரைலர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள்
    இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. போனி கபூர் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். https://www.youtube.com/watch?v=DBArG6AoJw0   இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் 2 பாடல்கள் ,மற்றும் படத்தின் மேக்கிங் வீடியோ ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . வலிமை திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையன்று வெளியாகிறது . இந்நிலையில்  ரசிகர்கள் எதிர்பார்த்த  'வலிமை ' திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. ...
சயின்ஸ் ஃபிக்‌ஷன் கலந்த அம்மா – மகன் பாசம்: ‘கணம்’ டீஸர் வெளியீடு

சயின்ஸ் ஃபிக்‌ஷன் கலந்த அம்மா – மகன் பாசம்: ‘கணம்’ டீஸர் வெளியீடு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, டிரைலர்கள், வீடியோ
  சயின்ஸ் ஃபிக்‌ஷன் கலந்த அம்மா - மகன் பாசம்: 'கணம்' டீஸர் வெளியீடு வித்தியாசமான கதைகளங்கள் எப்போதுமே ரசிகர்களை வசீகரிக்கத் தவறியதில்லை. அப்படி வித்தியாசமான கதைகளங்களை எப்போதுமே ரசிகர்களுக்கு விருந்தாக்கி வரும் நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். அந்நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக திரைக்கு வரவுள்ளது 'கணம்'. இந்தப் படத்தின் டீஸரை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளத்தில் வெகுவாக கவனம் ஈர்த்துள்ளது. பல்வேறு திரையுலகினரும் படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இயக்குநராக அறிமுகமாகியுள்ள ஸ்ரீகார்த்திக் இப் படத்தை குறித்து சொன்னதாவது. "அம்மா பாசத்தை மையமாக வைத்து ஒரு அழகான சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் தான் 'கணம்'. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்கியுள்ளேன். சின்ன பட்ஜெட் படமாக தொடங்கப்பட்டு, தற்போது சயின்ஸ் ஃபிக்‌ஷன் ம...
இணையத்தில் வைரலாகும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் டிரைலர்

இணையத்தில் வைரலாகும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் டிரைலர்

HOME SLIDER, Trailer, டிரைலர்கள், திரைப்படங்கள்
இணையத்தில் வைரலாகும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் டிரைலர் பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்.ஆர்.ஆர்). பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி உள்ளது.   https://www.youtube.com/watch?v=oO8TTM2FgIA&t=1s   டிவிவி தனய்யா தயாரிக்கும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு ஜனவரி மாதம் 7-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக இருக்கும் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது...
வித்தியாசமாக உருவாகியுள்ள சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் டீசர்

வித்தியாசமாக உருவாகியுள்ள சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் டீசர்

CINI NEWS, HOME SLIDER, Trailer, டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
வித்தியாசமாக உருவாகியுள்ள சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் டீசர் சிம்பு மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மாநாடு படத்திற்கு பிறகு சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சிம்பு மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் இப்படத்தில் சிம்பு உடல் எடையை குறைத்து ஒல்லியான தோற்றத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தில் வித்தியாசமாக இருக்கும் சிம்புவின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் ஆவலை கூட்டியுள்ளது.   https://www.youtube.com/watch?v=yuhAAONZvVI&t=4s   இப்படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூர் பகுதியில் ஒரு மாதம் நடைபெற்ற நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வந்தது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ள இப்படத்தின்...
வழக்கறிஞராக சூர்யா மிரட்டும் ஜெய் பீம் டீசர்!

வழக்கறிஞராக சூர்யா மிரட்டும் ஜெய் பீம் டீசர்!

HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
https://youtu.be/pVOd8HAQQZM *ஜெய் பீம் டீஸர் வெளியானது: வழக்கறிஞராக மிளிரும் சூர்யா* தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் பிரத்யேகமாக வெளியாகும் ஜெய் பீம். அதிக எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் நீதிமன்ற வழக்காடலைக் கதைக்களமாகக் கொண்ட ஜெய் பீம் திரைப்படத்தின் டீஸரை ப்ரைம் வீடியோ வெளியிட்டுள்ளது. சூர்யா நாயகனாக நடிக்க டி ஜே ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தை சூர்யா - ஜோதிகா தம்பதியின் 2டி எண்டெர்டெய்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. வெளியாகவுள்ள நீதிமன்ற வழக்காடலைக் கதைக்களமாகக் கொண்ட ஜெய் பீம் திரைப்படத்தின் பரபரப்பான டீஸரை ப்ரைம் வீடியோ வெளியிட்டுள்ளது. சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் 240 நாடுகள் ம...
மாதவனின் ‘ராக்கெட்ரி’ பட டிரெய்லரை பார்த்து கண்ணீர் விட்ட சமந்தா!

மாதவனின் ‘ராக்கெட்ரி’ பட டிரெய்லரை பார்த்து கண்ணீர் விட்ட சமந்தா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகைகள்
மாதவனின் ‘ராக்கெட்ரி’ பட டிரெய்லரை பார்த்து கண்ணீர் விட்ட சமந்தா! நடிகர் மாதவன் தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ள ‘ராக்கெட்ரி’ படத்தில் நம்பி நாராயணனாக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அவரே திரைக்கதை எழுதி, இயக்கி, தயாரிக்கவும் செய்துள்ளார். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரெய்லர், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இந்த டிரெய்லரை பார்த்த பிரபலங்கள் பலரும் மாதவனை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், இந்த டிரெய்லரை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை சமந்தா, “நான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே இந்த டிரெய்லரை பார்த்துவிட்டேன். அப்போதே எனக்கு கண்களில் கண்ணீர் வந்தது. மாதவன் சார் நீங்கள...
முன்னாள் வீரர் யூசுப் பதானுக்கும் கொரோனா தொற்று!

முன்னாள் வீரர் யூசுப் பதானுக்கும் கொரோனா தொற்று!

HOME SLIDER, NEWS, டிரைலர்கள்
முன்னாள் வீரர் யூசுப் பதானுக்கும் கொரோனா தொற்று! இந்தியாவில் பிரபலங்கள் பலர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்பட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளனர். சமீபத்தில் நடிகர் மாதவன், நடிகர் அமீர்கான் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது, இந்தியாவில் பிரபலங்கள் பலர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்பட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளனர். சமீபத்தில் நடிகர் மாதவன், நடிகர் அமீர்கான் ஆகியோருக்கு கொரோனா ...
ரசிகர்களை கவர்ந்த துல்கர் சல்மானின் குருப் டீசர்!

ரசிகர்களை கவர்ந்த துல்கர் சல்மானின் குருப் டீசர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள்
ரசிகர்களை கவர்ந்த துல்கர் சல்மானின் குருப் டீசர்! தமிழில், வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய படங்களில் நடித்தவர் துல்கர் சல்மான், மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் பிரபல மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் ஆவார். துல்கர் நடிப்பில் தற்போது குருப் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குருப் திரைப்படம் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் ஷோபிதா துலிபலா, இந்திரஜித் சுகுமாரன், ஷைன் டாம் சாக்கோ, ஷன்னி வேய்ன், டொவினோ தாமஸ், ஷிவஜித், பத்மனாபன், சுதீஷ், அனுபமா பரமேஸ்வரன், விஜயராகவன் சுரபி லக்‌ஷ்மி, கிரிஷ், குஞ்சன், சாதிக் மற்றும் பரத் ஆகியோர் நடித்துள்ளனர். ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்க நிதின் கே.ஜோஷ் கதையினை எழுதியுள்ளார். திரைக்கத...
கர்ணன்-டீசர் வெளியிடும் தேதி அறிவிப்பு!

கர்ணன்-டீசர் வெளியிடும் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட்டான நிலையில், இப்படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்நிலையில் மார்ச் 23-ம் தேதி டீசர் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.  ...