வியாழக்கிழமை, ஏப்ரல் 18
Shadow

செய்திகள்

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்!

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடக்கிறது. தமிழகம் முழுதும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, நவம்பர், 16ல் துவங்கியது. அன்றைய தினம், அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, வரும், 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். வாக்காளர்கள் வசதிக்காக, கடந்த மாதம், 21, 22ம் தேதிகளில், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம் நடந்தது.   கடந்த, 21ம் தேதி நடந்த முகாமில், 5.43 லட்சம் விண்ணப்பங்கள் வரப்பெற்றன. இதில், 4.38 லட்சம் விண்ணப்பங்கள் பெயர் சேர்க்கக் கோரி வரப்பெற்றுள்ளன. அதேபோல, 22ம் தேதி நடந்த முகாமில், 8.03 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன. இதில், 6.14 லட்சம் பேர், பெயர் சேர்க்கக் கோரி விண்ணப...
பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் ரூ.50 லட்சம் இழப்பீடு தரக் கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு

பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் ரூ.50 லட்சம் இழப்பீடு தரக் கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து தம்மை வெளியேற்றியதற்காக ரூ.50 லட்சம் இழப்பீடு கோரி  இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள பிரசாத் ஸ்டூடியோவில், கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரைப்படங்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா ஸ்டூடியோ நடத்தி வருகிறார்.  அவரை சமீபத்தில் பிரசாத்  ஸ்டூடியோ நிர்வாகம் அங்கிருந்து வெளியேற்றி உள்ளது.   மேலும் ஸ்டூடியோவில் உள்ள பொருட்களை அவர் எடுத்துச் செல்லவும் அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.   இது குறித்து இளையராஜா சென்ன உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளார்    சுமார் 35 வருடங்களாக பிரசாத் ஸ்டூடியோ அரங்கில் இசையமைத்து வந்த தன்னை வெறியேற்றிவிட்டதாக இசையமைப்பாளர் இளையராஜா தனது மனுவில் தெரிவித்துள்ளார். தமக்கு இதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க, ஸ்டூடிய...
அதிமுக ஊழல் லிஸ்ட் போடும் உதயநிதி!

அதிமுக ஊழல் லிஸ்ட் போடும் உதயநிதி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள திமுக ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கையும், அதிமுக ஆ.ராசாவின் 2ஜி வழக்கையும் பற்றி தொடர்ந்து பேசி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று தன் மீது ஊழல் புகார் இல்லை என ஆ.ராசா விளக்கமளித்ததுடன், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு குறித்தும் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நிலையில், அதிமுகவினர் திமுகவின் ஊழல்கள் குறித்தும் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் “முட்டை ஊழல் - குட்கா ஊழல் - நெடுஞ்சாலை ஊழல் - டெண்டர் ஊழல் - போலி நிறுவன ஊழல் - மணல் குவாரி ஊழல்- மின்சார கொள்முதல் ஊழல்- ஆவின் ஊழல் - நெல் கொள்முதல் ஊழல் - கொரோனாவிலும் ஊழல்... என சத்துணவ...
விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்கும் வாகனங்களுக்கு இலவச டீசல்!

விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்கும் வாகனங்களுக்கு இலவச டீசல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்கும் வாகனங்களுக்கு இலவச டீசல்! மத்திய அரசின் புதிய வேளாண்மை சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பஞ்சாப் அரியானா ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் டெல்லியே குலுங்கும் அளவிற்கு நடைபெற்று வரும் இந்த போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு வலுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ளனர். மேலும் தன்னார்வ அமைப்புகளும் பொதுமக்களும் தனியார் அமைப்புகளும் கூட இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் விவசாயிகளுக்கு விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க செல்லும் வாகனங்களுக்கு டெல்லி-அமிர்தசரஸ் தேசிய நெடுஞ்சாலையில் இலவச டீசல் வழங்கப்பட்டு வருகிறது. சிரோமணி அகாலி தளம் ...
“தண்டிக்கப்பட்ட குற்றவாளியை முன்னிறுத்தி ஆட்சி நடத்துவது இழிவு”  –  ஆ.ராசா காட்டம்

“தண்டிக்கப்பட்ட குற்றவாளியை முன்னிறுத்தி ஆட்சி நடத்துவது இழிவு” – ஆ.ராசா காட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
“தண்டிக்கப்பட்ட குற்றவாளியை முன்னிறுத்தி ஆட்சி நடத்துவது அருவருப்பு கலந்த இழிவு” - ஆ.ராசா காட்டம் தமிழக முதலமைச்சருக்கு, தி.மு.கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, எம்.பி., செய்தியாளர் சந்திப்பின் மூலம் வெளியிட்ட திறந்த மடல். அதில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும் தலைவர் கலைஞர் மீதும் - மத்திய அமைச்சராக பணியாற்றி 2ஜி வழக்கை எதிர்கொண்டு வெற்றி பெற்ற என்மீதும் கடந்த 03.12.2020 அன்று தொலைக்காட்சியில் தாங்கள் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறும் விதமாக அதே தேதியில் நானும் ஊடகங்களை சந்தித்து யார் ஊழல்வாதி, எந்தக் கட்சி ஊழல் கட்சி என்பதை பகிரங்கமாகவும் பட்டவர்த்தனமாகவும் ஆதாரத்தோடு குறிப்பிட்டு தி.மு.கழகத்தின் மீது தாங்கள் தெரிவித்த வீராணம், சர்க்காரியா, 2ஜி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எவையும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லையென்றும், ஆனால் உங்களால் ‘அம்மா’ என்று சுயநலக் காரியங்...
ரஜினி அரசியல் மக்கள் அவரை நம்பி வாக்களிக்க மாட்டார்கள் கரூர் MP ஜோதிமணி காட்டம்! 

