வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

Tag: மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின் அண்ணா நினைவிடத்தில் மரியாதை!

மு.க.ஸ்டாலின் அண்ணா நினைவிடத்தில் மரியாதை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
53-வது நினைவு நாள்: அண்ணா நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை! பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. தி.மு.க. தலைவரான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அண்ணா நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர் பாபு, நே.சிற்றரசு, மாதவரம் சுதர்சனம், டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., தலைமை நிலைய செயலாளர்களான வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், துறைமுகம் காஜா. பகுதி செயலாளர்கள் மதன்மோகன், ஏழுமலை, ஜெ.கருணாநிதி எம்.எல்.ஏ., விருகம்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, அகஸ்டின்பாபு, சேப்பாக்கம் பகுதி துணை செயலாளர்...
அம்மா உணவகங்கள் மூடப்படாது- மு.க.ஸ்டாலின் உறுதி!

அம்மா உணவகங்கள் மூடப்படாது- மு.க.ஸ்டாலின் உறுதி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
அம்மா உணவகங்கள் மூடப்படாது- மு.க.ஸ்டாலின் உறுதி! சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களை அ.தி.மு.க. ஆட்சியில் முடக்கி உள்ளனர். குறிப்பாக பல இடங்களில் கருணாநிதியின் பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளது. செம்மொழி பூங்காவில் கலைஞரின் பெயரை மறைக்கும் வகையில் செடி, கொடிகளை நட்டு வைத்தனர். இராணி மேரி கல்லூரியிலும் கலைஞர் பெயர் மறைக்கப்பட்டது. கலைஞர் ஆட்சியில் புதியதாக கட்டப்பட்ட சட்டசபை கட்டிடத்தை ஆஸ்பத்திரியாக மாற்றினார்கள். கலைஞர் கொண்டுவந்த சமத்துவபுரம், உழவர் சந்தை, நமக்கு நாமே திட்டங்களும் முடக்கப்பட்டன. இப்படி தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அ.தி.மு.க. ஆட்சியில் முடக்கப்பட்டது பற்றி பட்டியல் இட்டுக்கொண்டே செல்லலாம். ஆனால் தி.மு.க. ஆட்சியில் நாங்கள் அதுபோன்று செயல்படவில்லை. அந்த எண்ணமும் எனக்கு இல்லை. அதனால் தான்...
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தொடங்கி விட்டது- அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தொடங்கி விட்டது- அமைச்சர் தகவல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தொடங்கி விட்டது- அமைச்சர் தகவல்! சென்னை சைதாப்பேட்டையில் மெகா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் 86.22 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளார்கள். 58.82 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசி போட்டுள்ளார்கள். சென்னையை பொருத்த வரை 5 லட்சம் பேர் இன்னும் முதல் தவணை தடுப்பூசியே போட்டுக்கொள்ள வில்லை. அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசியை விரைந்து போடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா 3-வது அலை தொடங்கிவிட்டது. உலக அளவில் வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது. கொரோனாவின் உருமாற்ற வைரஸ்களான டெல்டாவும், ஒமைக்ரானும் சேர்ந்து இந்த அலையில் வேகமாக தாக்குகிறது. உலக அளவில் கடந்த ஏப்ரல் மாதம் ஒரேநாள் தொற்று 29 லட்சத்து 4 ஆயிரமாக இருந்தது. அதுதான்...
15-18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி: போரூர் பள்ளிக்கூடத்தில் மு.க.ஸ்டாலின் 3-ந்தேதி தொடங்கி வைக்கிறார்!

15-18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி: போரூர் பள்ளிக்கூடத்தில் மு.க.ஸ்டாலின் 3-ந்தேதி தொடங்கி வைக்கிறார்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
15-18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி: போரூர் பள்ளிக்கூடத்தில் மு.க.ஸ்டாலின் 3-ந்தேதி தொடங்கி வைக்கிறார்! ஒமைக்ரான் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் நாடுமுழுவதும் வருகிற 3-ந்தேதி முதல் 15 வயதில் இருந்து 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். அதேபோல் 10-ந்தேதி முதல் டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. தமிழகத்தில் சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணிக்கான முன் ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்படி ...
தமிழ்நாடு சிட்கோ தொழில் மனைகள் விலை குறைப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழ்நாடு சிட்கோ தொழில் மனைகள் விலை குறைப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
தமிழ்நாடு சிட்கோ தொழில் மனைகள் விலை குறைப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- தமிழகத்தினை தொழில் வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக திகழச் செய்ய இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநிலத்தின் தொழில் துறை வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறைகளை ஊக்குவிக்க சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, இவ்வரசு பொறுப்பேற்றவுடன், தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கங்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிட்கோ தொழில்மனைகளின் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள தொழில்முடக்க நிலையிலிருந்து தொழில்முனைவோர் மீளவும் வழிவகை செய்யும் பொருட்டு தற்போது, தொழில்மனைகளின் விலையை குறைத்த...
தாம்பரம் முடிச்சூர், வரதராஜபுரத்தில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!

