சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

விளையாட்டு செய்திகள்

அடுத்த இரு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் நடக்கிறது !

அடுத்த இரு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் நடக்கிறது !

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்தது. இதில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில், அடுத்த இரு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை நடத்தும் வாய்ப்பையும் இங்கிலாந்துக்கே ஒதுக்குவது என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக ஐ.சி.சி. தலைமை செயல் அதிகாரி ஜெப் அலார்டிஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். இதன்படி 2023-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி ஆட்டம் லண்டன் ஓவலிலும், 2025-ம் ஆண்டு இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சிலும் நடைபெறுகிறது. இதற்கான தேதி விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா 70 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்கா 2-வது இடத்த...
ஆஸ்திரேலியாவுடனான டி20 போட்டி- இந்திய ஆடும் லெவனில் இடம் பிடிக்க 4 வீரர்களுக்கு இடையே கடும் போட்டி!

ஆஸ்திரேலியாவுடனான டி20 போட்டி- இந்திய ஆடும் லெவனில் இடம் பிடிக்க 4 வீரர்களுக்கு இடையே கடும் போட்டி!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுடன் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட முடிவு செய்தது. அதன்படி ஆரோன்பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி மொகாலியில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்திய அணி சமீபத்தில் நடந்த 20 ஓவர் ஆசிய கோப்பையில் மோசமாக ஆடியது. இதனால் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறது. அதை ஈடு செய்யும் வகையில் ஆஸ்திரேலிய தொடரில் வீரர்கள் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயம் உள்ளது. ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. 11 பேர் கொண்ட வீரர்களை தேர்வு செய்வ...
சர்வதேச, தேசிய போட்டிகளில் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு விருது: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!

சர்வதேச, தேசிய போட்டிகளில் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு விருது: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!

HOME SLIDER, NEWS, politics, sports, செய்திகள், தமிழக அரசியல், விளையாட்டு செய்திகள்
சர்வதேச, தேசிய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கு விருது வழங்கும் விழா சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, 2019-2021 ஆண்டுகளில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். விழாவில் 1,130 விளையாட்டு வீரர்களுக்கு காசோலைகள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:- தமிழகத்தில் விளையாட்டு துறை வேகமாக செயல்பட்டு வருகிறது. சிலம்பம், கபடி போட்டிகளுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி முடிந்த நிலையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி, சென்னையில் இன்று தொடங்குகிறது. முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவு இன்று துவங்குகிறது. பிப்ரவரி மாதம் வரை பல்வேறு விளையாட்டு போட்டிகள் நட...
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் நாளை மோதல்!

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் நாளை மோதல்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
15-வது ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சு நாட்டில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன. இரண்டு பிரிவுகளாக அந்த அணிகள் பிரிக்கப்பட்டுள்ள நிலையில் 'ஏ' பிரிவில் 7 முறை சாம்பியனான இந்தியா, 2 முறை ஆசிய கோப்பையை வென்ற பாகிஸ்தான், ஆங்காங் ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் 5 முறை சாம்பியனான இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'சூப்பர் 4' சுற்றுக்கு தகுதி பெறும். 'சூப்பர் 4' சுற்றில் 4 அணிகள் விளையாடும். இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும். இந்நிலையில் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் 'பி' பிரிவில் உள்ள இலங்கை-ஆப்கான...
ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றது ஹாங்காங்!

ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றது ஹாங்காங்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் மொத்தம் 6 நாடுகள் பங்கேற்கின்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 நாடுகள் நேரடியாக விளையாடுகின்றன. ஒருநாடு மட்டும் தகுதி சுற்றில் இருந்து நுழையும். இதில் ஹாங்காங், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், சிங்கப்பூர் ஆகிய 4 நாடுகள் பங்கேற்று விளையாடின. சிங்கப்பூர் தான் மோதிய 2 ஆட்டத்திலும் தோற்று வாய்ப்பை இழந்தது. நேற்று இரவு நடந்த கடைசி 'லீக்' ஆட்டங்களில் குவைத்-சிங்கப்பூர், ஆங்காங்-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. குவைத்துக்கு எதிரான ஆட்டத்தில் சிங்கப்பூர் அணி 19.5 ஓவரில் 104 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் குவைத் அணி 7.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 105 ரன் எடுத்து 6 விக்கெட் வி...
இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் தீபக் ஹூடா புதிய சாதனை!

இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் தீபக் ஹூடா புதிய சாதனை!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
நேற்று நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 38.1 ஓவரில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய தரப்பில் ஷிகர் தவான், ஷுப்மன் கில் தலா 33 ரன்கள் எடுத்தனர். தீபக் ஹூடா 25 ரன்கள் அடித்தார். அதிபட்சமாக சஞ்சு சாம்சன் 43 ரன்கள் அடித்து களத்தில் இருந்தார்.இறுதியில், இந்தியா 25.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் இந்த வெற்றியின் மூலம் இந்திய ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதாவது தனது அறிமுக போட்டியில் இருந்து நேற்றைய போட்டிவரை அவர் இந்தியாவுக்காக மொத்தம் 16 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அனைத்து...
ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட் எடுப்பது முக்கியம்: இந்திய கேப்டன் கே.எல்.ராகுல் !

ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட் எடுப்பது முக்கியம்: இந்திய கேப்டன் கே.எல்.ராகுல் !

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அந்நாட்டின் ஹராரே நகரில் நடைபெற்ற முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் கே.எல்.ராகுல், ஸ்விங் மற்றும் வேகப் பந்து வீச்சுக்கு சாதமாக ஆடுகளம் இருந்தது என்றார். இந்திய பந்து வீச்சாளர்கள் சரியான முறையில் பந்து வீசியதை பார்க்க சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட்டுகளை வீழ்த்துவது முக்கியமானது என்று அவர் தெரிவித்தார். நாங்கள் நிறைய கிரிக்கெட் விளையாடுகிறோம், காயங்கள் அதன் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். நான் களத்தில் இருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். விளையாட்டிலிருந்து விலகி இருப்பது கடினம் என்றும் அவர் கூறினார். நாங்கள்...
இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமையை ரத்து செய்தது பிபா !

இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமையை ரத்து செய்தது பிபா !

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் அக்டோபர் மாதம் 11-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. 2 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டி முதல் முறையாக இந்தியாவிலும் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை பிபா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. கால்பந்து கூட்டமைப்பில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததால் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டால் மீண்டும் உரிமம் வழங்கப்படும் என பிபா அறிவித்துள்ளது. மேலும், வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடக்கவிருந்த மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடரையும் இடமாற்றம் செய்ய பிபா முடிவு செய்துள்ளது....
காமன்வெல்த் போட்டி: சிகரம் தொட்ட இந்திய வீரர்கள்!

காமன்வெல்த் போட்டி: சிகரம் தொட்ட இந்திய வீரர்கள்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, தென் ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து, நியூசிலாந்து, வேல்ஸ், கென்யா, நைஜீரியா உள்பட 72 நாடுகளை சேர்ந்த 5054 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். இந்தியா சார்பில் 106 வீரர்கள், 104 வீராங்கனைகள் என மொத்தம் 210 பேர் 16 விளையாட்டுகளில் கலந்து கொண்டனர். போட்டியின் நிறைவில் இந்தியா பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது. ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து , கனடா 2-வது, 3-வது இடங்களில் உள்ளன. இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் உள்பட 61 பதக்கங்களை வென்று வரலாறு படைத்துள்ளது. குறிப்பாக மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ரவி குமார் தயா, வினேஷ் போகத், நவீன் ஆகியோர் தங்கம் வென்றனர். இதேபோல் சர்வதேச அ...
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மகளிர் பிரிவில் மேலும் ஒரு தங்கம்!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மகளிர் பிரிவில் மேலும் ஒரு தங்கம்!

HOME SLIDER, sports, விளையாட்டு செய்திகள்
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இன்று இந்திய குத்துச்சண்டை வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஏற்கனவே இரண்டு தங்கம் வென்ற நிலையில், மகளிர் பிரிவில் மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவில் நடப்பு உலக சாம்பியனான நிகாத் சரீன் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இறுதிச்சுற்றில் இவர் வடக்கு அயர்லாந்தின் மெக்னாலை வீழ்த்தினார். இதன்மூலம் இந்தியா 17 தங்கம், 12 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 48 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது.  ...