ரஜினி அரசியல் மக்கள் அவரை நம்பி வாக்களிக்க மாட்டார்கள் கரூர் MP ஜோதிமணி காட்டம்! 

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ரஜினிகாந்த் அரசியல் மக்கள் அவரை நம்பி வாக்களிக்க மாட்டார்கள் கரூர் MP  ஜோதிமணி காட்டம்! உலகத்திலேயே அரசியல் ஆயுதமாக ஆபாசத்தையும் வக்கிரத்தையும் பயன்படுத்துவது மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு தான், மக்கள் விரோத பா.ஜ.க அரசுக்கு இங்குள்ள அ.தி.மு.க அரசு கூசாமல் துணை நிற்கிறது என கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி காட்டமாக விமர்சித்துள்ளார். கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பெற்றார். அப்போது மதியநல்லூரில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் உள்ள 100 நாள் வேலை செய்யும் பெண்களை சந்திக்கச் செல்லும்போது பள்ளியின் கதவு திறக்கப்படாமல் மூடி இருந்ததால் ஆத்திரமடைந்த எம்.பி ஜோதிமணி அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கத்திடம் சென்று எங்கள் கட்சியை சேர்ந்த நிர...
பத்திரப்பதிவு துறை செயலாளர் பீலா ராஜேஷுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

பத்திரப்பதிவு துறை செயலாளர் பீலா ராஜேஷுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நீதிமன்ற தடை உத்தரவை மீறி மெட்ராஸ் கேனைன் கிளப்பை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகளை நியமித்த பத்திரப்பதிவு துறை செயலாளர் பீலா ராஜேஷுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள நாய்கள் பராமரிப்பு கிளப் (மெட்ராஸ் கேனைன் கிளப்) நிர்வாக நடவடிக்கைகளில் நிதி முறைகேடுகள் நடந்ததாக கூறி, சிறப்பு அதிகாரிகளை நியமிக்க பத்திரப்பதிவுத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதை எதிர்த்து அந்த கிளப் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி அந்த கிளப்பிற்கு 3 சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து பத்திரப்பதிவு துறை உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மெட்ராஸ் கேனைன் கிளப் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப...
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற  வலியுறுத்தி  எதிர்க்கட்சி தலைவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற  வலியுறுத்தி  எதிர்க்கட்சி தலைவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற  வலியுறுத்தி  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் ராகுல்காந்தி, சரத்பவார், டி.ராஜா உள்ளிட்டோர் சந்தித்தனர்.   இந்த சந்திப்புக்கு பிறகு கூட்டாக எதிர்க்கட்சியினர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர்.அப்போது அவர்கள் கூறியதாவது:   விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் திரும்பப் பெறுவது மிகவும் முக்கியமானது என ஜனாதிபதியிடம் தெரிவித்தோம்.  முறையான விவாதம் இன்றி வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. வேளாண் மசோதா குறித்து ஆழமான விவாதம் நடத்த வேண்டும் என நாங்கள் கோரினோம். இந்த மசோதாவை தேர்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும் எனவும் மத்திய அரசைக் கேட்டுக்கொண்டோம். ஆனால், எங்களின் எந்த பரிந்துரையும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவசர கதியில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன” என்றனர்...
பாமக- வன்னியர் சங்கத்தை தடை செய்ய வேண்டும் -ஐகோர்ட்டில் முறையீடு

பாமக- வன்னியர் சங்கத்தை தடை செய்ய வேண்டும் -ஐகோர்ட்டில் முறையீடு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்க கோரி, பாமக மற்றும்  வன்னியர் சங்கத்தினர், சென்னையில் நேற்று போராட்டம் நடத்தினர். சென்னை வந்த பாமகவினரின் வாகனங்களை தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் தடுத்தனர். இதனால் பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து முடங்கியது. போராட்டக்காரர்கள் வன்முறையிலும் ஈடுபட்டனர். பெருங்களத்தூரில் ரெயில் தண்டவாளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள், அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கற்களை வீசி அதை தடுத்து நிறுத்தினர். சென்னையின் பல்வேறு இடங்களில் பாமகவினர் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். பாமகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்நிலையில், பொதுமக்களுக்கு இடையூ...