தாம்பரம் முடிச்சூர், வரதராஜபுரத்தில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தாம்பரம் முடிச்சூர், வரதராஜபுரத்தில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு! வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கடந்த 15 நாட்களாக தொடர்ந்து விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இந்த மழை நீர் பாதிப்பு முடிவதற்குள் அடுத்தடுத்து கடந்த 2 நாட்களாக மீண்டும் கன மழை பெய்தது. இதில் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பல இடங்களில் மீண்டும் அதிக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் மழை வெள்ளம் பாதித்த தி.நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மீண்டும் நேரில் சென்று பார்வையிட்டு அங்கு மழை நீரை வடிய வைக்க துரித நடவடிக்கை மேற்கொண்டார். இதே போல் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆவடி, பூந்தமல்லி, திருமுல்லைவாயல் பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு நிவாரண பணிகளை முடுக்...
குமரி மாவட்டத்தில் 4-வது நாளாக மழை: வெள்ளம் பாதித்த பகுதிகளில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!

குமரி மாவட்டத்தில் 4-வது நாளாக மழை: வெள்ளம் பாதித்த பகுதிகளில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
குமரி மாவட்டத்தில் 4-வது நாளாக மழை: வெள்ளம் பாதித்த பகுதிகளில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு! தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை  பரவலாக பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாகவே மழை பெய்துவந்தது. 12-ந் தேதி முதல் மிக கனத்த மழை கொட்டியது. அன்று முதல் தொடர்ந்து பெய்த மழையால் நேற்று முன் தினம் மாவட்டமே வெள்ளக்காடானது. 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டது. சுமார் 50 ஆயிரம் வீடுகளில் மழை நீர் புகுந்தது. மேலும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் கால்வாய் எது? சாலை எது? என்று தெரியாத அளவுக்கு வெள்ளம் ஓடியது. குழித்துறை, தோவாளை, தேரேகால்புதூர், தக்கலை, குமாரபுரம், நித்திரவிளை, கோதையாறு, குற்றியாறு, மோதிரமலை பகுதிகளில் பெரும்பாலான சாலைகள் சேதம் அடைந்தது. இதுபோல பல பாசன குளங்கள் உடைப்பெடுத்தன. அந்த தண்ணீரும் அருகில் உள்ள விளைநிலங்களில் புகுந்து பயிர் நிலங...
200 வார்டுகளில் இலவச மருத்துவ முகாம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

200 வார்டுகளில் இலவச மருத்துவ முகாம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
200 வார்டுகளில் இலவச மருத்துவ முகாம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்! வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக சென்னையில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாத மழை பெய்தது. இதன் காரணமாக சென்னையில் பல பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். தேங்கிக் கிடக்கும் மழைநீரில் பாம்பு, பல்லி, தவளை, தேள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் இறந்த நிலையில் மிதக்கின்றன. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேங்கிய தண்ணீரில் கொசு அதிகம் உற்பத்தி யாகும் என்பதால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது. இதில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 200 வார்டுகளிலும் இலவச மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைக்கப்பட்...
சென்னையில் மழை பாதிப்பு: 2வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

சென்னையில் மழை பாதிப்பு: 2வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
சென்னையில் மழை பாதிப்பு: 2வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு! தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் இன்று அதிகாலை வரை இடைவிடாமல் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னை முழுவதும் வெள்ளக்காடானது. தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பார்வையிட்டு வருகிறார். சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட கல்யாணபுரம் கால்வாய் பகுதி, சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே உள்ள வால்டாக்ஸ் சாலையில்  இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து மழை பாதிப்பு நிலவரம் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்....
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த சவுந்தர்யா ரஜினிகாந்த்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த சவுந்தர்யா ரஜினிகாந்த்!

CINI NEWS, HOME SLIDER, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த சவுந்தர்யா ரஜினிகாந்த்! இளைய மகளான சவுந்தர்யாவின் ஹூட் (Hoote) ஆப்பை கடந்த திங்கட்கிழமை நடிகர் ரஜினிகாந்த் அறிமுகப்படுத்தினார். எழுத படிக்க தெரியாதவர்கள் இந்த செயலி வாயிலாக மற்றவர்களுக்கு தாங்கள் சொல்ல வரும் கருத்துக்களை, தங்கள் சொந்த குரல் வாயிலாக தெரிவிக்கலாம் எனவும், வருங்காலத்தில் மற்ற சமூக வலைத்தளங்கள் போல, இந்த hoote செயலி பிரபலம் அடைய வாழ்த்துவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தனது குரல் பதிவில் தெரிவித்து இருந்தார். ஹூட் ஆப் அறிமுக விழாவில் பேசிய சவுந்தர்யா, கிளப் ஹவுஸ், ட்விட்டர் ஸ்பேசஸ் போல் இல்லாமல், யார் வேண்டுமானாலும் குரல் பதிவு செய்யும் வகையில் ஹூட் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாகவும் இது இருக்கும் என தெரிவித்தார். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்...