வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

Tag: கொரோனா

புதுவையில் கொரோனா 3-ம் அலை அறிகுறி: பொதுமக்கள் பீதி!

புதுவையில் கொரோனா 3-ம் அலை அறிகுறி: பொதுமக்கள் பீதி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
புதுவையில் கொரோனா 3-ம் அலை அறிகுறி: பொதுமக்கள் பீதி! பெரும்பாலும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் அலை பரவ தொடங்கியது. 2-ம் அலையில் முதியோர் மட்டுமின்றி நடுத்தர வயதினரும் இளைஞர்களும் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகினர் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோருக்கு தொற்று பரவி அதிகபட்சமாக நாளுக்கு 30 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் கொரோனா  பரவலை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கை அமல்படுத்தியது. மேலும் தடுப்பூசி போடும் பணியையும் தீவிரப்படுத்தியது. இதன் காரணமாக கொரோனா  பரவல் படிப்படியாக குறைந்து வந்தது. மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் 6 ஆயிரத்து 367 பேரை பரிசோதித்ததில் 103 பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டது. தொற்று சதவீதம் 1.62 சதவீதமாக குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர் கடந்த ஜூன் 6-ந் தேதி வரை மாநிலத்தில் 4 ஆயிரத்து 719 குழந்தைகள் தொற்ற...
புதிய தளர்வுகள் அமல்- தமிழகம் முழுவதும் பஸ்கள் இயக்கம்!

புதிய தளர்வுகள் அமல்- தமிழகம் முழுவதும் பஸ்கள் இயக்கம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
புதிய தளர்வுகள் அமல்- தமிழகம் முழுவதும் பஸ்கள் இயக்கம்! தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் மே மாதம் 24-ந்தேதி முதல் 2 வாரத்திற்கு தளர்வில்லா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு நோய் தொற்று சற்று தணிந்ததால் ஜூன் 7-ந்தேதி சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதில் இருந்து ஒவ்வொரு வாரமும் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி 5 தடவை தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நோய் தாக்கத்தின் அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தளர்வுகள் அறிவிப்பதற்கு முன்னதாக மருத்துவ நிபுணர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துவது வழக்கம். அதன்படி கடந்த 2-ந்தேதி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவர்கள் மேலும் புதிய தளர்வுகளை அறிவிக்கலாம் என்று யோசனை தெரிவித்தனர். அதன்படி புதிய தளர்வுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள...
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு!

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு! தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு வருகிற 21-ந்தேதி வரை அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28-ந்தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மொத்த மாவட்டங்களை 3 ஆக பிரித்து ஜூன் 28-ந்தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது....
கொரோனா நிவாரண நிதி- ரே‌ஷன் கடைகளில் ரூ.2 ஆயிரம் விநியோகம் தொடங்கியது!

கொரோனா நிவாரண நிதி- ரே‌ஷன் கடைகளில் ரூ.2 ஆயிரம் விநியோகம் தொடங்கியது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கொரோனா நிவாரண நிதி- ரே‌ஷன் கடைகளில் ரூ.2 ஆயிரம் விநியோகம் தொடங்கியது! தேர்தலின்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் ரொக்கப்பணம் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி வழங்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல்-அமைச்சரான மு.க.ஸ்டாலின் தனது முதல் கையெழுத்தாக கொரோனா நிவாரண நிதி வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார். தற்போது கொரோனா பரவல் அதிகமான சூழலில் ஜூன் 3-ந்தேதி ரூ.4 ஆயிரம் வழங்குவதற்கு பதிலாக இந்த மாதமே (மே) முதல் தவணையாக ரூ. 2 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதன்படி கடந்த 10-ந்தேதி தலைமை செயலகத்தில் 7 பயனாளிகளுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வழங்கி இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரிசி ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு டோக...
தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறியவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை தீவிரம்!

தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறியவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை தீவிரம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறியவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை தீவிரம்! கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 10-ந்தேதி முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. வருகிற 24-ந்தேதி வரையில் அத்தியாவசிய கடைகளான காய்கறி, மளிகை கடைகள் மட் டும் காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை திறந்து இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் முழு ஊரடங்கு காலத்தில் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டு இருந்தது. அதே நேரத்தில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி வெளியிட்ட அறிக்கையில், “ஊரடங்கை மீறி வெளியில் வரும் மக்களிடம் போலீசார் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது” என்று தெரிவித்தார். இதன் காரணமாக சென்னை உள்பட அனைத்து இடங்களிலும் ஊரடங்கை மீறி வெளியில் வந்தவர்களை போலீசார் கண்டுகொள்ளவில்லை. இதனால் தேவையி...
அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க – கொரோனாவிலிருந்து மீண்ட ‘அயலான்’ பட இயக்குனர் வேண்டுகோள்!

அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க – கொரோனாவிலிருந்து மீண்ட ‘அயலான்’ பட இயக்குனர் வேண்டுகோள்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க - கொரோனாவிலிருந்து மீண்ட ‘அயலான்’ பட இயக்குனர் வேண்டுகோள்! விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘இன்று நேற்று நாளை’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரவிக்குமார். இவர் தற்போது சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டது குறித்து இயக்குனர் ரவிக்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது: “முன்னெச்சரிக்கையோடு இருந்தேன் இருந்தும் கொரோனா என்னை தொற்றியது. வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு மருந்துகளை எடுத்துக்கொண்டேன். என்னோடு அருகிலேயே இருந்த என் குழந்தை நறுமுகைக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. எனது மனைவி பிரியாவின் அன்பும், சலிப்பற்ற உணவு உபசரிப்பும் மீண்டுவர ரொம்பவும் உதவியது. அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் உட...
முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது- பஸ்கள் ஓடவில்லை, கடைகள் அடைப்பு!

முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது- பஸ்கள் ஓடவில்லை, கடைகள் அடைப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது- பஸ்கள் ஓடவில்லை, கடைகள் அடைப்பு! தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. இதையடுத்து புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளார். அந்த வகையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு கடை பிடிக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களும் (சனி, ஞாயிறு) அனைத்து கடைகளையும் திறந்துவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. வருகிற 24-ந்தேதி வரை 2 வாரங்களுக்கு இந்த ஊரடங்கு கடை பிடிக்கப்படும். முழு ஊரடங்கு காரணமாக இன்று பஸ், கார், ஆட்டோக்கள் ஓடவில்லை. அரசு துறைகளில் மின்சாரம், குடிநீர், உள்ளாட்சி துறை உள்ளிட்ட மு...
நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா!

நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா! தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. நடிகை மட்டுமல்லாமல் இவர் சிறந்த பாடகியும் ஆவர். நடிகை ஆண்ட்ரியா ‘வடசென்னை’ ‘தரமணி’ போன்ற படங்களில் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார். இவர் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் ‘பிசாசு 2’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது: “கடந்த வாரம் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. என்னை கவனித்துக்கொண்ட நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் நன்றி. தற்போது நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறேன். நன்றாக குணமடைந்து வருகிறேன்” என தெரிவித்துள்ளார்....
தமிழகத்தில் கடைகள் மூடப்பட்டன- பஸ், வாகனங்கள் ஓடினாலும் இயல்புநிலை பாதிப்பு!

தமிழகத்தில் கடைகள் மூடப்பட்டன- பஸ், வாகனங்கள் ஓடினாலும் இயல்புநிலை பாதிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் கடைகள் மூடப்பட்டன- பஸ், வாகனங்கள் ஓடினாலும் இயல்புநிலை பாதிப்பு! தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. கடந்த 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. தனியாக செயல்படும் மளிகை, காய்கறி கடைகள் காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி இன்று காலையில் மளிகை மற்றும் காய்கறி கடைகள் மட்டுமே 6 மணியில் இருந்து செயல்பட்டன. இந்த கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. மளிகை மற்றும் காய்கறி கடைகளிலும் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்...
அசுரன் பட நடிகைக்கு கொரோனா!

அசுரன் பட நடிகைக்கு கொரோனா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
அசுரன் பட நடிகைக்கு கொரோனா! தமிழில் விஜய்யின் பைரவா படத்தில் அறிமுகமானவர் அம்மு அபிராமி. தொடர்ந்து கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று, தம்பி, சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், விஷ்ணு விஷாலின் ராட்சசன், தனுசுடன் அசுரன் மற்றும் என் ஆளோட செருப்ப காணோம், துப்பாக்கி முனை ஆகிய படங்களில் நடித்துள்ளார். கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அம்மு அபிராமி தற்போது கொரோனா தொற்றில் சிக்கி உள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “எனக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அப்போது எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து மருத்துவர் ஆலோசனைப்படி வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். தேவையான மருந்துகளும் எடுத்து வருகிறேன். முன்பை விட வலிமையாக திரும்பி வருவேன். பாதுகாப்பாக இருங்கள். அதிக கவனம் எடுத்துக்கொள்ளுங்கள்'' என்று கூ...