வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

CINI NEWS

உடல் அமைப்பு குறித்து விமர்சனம் -வருத்தமடைந்த இலியானா!

உடல் அமைப்பு குறித்து விமர்சனம் -வருத்தமடைந்த இலியானா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
உடல் அமைப்பு குறித்து விமர்சனம் -வருத்தமடைந்த இலியானா! தமிழில் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து பிரபலமானவர் இலியானா. கேடி படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இலியானா அளித்துள்ள பேட்டியில், “எல்லோரும் எனது உடல் அமைப்பு குறித்து விமர்சனம் செய்கிறார்கள். உடல் தோற்றத்தை வைத்து முன்பெல்லாம் இடுப்பழகி அன்று அழைத்தனர். இப்போது தோற்றம் மாறி இருப்பதால் வேறு மாதிரி விமர்சிக்கிறார்கள். இது வருத்தமாக உள்ளது. எனது உடல் தோற்றத்தில் எனக்கே அதிருப்தி இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனாலும் விமர்சனம் செய்கிறவர்கள் என் உடம்பில் இருக்கிற அழகான விஷயங்களையும் கவனிக்க வேண்டும். எனது மூக்கு, உதடு அவ்வளவு அழகாக இருக்காது. எனது உயரமும் சரியானது இல்லை. கைகள் மிகவும் ஒல்லியாக இருக்கும். கலரும் குறைவுதான். ஆனால் அதற்காக நான் அழகாக இல்லை என்று சொல்லிவிட...
அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் படப்பிடிப்பு தளத்தில் வாக்கு சேகரித்தார்!

அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் படப்பிடிப்பு தளத்தில் வாக்கு சேகரித்தார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
மோகன் ஜி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் ‘திரெளபதி’. ரிச்சர்டு ரிஷி நாயகனாக நடித்திருந்த இப்படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை அடுத்து ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் மோகன் ஜி. ‘திரெளபதி’ பட நாயகன் ரிச்சர்ட் ரிஷி இந்தப் படத்திலும் ஹீரோவாக நடிக்க, சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ராயபுரத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது ராயபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், இயக்குனர் மோகனை சந்தித்து வாக்கு சேகரித்து மோகனையும் வாழ்த்தி சென்றார்....
திருமண விழாவில் மணமகனுடன் குத்தாட்டம்-வரலட்சுமி சரத்குமார்!

திருமண விழாவில் மணமகனுடன் குத்தாட்டம்-வரலட்சுமி சரத்குமார்!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகைகள்
திருமண விழாவில் மணமகனுடன் குத்தாட்டம்-வரலட்சுமி சரத்குமார்! விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ”போடா போடி” திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. அதிரடி கதாபாத்திரங்கள், ரிஸ்க்கான காட்சிகள் என துணிச்சலாக வரும் வரலட்சுமி, தற்போது தமிழ் சினிமாவில் பல படங்களில் ஒப்பந்தம் ஆகி பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் திருமணவிழாவில் கலந்துக் கொண்ட நடிகை வரலட்சுமி சரத்குமார், மணமகனுடன் சேர்ந்து விஜய்யின் ‘வாத்தி கம்மிங்’ உள்ளிட்ட பல பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது....
ஆர்.ஆர்.ஆர் படத்தின் புதிய போஸ்டர்!

ஆர்.ஆர்.ஆர் படத்தின் புதிய போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, திரைப்படங்கள், நடிகர்கள், முன்னோட்டம்
ஆர்.ஆர்.ஆர் படத்தின் புதிய போஸ்டர்! பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது ராம் சரணின் கதாபாத்திரம் குறித்த புதிய போஸ்டர் ஒன்றை ராஜமவுலி வெளியிட்டிருக்கிறார். இந்த போஸ்டரில் அல்லுரி சீதாராமராஜூ என்கிற கதாபாத்திரத்தில் ராம்சரண் தேஜா நடிப்பதா...
நடிகை ஷகிலா கட்சியில் இணைந்தார்!

நடிகை ஷகிலா கட்சியில் இணைந்தார்!

CINI NEWS, HOME SLIDER, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
நடிகை ஷகிலா கட்சியில் இணைந்தார்! மலையாளத்தில் நடிகையாக அறிமுகமான ஷகிலா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படமாகி வெளியானது. இந்திரஜித் லங்கேஷ் இயக்கிய இப்படத்தில் ரிச்சா சத்தா ஷகிலாவாக நடித்திருந்தார். தற்போது ஷகிலா சின்னத்திரையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மற்றும் யூடியூப் தளங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், தமிழக காங்கிரஸின் மனித உரிமை துறையில் இணைந்திருக்கிறார் நடிகை ஷகிலா. இதற்கான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார் ஷகிலா....
கார்த்தியின் சுல்தான் அப்டேட்!

