HOME SLIDER

மீடியாக்களை பார்த்து பயப்படுகிறேன் – ரஜினிகாந்த்

மீடியாக்களை பார்த்து பயப்படுகிறேன் – ரஜினிகாந்த்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  எப்போதும் அரசியலை கண்டு பயந்ததில்லை. நான் பயப்படுவதே இந்த மீடியாக்களை பார்த்து தான். அரசியல் ஜாம்பவான்களே மீடியாக்கள்ன்னா பயப்படுகிறார்கள், நான் இதில் கத்துக்குட்டி. திடீரென மைக்கை நீட்டி அவர்கள் எதாவது கேள்வி கேட்க, நான் எதாவது பதில் சொல்ல அது மிகப்பெரிய விவாதப்பொருளாகி விடுகிறது. அதனால் தான் நான் மீடியாவை கண்டு பயப்படுகிறேன். என்னுடைய அரசியல் குரு சோ கூட, மீடியாக்களிடம் ஜாக்கிரதையாக இருக்கும் படி அறிவுரை கூறியுள்ளார். அதனை ஒரு பத்திரிக்கையாளன் என்ற முறையில் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார். அவர் இப்போது இல்லை, அவர் இருந்திருந்தால் இப்போது எனக்கு பத்து யானை பலம் இருந்திருக்கும், ஆனால் அவர் இல்லாதது இழப்பு தான், என ரஜினி வருத்தம் தெரிவித்தார்.
தனிக்கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி ரஜினிகாந்த் அறிவித்தார்

தனிக்கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி ரஜினிகாந்த் அறிவித்தார்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தனிக்கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி ரஜினிகாந்த் அறிவித்தார் ரஜினிகாந்த் கடந்த 26-ஆம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து வருகிறார். அவர் முதல் நாளன்று தனது அரசியல் நிலைப்பாடு குறித்து 31-ஆம் தேதி அறிவிக்க போவதாக ரஜினி கூறியிருந்தார். சட்டசபை தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி போட்டியிடப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். 234 தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என்றும் ரஜினி தெரிவித்துள்ளார். ரஜினி பேசுகையில் கடமையை செய், மற்றதை நான் பார்க்கிறேன் என்றார் கண்ணன். யுத்தம் செய், வெற்றி பெற்றால் நாடாள்வாய். யுத்தத்தில் தோற்றால் இறப்பாய். யுத்தம் செய்யாவிட்டால் கோழை என்பார்கள். நான் அரசியலுக்கு வருவது உறுதி. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று ரஜினி அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு 20 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரிலீஸுக்கு முன்னாடியே பட வியாபாரம் முடிந்து விட்டது ‘மன்னர் வகையறா’வுக்கு கிடைத்த முதல் வெற்றி -தயாரிப்பாளர் சிங்காரவேலன்

ரிலீஸுக்கு முன்னாடியே பட வியாபாரம் முடிந்து விட்டது ‘மன்னர் வகையறா’வுக்கு கிடைத்த முதல் வெற்றி -தயாரிப்பாளர் சிங்காரவேலன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஏ3வி சினிமாஸ் சார்பில் விமல் தயாரித்து நடித்துள்ள படம் ‘மன்னர் வகையறா’. கமர்ஷியல் இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்க, சாந்தினி தமிழரசன், ரோபோ சங்கர், இளைய திலகம் பிரபு, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், சிங்கம்புலி, யோகி பாபு, வம்சி கிருஷ்ணா, ஜெய பிரகாஷ், நீலிமா ராணி என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். பி.ஜி.முத்தையா, சூரஜ் நல்லுசாமி இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் விக்ரமன், பேரரசு, தயாரிப்பாளர் சுவாமிநாதன், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் ரோகிணி பன்னீர் செல்வம், தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான சிங்காரவேலன் உள்ளிட்ட
ரஜினியை அரசியலுக்கு வரவேற்கும் லாரன்ஸ் உருவாக்கிய பாடல் “போருக்கு வா தலைவா”

ரஜினியை அரசியலுக்கு வரவேற்கும் லாரன்ஸ் உருவாக்கிய பாடல் “போருக்கு வா தலைவா”

