சினி நிகழ்வுகள்

சினிமா தயாரிப்பாளரிடம் 40 லட்சம் மோசடி செய்த சென்னை தியேட்டர் உரிமையாளர் தம்பதி..!

சினிமா தயாரிப்பாளரிடம் 40 லட்சம் மோசடி செய்த சென்னை தியேட்டர் உரிமையாளர் தம்பதி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  சினிமா தயாரிப்பாளரிடம் 40 லட்சம் மோசடி செய்த தியேட்டர் உரிமையாளர் தம்பதி..! சென்னை திருவெற்றியூர் எம்.எஸ்.எம். தியேட்டர் உரிமையாளர்கள் சுசீலா இவரது கணவர் தவமணி. இவர்களுடன் சினிமா தயாரிப்பாளர் தங்களது தியேட்டர் தொழிலை மேம்படுத்த பங்குதாரராக இணைத்து கொண்டு படங்கள் வாங்கி வெளியிடும் தொழில் செய்து வந்தார்கள். இந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு MSM தியேட்டரை சீரமைக்க 25 லட்சம் ரூபாயை தயாரிப்பாளர் தங்கராஜிடம் கடனாக கேட்டிருக்கிறார் சுசீலா. இந்த கடனுக்காக ராயபுரத்தில் உள்ள சொத்தை அடமானமாக எழுதி கொடுத்திருக்கிறார்கள். இந்த தொகையை தனது வங்கியில் இருந்து தங்கராஜ் காசோலை மூலம் சுசீலாவுக்கு வழங்கி இருக்கிறார். கடன் வாங்கிய சில மாதங்களில் கணவன் மனைவியான சுசீலா-தவமணி தம்பதியின் வரவு செலவு கணக்குகளில் தவறு இருப்பது தெரிந்ததும் அவர்களோடு இணைந்து செய்து வந்த தொழிலில் இருந்து தங்கராஜ் விலக
ரூ.5 கோடி செலவில் செட்டப்  புட்பால் மைதானம் … அட்லியின் விஜய்63 ஸ்பெஷல்!

ரூ.5 கோடி செலவில் செட்டப் புட்பால் மைதானம் … அட்லியின் விஜய்63 ஸ்பெஷல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
ரூ.5 கோடி செலவில் செட்டப் புட்பால் மைதானம் ... அட்லியின் விஜய்63 ஸ்பெஷல்! தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கி சென்னையில் பல்வேறு இடத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் ஷூட்டிங் தொடங்கி 2 மாதத்தில் 60% படப்பிடிப்பு முடிவுயடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கால்பந்தை மையமாக கொண்டு உருவாகிவரும் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிக்காக சென்னையில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் பிரமாண்டமாக கால்பந்தாட்ட அரங்கம் தயாராகி வருகிறது. அப்பணிகள் முடிந்த பின் தொடர்ந்து 50 நாட்கள் அங்கு தான் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. இந்த அரங்கம் தயாரிப்புப் பணிகளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த மைதானம் அமைக்க செலவு மட்டும் ரூ.5 கோடியாம். அம்மாடி... ஒரு சினிமா பட்ஜெட்டில் ஒரு ஷூட்டிங் ஸ்பாட் செலவான்னு வாய பொளக்காதீங்க... அட்லி டைரக்டரு... விஜய் நடிகரு...
கோடையை குளிர்விக்க கவர்ச்சி காமெடி கமர்சியலாக வரும் லாரன்சின் காஞ்சனா3

