சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

Tag: Kodanki.in

ரஷியாவில் இருந்து மேலும் 60 ஆயிரம் டோஸ் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இந்தியா வந்தது!

ரஷியாவில் இருந்து மேலும் 60 ஆயிரம் டோஸ் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இந்தியா வந்தது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ரஷியாவில் இருந்து மேலும் 60 ஆயிரம் டோஸ் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இந்தியா வந்தடைந்தது. ரஷிய தயாரிப்பான ஸ்புட்னிக்-வி தடுப்பூசி, கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக கருதப்படுகிறது. எனவே, இந்தியா மேற்கொண்ட முயற்சியின் பலனாக, கடந்த 1-ந் தேதி ரஷியாவில் இருந்து 1½ லட்சம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தன. மத்திய மருந்துகள் ஆய்வுக்கூடம் அதற்கு ஒப்புதல் அளித்தது. ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் விலை ரூ.948 மற்றும் 5 சதவீத ஜி.எஸ்.டி. என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 14-ந் தேதி, ஐதராபாத்தில் முதல் முறையாக ஒரு பயனாளிக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்தநிலையில், ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் 2-வது தொகுப்பு நேற்று இந்தியாவுக்கு வந்தது. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. அதில், 60 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் இருந்தன...
சினிமா நட்சத்திரங்கள் அஜித்,விஜய், ரஜினி,கமல் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்!

சினிமா நட்சத்திரங்கள் அஜித்,விஜய், ரஜினி,கமல் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
தமிழக சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தவண்ணம் உள்ளனர். பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே  நடிகர் அஜித் தன் மனைவி ஷாலினியுடன், திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்தார்.  வாக்குப்பதிவு தொடங்கியதும், அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி இருவரும் வாக்களித்துவிட்டு புறப்பட்டுச்சென்றனர் நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்கள். அதுபோல் சூர்யா, கார்த்தி ஆகியோர் வாக்களித்தனர். தற்போது நடிகர் வி...
தமிழகத்தில் தயார் நிலையில் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள்!

தமிழகத்தில் தயார் நிலையில் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள்!

HOME SLIDER, NEWS, politics
தமிழகத்தில் தயார் நிலையில் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள்! தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை  நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 3,585 பேர் ஆண்கள். 411 பேர் பெண்கள். சட்டமன்ற தேர்தலில் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 300 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. 10 ஆயிரத்து 528 சாவடிகள் பதட்டமானவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் இன்று அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டன. ஒவ்வொரு தொகுதிகளுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மேற்பார்வையில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் ஓட்டுப்பதிவு எந்திரங்களை மையங்களுக்கு கொண்டு சேர்த்தனர். வாக்க...
14ம் தேதிமுதல் 19ம் தேதி வரை சபரிமலை நடை திறப்பு பக்தர்கள் தரிசன நேரம் அறிவிப்பு!

14ம் தேதிமுதல் 19ம் தேதி வரை சபரிமலை நடை திறப்பு பக்தர்கள் தரிசன நேரம் அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கேரள முதல்வர் பினராயி விஜயன் வரும் 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்களுக்காக திறக்கப்படும் என அறிவித்தார். அதன்படி பக்தர்கள் தரிசனத்துக்காக மிதுன பூஜையையொட்டி சபரிமலை கோவில் நடை வருகிற 14ஆம் தேதி திறக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஐயப்பன் கோவிலுக்கான புதிய நடைமுறைகள் குறித்து தேவசம் போர்டு அறிவித்துள்ளது. தினமும் காலை 4 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஒரு மணி நேரத்திற்கு தலா 200 பேர் வீதம் தினமும் 16 மணி நேரத்தில் 3,200 பேர் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....