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, Trailer, செய்திகள், டிரைலர்கள், நடிகர்கள், வீடியோ
  நடிகா் ரஜினிகாந்த் வெகுகாலமாக அரசியலுக்கு வரும் எண்ணத்தில் இருந்தாலும் வெளிப்படையாக அறிவிக்காமல் அமைதி காத்து வருகிறார். சமீபத்தில் தனது ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, 'போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்' எனக் கூறியது அவரது அரசியல் பிரவேசத்துக்கான அறிவிப்பாகவே எடுத்துக் கொள்ளப்பட்டது. https://www.youtube.com/watch?v=o7A9hryfrJ4 ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் வண்ணம் ராகவா லாரன்ஸ் "போருக்கு வா தலைவா" என்ற பாடலை உருவாக்கி இன்று வெளியிட்டிருக்கிறார்  
ஜனவரி 3 -ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

ஜனவரி 3 -ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஜனவரி 3 -ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி, 2018-ம் ஆண்டுக்கான கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 8-ந் தேதி தொடங்குகிறது. அன்று சட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று முதல் முறையாக டிடிவி தினகரன் எம்.எல்.ஏவாக சட்டப்பேரவைக்குள் நுழைய உள்ளார். இதனால், நடைபெற உள்ள சட்டமன்றத்தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஜனவரி 3 ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
முதல்வர் பழனிசாமி கைப்பட எழுதிய புத்தாண்டு, பொங்கல் வாழ்த்து அட்டை வெளியீடு

முதல்வர் பழனிசாமி கைப்பட எழுதிய புத்தாண்டு, பொங்கல் வாழ்த்து அட்டை வெளியீடு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழக முதல்வர் கே.பழனிசாமி, தன் கைப்பட எழுதிய புத்தாண்டு, பொங்கல் வாழ்த்து அடங்கிய அட்டை பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக கடந்த பிப்ரவரி 18-ம் தேதி கே.பழனிசாமி பதவியேற்றார். அவர் முதல்வராக பதவியேற்று தற்போது 10 மாதங்கள் கடந்துள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பின்பற்றி பொதுமக்களுக்கான பொங்கல் சிறப்பு பரிசை அவர் அறிவித்துள்ளார். இந்நிலையில், புத்தாண்டு, பொங்கலை முன்னிட்டு நேற்று தனது கைப்பட ஆங்கிலத்திலும், தமிழிலும், ‘ தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இதயங்கனிந்த ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்’ என்ற வாழ்த்து செய்தியை முதல்வர் பழனிசாமி எழுதியுள்ளார். இந்த வாழ்த்துச் செய்தி, எம்பிக்கள், எம்எல்ஏக்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், பத்திரிகை அதிபர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் மற்று
தினகரன் ஒரு கிரிமினல் துரோகி உதகை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் பழனிசாமி ஆவேசம்..!

தினகரன் ஒரு கிரிமினல் துரோகி உதகை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் பழனிசாமி ஆவேசம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நீலகிரி மாவட்டம் உதகையில் குதிரைப்பந்தய மைதானத்தில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில், எம்ஜிஆர் படத்தை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் பழனிசாமி. அதைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது: ''நாம் ஒன்றை நினைத்துப் பார்க்கவேண்டும். நடைபெற்று முடிந்த ஆர்.கே.நகர் தேர்தல், ஒரு வித்தியாசமான தேர்தல். உலகத்தில் இருக்கின்ற எந்தவொரு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் வராத எண்ணம் கொண்ட ஒரு வித்தியாசமான தேர்தல்தான் இந்த ஆர்.கே.நகர் தேர்தல். ஆகவே, இதற்கு முன்பு திருமங்கலம் ஃபார்முலா என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதை மிஞ்சி, இப்பொழுது ஆர்.கே.நகர் ஃபார்முலா என்ற ஒரு ஃபார்முலாவைக் கண்டுபிடித்து தில்லுமுல்லு செய்து வெற்றி பெற்றிருக்கின்றார். அந்த ஃபார்முலா ஹவாலா ஃபார்முலா. இதுவரைக்கும் யாரும் சிந்தித்ததுகூட
எலி-ஆமை கூடா நட்பு கேடாய் விளையும் குட்டிக்கதை கூறிய முதல்வர் பழனிசாமி..!