கோடையை குளிர்விக்க கவர்ச்சி காமெடி கமர்சியலாக வரும் லாரன்சின் காஞ்சனா3

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சன் பிக்சரஸ் வழங்க ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் முனி 4 காஞ்சனா 3. ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். கதா நாயகிகளாக வேதிகா, ஓவியா, நிக்கி தம்போடி நடிக்கிறார்கள். மற்றும் சூரி, கோவை சரளா ஸ்ரீமன்,தேவதர்ஷினி, டெல்லி கணேஷ், சம்பத்ராம், அனுபமாகுமார்,ஆர்.என்.ஆர்.மனோகர், இவர்களுடன் வில்லன்களாக தருண் அரோரா, கபீர்சிங், அஜய்கோஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு  -  வெற்றி பழனிச்சாமி,  சர்வேஷ் முராரி. இசை  -     டூபாடு பின்னணி இசை   -    எஸ்.தமன் எடிட்டிங் -  ரூபன் கலை -   ஆர்.ஜனார்த்தன் ஸ்டண்ட்  -       சூப்பர் சுப்பராயன். நடனம்  -    ராகவா லாரன்ஸ் பாடல்கள் -    விவேகா, மதன்கார்க்கி, சரவெடி சரவணன். தயாரிப்பு மேற்பார்வை  -  விமல்.ஜி   கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ராகவா லாரன்ஸ். சன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா
ஜி.வி.பிரகாஷின் வித்தியாசமான குப்பத்து ராஜா

ஜி.வி.பிரகாஷின் வித்தியாசமான குப்பத்து ராஜா

CINI NEWS, HOME SLIDER, Uncategorized, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களால் 'டான்ஸ் மாஸ்டர்  ' என்றே அழைக்கப்படுகிறார் பாபா பாஸ்கர். நவநாகரீக நடன அமைப்புகளை கொடுக்க அவர் பெரும் முயற்சிகள் எடுத்தாலும், உள்ளூர் விஷயங்களை கலந்து கொடுக்கவும் தவறியதில்லை. அதனால் தான் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்த நடன இயக்குனராகவும் இருக்கிறார். பல கொண்டாடப்படும் வெற்றி பாடல்களுக்கு நடனம் அமைத்த பாபா பாஸ்கர், குப்பத்து ராஜா படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறார். சமீபத்தில் வெளியான குப்பத்து ராஜா டிரெய்லர் 'லோக்கல்' பின்னணியை கொண்டிருக்கிறது என்று கூறப்படுகிறது, இது குறித்து பாபா பாஸ்கர் கூறும்போது, "உண்மையில் நான் 'லோக்கல்' என்ற வார்த்தையை ஏற்றுக் கொள்ளவில்லை, மாறாக அதை 'நேட்டிவிட்டி' என்று தான் அழைப்பேன். நம்மை சுற்றியுள்ள மக்கள் கிராமங்கள் மற்றும் அண்டை மாநிலங்களின் நேட்டிவிட்டியை பார்த்து வியக்கிறார்கள். சேரிகள் என்பவை உ
அக்னி தேவி விவகாரத்தில் அடாவடி செய்த பாபி சிம்ஹாவுக்கு ரெட் போட திட்டம்!

அக்னி தேவி விவகாரத்தில் அடாவடி செய்த பாபி சிம்ஹாவுக்கு ரெட் போட திட்டம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  'அக்னிதேவி'  படம் பல தடைகளை தாண்டி ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த வாரம் கோலாகலாமாக ரிலீஸாகி, கோபதாபங்களுடன் மல்லுக்கட்டு நடந்துகொண்டிருக்கும் 'அக்னிதேவி' என்ற தமிழ்த் திரைப்படம் 300 க்கும் அதிகமான தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. எழுத்தாளர் ராஜேஷ்குமார் நாவலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த அக்னி தேவி ரோஜா நாயகி மதுபாலாவின் வில்லி கெட்டப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்தில் நடிக்க ஒத்துக் கொண்டு, படப்பிடிப்பில் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து கொண்டு குடைச்சல் கொடுத்த பாபிசிம்ஹாவின் டார்ச்சர் தாங்காமல் அவரை தேவையான அளவு 'நடிக்க' வைத்து அனுப்பி விட்ட இயக்குநரும், இணைத் தயாரிப்பாளருமான ஜான் தான் நினைத்தபடி, எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் எழுத்தை மெருகேற்றி, ரசிகர்களுக்குப் பிடிக்கும் வகையில் படமாக்கினா
சூர்யாவின் NGK ரிலீஸ் தேதி அறிவிப்பு… ரசிகர்கள் குஷி..!

