ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 28
Shadow

திரைப்படங்கள்

ஜி.வி.பிரகாஷுடன் மோதும் சாண்டி!

ஜி.வி.பிரகாஷுடன் மோதும் சாண்டி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜி.வி.பிரகாஷுடன் மோதும் சாண்டி! தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ், படங்கள் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் தற்போது ‘பேச்சிலர்’ படம் தயாராகி வருகிறது. டில்லிபாபு தயாரித்துள்ள இப்படத்தை சதிஸ் செல்வகுமார் இயக்கி இருக்கிறார். இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக இளம் நடிகை திவ்ய பாரதி நடித்துள்ளார். மேலும் முனிஷ்காந்த், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அன்றைய தினத்தில் நடன இயக்குனர் சாண்டி நடிப்பில் உருவாகி இருக்கும் 3.33 (மூணு முப்பத்தி மூணு) திரைப்படமும் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாம்பூ ட்ரீஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக ஜீவிதா கிஷோர் தயாரித்துள்ள இப்படத்திற்கு அறிமுக இயக்குனர் நம்பிக்கை சந்துரு இயக்கி இருக்கிறார்....
சூர்யாவிற்கு ஆதரவாக துணை நிற்கும் ரசிகர்கள்!

சூர்யாவிற்கு ஆதரவாக துணை நிற்கும் ரசிகர்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சூர்யாவிற்கு ஆதரவாக துணை நிற்கும் ரசிகர்கள்! ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘ஜெய் பீம்’. பழங்குடியின மக்களின் வாழ்வியலை மையமாக எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பிரபலங்கள் பலரும் இப்படத்தை பார்த்து வெகுவாக பாராட்டினர். இதனிடையே, ஜெய் பீம் படத்தில் பழங்குடியினர்களை சித்திரவதை செய்யும் குருமூர்த்தி என்கிற போலீஸ் கதாபாத்திரம் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் போல் காட்டப்பட்டு இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்ததோடு, நடிகர் சூர்யாவுக்கு அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்பி இருந்தார். இதற்கு சூர்யாவும் அறிக்கை வாயிலாக பதிலளித்தார். இந்நிலையில், 'ஜெய் பீம்' பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும் இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு வன்...
”டைம் லூப்” ஜாங்கோ தமிழ் சினிமா ரசிகனுக்கு இது ரொம்ப புதுசாம்!

”டைம் லூப்” ஜாங்கோ தமிழ் சினிமா ரசிகனுக்கு இது ரொம்ப புதுசாம்!

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, திரைப்படங்கள், வீடியோ
”டைம் லூப்” ஜாங்கோ தமிழ் சினிமா ரசிகனுக்கு இது ரொம்ப புதுசாம்!   https://youtu.be/r9D0uSbpWaI  
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு! விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நாளை வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர். காமெடி கலந்த ரொமாண்டிக் திரைப்படமாக இது உருவாகி உள்ளது....
மோகன்லாலுக்கு போட்டியாக களமிறங்கும் அதர்வா!

மோகன்லாலுக்கு போட்டியாக களமிறங்கும் அதர்வா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மோகன்லாலுக்கு போட்டியாக களமிறங்கும் அதர்வா! 16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்காயர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்காயர் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்ற படம் தயாராகி உள்ளது. ரூ.100 கோடி செலவில் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் இப்படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். இதில் குஞ்சலி மரைக்காயர் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார். நடிகைகள் கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் அர்ஜுன், சுனில் ஷெட்டி, அசோக் செல்வன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் தயாராகி உள்ள இப்படம் வருகிற டிசம்பர் 2-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், அப...
யாரையும் அவமதிக்கவில்லை – சூர்யா அறிக்கை!

யாரையும் அவமதிக்கவில்லை – சூர்யா அறிக்கை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
யாரையும் அவமதிக்கவில்லை - சூர்யா அறிக்கை! ‘ஜெய்பீம்’ படத்தில் யாரையும் அவமதிக்கவில்லை என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நீதிபதி சந்துரு வக்கீலாக இருந்த போது நடத்திய ஒரு வழக்கில் அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது? என்பதே ‘ஜெய்பீம்’ படத்தின் மையக்கரு. பழங்குடியின மக்கள் நடைமுறையில் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் படத்தில் பேச முயற்சித்து இருக்கிறோம். பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளது போல எந்த ஒரு குறிப்பிட்ட தனி நபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் எனக்கும், படக்குழுவினருக்கும் இல்லை. ஒரு திரைப்படம் என்பது ஆவணப்படம் அல்ல. ‘இந்த திரைப்படத்தின் கதை உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. இதில் வரும் கதாபாத்திர...
விஜய் – சூர்யா திடீர் சந்திப்பு!

விஜய் – சூர்யா திடீர் சந்திப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் - சூர்யா திடீர் சந்திப்பு! நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள சன் ஸ்டூடியோவில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதே சன் ஸ்டூடியோவில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'எதற்கும் துணிந்தவன்' படப்பிடிப்பும் நடைபெற்று வந்தது. இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவதால் இரண்டு படங்களில் படப்பிடிப்பும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சன் ஸ்டூடியோவில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் படப்பிடிப்பு இடைவேளையில் விஜய் - சூர்யா இருவரும் நட்பு ரீதியாக சந்தித்துக் கொண்டதாக கூறப்படுகிறது....
மாநாடு படத்தின் புதிய அப்டேட்

மாநாடு படத்தின் புதிய அப்டேட்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாநாடு படத்தின் புதிய அப்டேட் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நவம்பர் 25ம் தேதி ‘மாநாடு' வெளியிட இருக்கிறார்கள். இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘மாநாடு படத்தின் ஆடியோ ரிலீசுக்கு தயாராக உள்ளோம். விரைவில் தேதியை அறிவிக்க இருக்கிறோம். காத்திருங்கள்’ என்று பதிவு செய்து இருக்கிறார் ...
மீண்டும் சுந்தர்.சி உடன் கூட்டணி அமைக்கும் ராஷி கண்ணா!

மீண்டும் சுந்தர்.சி உடன் கூட்டணி அமைக்கும் ராஷி கண்ணா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மீண்டும் சுந்தர்.சி உடன் கூட்டணி அமைக்கும் ராஷி கண்ணா! நடிகை ராஷி கண்ணா, கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் கபே’ எனும் இந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் தெலுங்கு படங்களில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமான இவர், கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார். பின்னர் அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன், அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது மேதாவி, சைதான் கா பச்சா, சர்தார், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள நடிகை ராஷி கண்ணா, மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் அவர் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சுந்தர்.சி இயக்கிய ‘அரண்மனை 3’ படத்தில் ஹீரோயினாக நடித்த ராஷி கண்ணா தற்போது ம...
மீண்டும் இணையும் ‘அண்ணாத்த’ கூட்டணி!

மீண்டும் இணையும் ‘அண்ணாத்த’ கூட்டணி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மீண்டும் இணையும் ‘அண்ணாத்த’ கூட்டணி! தமிழ், தெலுங்கில் பிரபல ஒளிப்பதிவாளராக வலம்வந்த சிவா, கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து 4 படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளியன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலை வாரிக்குவித்து வருகிறது. இதையடுத்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்க உள்ள இயக்குனர் சிவா, இப்படத்தை முடித்த பின்னர், மீண்டும் ரஜினியுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தை ரஜினியின் மகள் சவுந்தர்யா தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது....