புதன்கிழமை, ஏப்ரல் 24
Shadow

Assembly news

தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம்விடுவதை தடுத்துநிறுத்த வேண்டும் – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம்விடுவதை தடுத்துநிறுத்த வேண்டும் – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த படகுகளை இலங்கை அரசு அரசுடைமையாக்கி தங்கள் வசம் வைத்து இருந்தது. இந்த படகுகளை விடுவிக்க வேண்டும் என மீனவர் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். தமிழக அரசியல் கட்சிகளும் அதனை வலியுறுத்தின. இதற்கிடையே, இந்த படகுகளை ஏலம் விடும் பணி இன்று தொடங்கியது. முதல் கட்டமாக 65 படகுகள் இன்று ஏலம் விடப்படுகின்றன. இலங்கையில் உள்ள காரை நகரில் ஏலம் விடுவதற்கான பணிகளை இலங்கை அரசு மேற்கொண்டது. அடுத்தடுத்த நாட்களில் மற்ற படகுகளும் ஏலம் விடப்படுகின்றன. வரும் 11-ம் தேதிக்குள் மீதமுள்ள அனைத்து படகுகளையும் ஏலத்தில் விட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் முயற்சிகளை மத்திய அரசு தடுத்து நிறுத...
பணக்காரர்களுக்கு ஒரு இந்தியா, ஏழைகளுக்கு ஒரு இந்தியா உருவாகிவிட்டது- மக்களவையில் ராகுல் காந்தி பாய்ச்சல்!

பணக்காரர்களுக்கு ஒரு இந்தியா, ஏழைகளுக்கு ஒரு இந்தியா உருவாகிவிட்டது- மக்களவையில் ராகுல் காந்தி பாய்ச்சல்!

Assembly news, NEWS, செய்திகள்
பணக்காரர்களுக்கு ஒரு இந்தியா, ஏழைகளுக்கு ஒரு இந்தியா உருவாகிவிட்டது- மக்களவையில் ராகுல் காந்தி பாய்ச்சல்! மக்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியதாவது:- ஜனாதிபதியின் உரையில் எந்த பிரச்சினை பற்றியும் ஆழமாக குறிப்பிடப்படவில்லை. நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அந்த உரையில் எதுவும் இல்லை. வேலைவாய்ப்பின்மை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஒரு குடிமகனாக நாட்டில் நடைபெற்று வரும் விஷயங்கள் குறித்து கவலை கொண்டுள்ளேன். 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வேலையில்லாத் திண்டாட்டம் நாட்டில் நிலவுகிறது. இந்தியா என்பது கூட்டாட்சி, ராஜாங்கம் இல்லை. தமிழகத்தில் நீட் குறித்த விவகாரத்துக்கு நீங்கள் (மத்திய அரசு) செவிசாய்க்கவில்லை. தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் அதன் கண்ணியம், கலா...
பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல்- வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை!

பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல்- வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை!

Assembly news, HOME SLIDER, NEWS, செய்திகள்
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. இன்று (செவ்வாய்க்கிழமை) பாராளுமன்றத்தில் 2022-23-ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை (பட்ஜெட்) மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 4-வது பட்ஜெட் ஆகும். முன்னதாக இன்று காலை 9 மணிக்கு நிர்மலா சீதாராமன் தனது நிதி அமைச்சக மூத்த அதிகாரிகளுடன் பட்ஜெட் தாக்கல் செய்ய புறப்பட்டார். முதலில் அவர் குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்று ஜனாதிபதியை சந்தித்துப் பேசினார். பிறகு பாராளுமன்றத்துக்கு புறப்பட்டு வந்தார். அங்கு பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மத்திய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 11 மணிக்கு பாராளுமன்ற மக்களவையில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அனைவரும் எதிர்பார்த்தது போன்று பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் வக...
பட்ஜெட் தாக்கலுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் – மத்திய அரசு வேண்டுகோள்!

பட்ஜெட் தாக்கலுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் – மத்திய அரசு வேண்டுகோள்!

Assembly news, NEWS, politics, செய்திகள்
பட்ஜெட் தாக்கலுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - மத்திய அரசு வேண்டுகோள்! பாராளுமன்றத்தில் இன்று 2022-23 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இதையொடடி மத்திய நிதியமைச்சகத்திற்கு காலை 8.45 மணிக்கு அவர் வருகை தந்தார். இதேபோல் நிதித்துறை இணை மந்திரிகள் பங்கஜ் சவுத்ரி மற்றும் பகவத் காரத் ஆகியோர் நிதி அமைச்சகத்திற்கு வருகை தந்தனர். இதைத் தொடர்ந்து சம்பிரதாய முறைப்படி பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை, மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணை மந்திரிகள் மற்றும் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் சந்தித்தனர். குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நிதித்துறை இணை மந்திரி பகவத் காரத் ஆளுங்கட்சியாக இருந்தாலும் , எதிர...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க தனித்து போட்டி!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க தனித்து போட்டி!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க தனித்து போட்டி! அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து பா.ஜனதா நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க இடப்பங்கீடு தொடர்பாக பா.ஜனதா தலைவர்கள் அ.தி.மு.க.வினருடன் பேச்சு நடத்தினார்கள். அப்போது 20 சதவீத இடங்கள் தர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் அ.தி.மு.க. தரப்பில் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே வார்டுகள் ஒதுக்கீடு செய்ய முடியும் என்று கூறிவிட்டனர். இதனால் பா.ஜனதா அதிர்ச்சி அடைந்தது. நாகர்கோவில், கோவை மேயர் பதவிகளை ஒதுக்க வேண்டும். மேலும் வார்டுகளை பொறுத்தவரை தொகுதிக்கு ஒன்று வீதம் 21 வார்டுகள் தரவேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தி வருகிறது. ஆனால் அ.தி.மு.க. தரப்பில் அதை ஏற்கவில்லை. இதனால் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் ஏற்படவில்லை. இந்த நிலையில் அ.தி.மு. க.வினர் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று அதிரடியாக வெளியிட்டனர்...
பட்ஜெட் கூட்டத்தொடர் – பாராளுமன்ற முதல் அமர்வு இன்று கூடுகிறது!

பட்ஜெட் கூட்டத்தொடர் – பாராளுமன்ற முதல் அமர்வு இன்று கூடுகிறது!

Assembly news, HOME SLIDER, NEWS, செய்திகள்
பட்ஜெட் கூட்டத்தொடர் - பாராளுமன்ற முதல் அமர்வு இன்று கூடுகிறது! பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட கூட்டத்தொடர் இன்று தொடங்கி பிப்ரவரி 11-ம் தேதி வரை நடைபெறும். அடுத்தகட்ட கூட்டத்தொடர் மார்ச் 14-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு இன்று கூடுகிறது. முதல் நாள் பாராளுமன்ற இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்உரையாற்றுகிறார். அப்போது அவர் கடந்த ஆண்டு மத்திய அரசு அமல்படுத்திய நலத் திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றிய விவரங்களை அறிவிப்பார். பாராளுமன்றத்தில் 2022- 2023ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்வார். இந்த பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் மற்றும் வரிச்சலுகைகள் அதிகளவ...
4 கோடி மக்களை வறுமையில் தள்ளிய மத்திய அரசு- ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

4 கோடி மக்களை வறுமையில் தள்ளிய மத்திய அரசு- ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
4 கோடி மக்களை வறுமையில் தள்ளிய மத்திய அரசு- ராகுல் காந்தி குற்றச்சாட்டு! மத்திய அரசின் தவறான பொருளாதார செயல்பாடுகளால் இந்தியாவில் 4 கோடி போ் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளாா். இதுதொடா்பாக ட்விட்டரில் அவர் கூறியதாவது, நல்ல நேரம் வரப்போகிறது என கூறி ஆட்சியைப் பிடித்தவா்கள் என்ன செய்துள்ளாா்கள்? ‘நாம் இருவருக்கு மட்டுமே நலன்’ என்ற கொள்கையை பின்பற்றி நமது சகோதர, சகோதரிகளில் 4 கோடி பேரை வறுமை நிலைக்கு தள்ளியுள்ளனர். 4 கோடி என்பது வெறும் எண்கள் அல்ல. ஒவ்வொருவரும் நம் நாட்டில் வாழும் மனிதா்கள். பொருளாதாரரீதியாக சிறப்பாக வாழும் வாய்ப்பு இருந்தும் மத்திய அரசின் தவறான கொள்கைகளால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பாஜகவால் இந்தியாவுக்கு தோல்வியே ஏற்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளாா். இந்தியாவில் கொரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட ...
ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்தான் புதிய இந்தியாவின் முதுகெலும்பு- பிரதமர் மோடி!

ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்தான் புதிய இந்தியாவின் முதுகெலும்பு- பிரதமர் மோடி!

Assembly news, HOME SLIDER, NEWS, செய்திகள்
ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்தான் புதிய இந்தியாவின் முதுகெலும்பு- பிரதமர் மோடி! இந்தியாவில் வேளாண்மை, சுகாதாரம், நிறுவன நடைமுறைகள், விண்வெளி, தொழில்துறை, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 150 ஸ்டார்ட் அப் தொழில் முனைவோருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடி வருகிறார். வேர்களிலிருந்து வளர்ச்சி, டிஎன்ஏ-வை அசைத்தல், உள்ளுரிலிருந்து உலகம் வரை, தொழில்நுட்பத்தின் எதிர்காலம், உற்பத்தித்துறையின் சாம்பியன்களை உருவாக்குதல், நீடித்த வளர்ச்சி என்ற மையப்பொருள்கள் அடிப்படையில் தொழில்முனைவோர் 6 பணிக்குழுக்களாக பிரிக்கப்பட்டு, பிரதமர் மோடியுடன் உரையாடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பேசியதாவது:- ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்தான் புதிய இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கப்போகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகளை நிறைவு செய்தவுடன், ஸ்டார்ட்-அப் நிறுவனங்...
5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு

5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு

Assembly news, HOME SLIDER, politics, செய்திகள்
  உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தொடர்பான அறிவிப்பை, தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா இன்று அறிவித்தார். அவர் கூறியதாவது:- உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தேர்தல்களை நடத்தப்படும். தேர்தல் பணியில் ஈடுபடும் மத்திய, மாநில அதிகாரிகள் அனைவரும் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்கவேண்டும். ஆன்லைன் மூலமாக வேட்புமனு தாக்கல் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. 80 வயதைக் கடந்த மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு அளிக்கலாம். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, பிரசாரங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வீடுவீடாக பிரசாரம் செய்ய 5 நபர்களுக்கு மேல் செல்லக்கூடாது. தேர்தல் அறிவிக்கை ஜனவரி 14ம் தேதி வெளியிடப்ப...
காலி இருக்கைகளை பார்த்து பேச பிரதமரை அனுப்பியிருக்க வேண்டும் – அகிலேஷ் யாதவ் கிண்டல்

காலி இருக்கைகளை பார்த்து பேச பிரதமரை அனுப்பியிருக்க வேண்டும் – அகிலேஷ் யாதவ் கிண்டல்

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
காலி இருக்கைகளை பார்த்து பேச பிரதமரை அனுப்பியிருக்க வேண்டும் - அகிலேஷ் யாதவ் கிண்டல் பிரதமர் மோடி பஞ்சாப் சென்றபோது விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பிரதமரின் வாகனம் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் மேம்பாலத்தில் 20 நிமிடங்களுக்கும் மேல் நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு கருதி பிரதமரின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. பிரதமர் அங்கிருந்து டெல்லி திரும்பினார். https://www.facebook.com/100002752624675/videos/433964101533391/ பிரதமருக்கான பாதுகாப்பில் குறைபாடு இருந்ததாக பாஜகவினர் தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றனர். பஞ்சாப் அரசு திட்டமிட்டே அலட்சியமாக செயல்பட்டதாகவும், பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் பாஜகவினர் தெரிவித்து போராட்டம் நடத்திவருகின்றனார். ஆனால்,  பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் பொதுக்கூட்டத்திற்கு ...