சூர்யாவின் NGK ரிலீஸ் தேதி அறிவிப்பு… ரசிகர்கள் குஷி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  NGK வருமா வராதா... வருமா எப்ப வரும்... இப்படி ரொம்ப நாட்களாக ரசிகர்களின் விடை தெரியா கேள்விக்கு இன்று விடை கிடைத்தது. மே 31 படம் ரிலீஸ் என தயாரிப்பாளர் தரப்பு அறிவித்து பலர் முகத்தில் கரி பூசி உள்ளது. சூர்யாவுடன் செல்வராகவன் முதன்முறையாக இணைந்துள்ள படம் ‘என்.ஜி.கே.’ (‘நந்த கோபாலன் குமரன்’) இதில் சூர்யாவுடன் ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜெகபதி பாபு, பாலா சிங், சம்பத் ராஜ், மன்சூரலிகான், முரளி சர்மா ஆகியோரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை, ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் வெளியிடுகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 14-ம் தேதி இதன் டீஸர் ரிலீஸானது. இதற்கிடையில் இயக
பீல்டு அவுட் நேரத்தில் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கும் ராதாரவி குடும்பத்து பெண்களை நினைத்து பரிதாப்படுகிறேன் – நயன்தாரா அறிக்கை

பீல்டு அவுட் நேரத்தில் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கும் ராதாரவி குடும்பத்து பெண்களை நினைத்து பரிதாப்படுகிறேன் – நயன்தாரா அறிக்கை

CINI NEWS, HOME SLIDER, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  ராதாரவி மீது உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்கு மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகை நயன்தாரா. நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் ராதாரவி, நடிகைகள் குறித்த பேசிய கருத்து சர்ச்சைக்கு வழி வகுத்துள்ளது. நடிகர் ராதாரவி பேசுகையில், “நடிகை நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார் எனத் தொடங்கி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகர் ராதாரவியின் இந்தப் பேச்சுக்கு திரைத்துறையினர் பலரும், சமூகவலைதளங்களில் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். இதையடுத்து நடிகர் ராதாரவி திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திமுக தலைவரின் உடனடி நடவடிக்கைக்கு நன்றி தெரி
ஆபாச பேச்சு ராதாரவிக்கு நடிகர் சங்கம் கண்டனம்!

ஆபாச பேச்சு ராதாரவிக்கு நடிகர் சங்கம் கண்டனம்!

HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    பெறுநர் : திரு.ராதாரவி அவர்கள், எண்.9 1வது தெரு, போயஸ் ரோடு, தேனாம்பேட்டை, சென்னை – 600018. அன்புடையீர் வணக்கம் ..! சமீபத்தில் நடந்த "கொலையுதிர் காலம்" திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பெண்களை கொச்சைப்படுத்துவது போல் நீங்கள் பேசிய “இரட்டை அர்த்த வசனங்களை கேட்டு உண்மையிலேயே மனது மிகவும் வருந்துகிறது ..! இதை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாகக்கண்டிக்கிறது..! இந்த மேடையில் மட்டும் அல்ல, பல காலங்களாக தங்களுடைய இணையதள நேர்காணலிலும், பொது மேடைகளிலும், திரைப்பட விழாக்களிலும் இதுபோல் இரட்டை அர்த்த வசனங்களையும், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள்..! இது ஊடகங்களின் மூலம் உலகெங்கும் பரவி இருக்கிறது ..! இது ஒட்டுமொத்த திரைத்துறைக்கும், மற்ற நடிகர்களுக்கும், அதில் பங்காற்றக்கூடிய பெண்களுக்கும், ஒரு அவமானமான சூழ்நிலையையும், மனஉ