கார்த்தியின் சுல்தான் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
கார்த்தியின் சுல்தான் அப்டேட்! கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் சுல்தான். இதனை ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கி உள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படம் வருகிற ஏப்ரல் 2-ந் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு சென்சார் குழுவினர் யு/ஏ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். இதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது....
எம்.ஜி.ஆர் மகன் அப்டேட்!

எம்.ஜி.ஆர் மகன் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
எம்.ஜி.ஆர் மகன் அப்டேட்! கிராமம் சார்ந்து கமர்ஷியல் படங்கள் கொடுத்து வெற்றி பெற்றவர் இயக்குனர் பொன்ராம். அவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘எம்.ஜி.ஆர் மகன்’. சசிகுமார் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, சிங்கம் புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ளனர். வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, அந்தோணிதாசன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாக இருக்கும் நிலையில், இசையை நாளை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்....
நயன்தாராவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததா?-வைரலாகும் புகைப்படம்!

நயன்தாராவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததா?-வைரலாகும் புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
நயன்தாராவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததா?-வைரலாகும் புகைப்படம்! நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் தமிழ் பட உலகில் பரபரப்பாக பேசப்படும் காதல் ஜோடியாக வலம் வருகிறார்கள். 2015-ல் நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் நெருக்கமாகி 6 வருடமாக காதலித்து வருகிறார்கள். ஜோடியாக சுற்றும் புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுகிறார்கள். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று ரசிகர்களும் வலைத்தளத்தில் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த வருடத்தில் அவர்களது திருமணம் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த படத்தில் விக்னேஷ் சிவன் மார்பில் நயன்தாரா சாய்ந்து இருக்கிறார். நயன்தாராவின் கையில் பிளாட்டினம் மோதிரம் பளிச்சிடுகிறது. அந்த மோதிர புகைப்படத்தின் கீழ், “விரலோடு உயிர்கூட கோர்த்து'' ...
நடிகர் பக்ருவுக்கு கொரோனா!

நடிகர் பக்ருவுக்கு கொரோனா!

CINI NEWS, helth tips, HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
நடிகர் பக்ருவுக்கு கொரோனா! கொரோனா மீண்டும் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மராட்டியத்தில் அதிகமானோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தி நடிகர் நடிகைகள் பலர் கொரோனா தொற்றில் சிக்கி வருகிறார்கள். இரு தினங்களுக்கு முன்பு இந்தி நடிகர்கள் அமீர்கான், கார்த்திக் ஆர்யன், மாதவன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில், நடிகர் பக்ருவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். தமிழில் அற்புத தீவு, தலை எழுத்து, 7-ம் அறிவு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பக்ரு. மலையாளத்தில் அதிக படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறி தற்போது வ...
சாய் பல்லவி நடிக்க மறுத்த வேடத்தில் நித்யா மேனன்!

சாய் பல்லவி நடிக்க மறுத்த வேடத்தில் நித்யா மேனன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
சாய் பல்லவி நடிக்க மறுத்த வேடத்தில் நித்யா மேனன்! மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. சாஷி இயக்கிய இந்தப் படத்தில் அய்யப்பனாக பிஜூமேனனும், கோஷியாக பிருத்விராஜும் நடித்திருந்தனர். இரண்டு அதிகாரிகளின் இடையில் ஏற்படும் ஈகோ மோதலை யதார்த்தமாக எடுத்துக் காட்டியது இந்தத் திரைப்படம். இதனால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தை தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்ய முயற்சி செய்யப்பட்டு வருகிறது. தமிழில் இந்தப் படத்தை ரீமேக் செய்ய, தயாரிப்பாளர் ஆடுகளம் கதிரேசன் உரிமையை வாங்கி வைத்திருக்கிறார். அதே போல் தெலுங்கு ரீமேக்கிற்கான உரிமையை, தயாரிப்பாளர் சூர்யதேவர நாகவம்சி வாங்கியுள்ளார். இந்த படத்தில் பிஜூமேனன் நடித்த அய்யப்பன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்க உள்ளார். பிருத்விராஜ் கதாபாத்திரத்தில் ராணா நடிக்க உள்ளார். இதில் ராணா...