எலி-ஆமை கூடா நட்பு கேடாய் விளையும் குட்டிக்கதை கூறிய முதல்வர் பழனிசாமி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
எலி-ஆமை கூடா நட்பு கேடாய் விளையும் குட்டிக்கதை கூறிய முதல்வர் பழனிசாமி..! நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூடா நட்பு குறித்து குட்டிக்கதை கூறி தினகரனை மறைமுகமாக விமர்சித்தார். முதல்வர் பழனிசாமி கூறிய குட்டிக்கதை: ''ஒரு ஏரிக்கரையில் எலியும், ஆமையும் நண்பர்களாக வாழ்ந்து வந்தன. ஆமை, ஏரி நீருக்குள் மூழ்கி சில மணி நேரங்கள் நீந்திவிட்டு கரைக்கு வரும். இதை கரையிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் எலிக்கு தானும் ஆமையைப்போல் நீருக்குள் மூழ்கி நீந்த வேண்டுமென்று ஆசை வந்தது. ஒரு நாள் எலி தன் ஆசையை தனது நண்பனான ஆமையிடம் சொன்னது. 'நீ - நீருக்குள் மூழ்கினால் நீந்தத் தெரியாது. எனவே, நான் நீரில் நீந்தும்போது நீ எனது முதுகில் உட்கார்ந்து கொள். உன்னை நீருக்குள் கொண்டு சென்று சுற்றிக் காட்டுகிறேன்' என்று ஆமை சொன்னது. அதன்படியே ஒரு நாள் ஆமை
அசந்த நேரத்தில் தினகரன் ஜெயித்து விட்டார் இனி அசரப்போவதில்லை -துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஒப்புதல்

அசந்த நேரத்தில் தினகரன் ஜெயித்து விட்டார் இனி அசரப்போவதில்லை -துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஒப்புதல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நாங்கள் அசந்த நேரம் பார்த்து தினகரன் ஜெயித்து விட்டார். இனி நாங்கள் அசர மாட்டோம். ஜெயலலிதாவுக்கு எதிராக சதி திட்டம் தீட்டியதால் தான் தினகரன் விரட்டி அடிக்கப்பட்டார் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார். ஊட்டியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பேசியதாவது:- எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டினார்கள். எம்.ஜி.ஆர். வள்ளல் குணம் படைத்தவர். அவர் வழியில் வந்த ஜெயலலிதாவும் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றினார். அம்மா ஆட்சி போல் வேறு யாராலும் ஆட்சியை கொடுக்க முடியாது. அம்மா அறிவித்த திட்டம் போல் வேறு யாரும் தர முடியாது. அதனால் தான் தமிழக மக்கள் அவரிடம் மீண்டும் ஆட்சியை கொடுத்தார்கள். எதை செய்தாலும் குறை சொல்ல கூடியவர்கள் அம்மா வழி அரசை குறை சொல்லி வருகிறார்கள். அம்மா வழியில் பயணம் செய்யும் இந்த ஆட்சி அம்ம
26 வெட்டுக்களுடன் பெயரை மாற்றி சென்சாரில் தப்பிப் பிழைத்த பத்மாவதி..!

26 வெட்டுக்களுடன் பெயரை மாற்றி சென்சாரில் தப்பிப் பிழைத்த பத்மாவதி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள வரலாற்றுப் படம் ‘பத்மாவதி’. ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை ஆண்ட ராஜவம்சத்தைச் சேர்ந்த ராணி பத்மாவதி வாழ்க்கை வரலாற்றைக் அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில், பத்மாவதியாக தீபிகா படுகோனும், ராணா ரத்தன் சிங்காக ஷாகித் கபூரும், அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். இப்படத்தில் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் திரித்து சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பாஜக, ராஜ்புத் சேனா, கர்னி சேனா போன்ற அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பத்மாவதி திரைப்படம் டிசம்பர் மாதம் முதல் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு தரப்பினர் இந்தப் படத்துக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கும்வரை பத்மாவதி படத்தை