வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

politics

மோடியை விமர்சிப்பதால் இந்திப்பட வாய்ப்பு பறிபோனது – பிரகாஷ்ராஜ்

மோடியை விமர்சிப்பதால் இந்திப்பட வாய்ப்பு பறிபோனது – பிரகாஷ்ராஜ்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
நடிகர் பிரகாஷ்ராஜ் தனது நண்பரும், சமூக ஆர்வலமான கவுரி லங்கேஷ் கொலைக்குப் பின் அரசியலில் ஈடுபட்டு பா.ஜனதாவை கடுமையாக விமர்சித்து வருகிறார். தற்போது கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவை எதிர்த்து பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரத்துக்கு நடுவே அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:- நான் இப்போதைய தேர்தல் அரசியலில் இல்லை. ஆனால் நான் கர்நாடகத்தில் அரசியலில் இருக்கிறேன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எதிர்காலத்தில் தீவிர அரசியலில் ஈடுபடும் திட்டம் இருக்கிறது. எனது பிரசாரம் இன்னும் 10 வருடங்களுக்கு நீடிக்கும். அது கர்நாடகத்திலும் இந்த நாட்டிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும். இப்போதைய நிலையில் கர்நாடகத்திலும், நாட்டின் மற்ற இடங்களிலும் பிராந்திய அளவில் புதிய கட்சி தேவைப்படுகிறது. அதற்கான நேரம் வந்தால் புதிய கட்சி தொடங்குவேன். ஆனால் கொள்கையே இல்லாமல் கட்சிகள் உதயமாகின்றன....
முதல்வர் பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

முதல்வர் பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தமிழகத்தின் முதல்வராக இருந்து வருபவர் எடப்பாடி பழனிசாமி. இவரது வீடு கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ளது. இந்நிலையில், கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமியின் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று தகவல் கிடைத்தது. விசாரணையில், கடலூரை சேர்ந்த பிரதீப் என்பவர் மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து, முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு நிபுணர்களும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு தீவிர  சோதனை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இதேபோல், போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. முதல்வர் வீட்டுக்கு மிரட்டல் விடுத்த அதே நபரே இவரது வீட்டுக்கும் மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ...
இந்தோ-இத்தாலிய உறவைக் கொண்டாடும் விதமாக டெல்லியில் A.P.ஸ்ரீதரின் ஓவியக் கண்காட்சி!

இந்தோ-இத்தாலிய உறவைக் கொண்டாடும் விதமாக டெல்லியில் A.P.ஸ்ரீதரின் ஓவியக் கண்காட்சி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
உலக அளவில் ஓவியங்களின் மீது காதல் கொண்டவர்களுக்கு அன்று முதல் இன்று வரை எப்போதுமே நீங்காத வியப்பைத் தந்திருப்பவர் லியானர்டோ டா வின்சி. அவரது தூரிகையிலிருந்து பிறந்த “மோனாலிசா” தான் இன்றளவிலும் இந்தப் பிரபஞ்சத்திற்கான கனவு அழகி. சற்று ஏறக்குறைய டா வின்சியின் ஓவியங்களுக்கு நிகராக ஒருவரது ஓவியங்கள் பேசுகிறது என்றால் அது நிச்சயம் ரவி வர்மாவின் ஓவியங்கள் தான். உலகோர் மத்தியில் இந்தியாவின் கலைப் பண்பாட்டை எடுத்துக் கூறும் ஒப்பற்றச் சான்றுகளாக நிலைத்திருக்கின்றன அவர் தீட்டி வைத்து விட்டுப் போன அத்தனை ஓவியங்களும். இப்படி உலகையே தன் வயப்படுத்தியிருக்கும் இரு துருவங்களின் ஓவியங்களைக் குழைத்து, புதியதோர் சித்திர மாக்கினால் அது எப்படி இருக்கும்?. இருவேறு நேரெதிர் கலாச்சாரம் ஒன்றாய் சேர்ந்து உயிர் பெருகையில் அது தரும் பிரமிப்பு எத்தகையதாய் இருக்கும்?. நினைக்கவே விழிகளை விரியச் செய்யும் இச்சிந்தன...
எம்.ஐ.டி யின் டிரோன் ஆலோசகராக நடிகர் அஜித்குமார் நியமனம்

எம்.ஐ.டி யின் டிரோன் ஆலோசகராக நடிகர் அஜித்குமார் நியமனம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி பல துறைகளில் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். மோட்டார் பைக் பந்தயங்களில் ஆர்வம் உண்டு. இதற்காக நடிப்பதை ஒத்திவைத்து விட்டு வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று போட்டிகளில் பங்கேற்று வந்தார். விமானம் ஓட்டுவதிலும் அவருக்கு ஈடுபாடு உண்டு. விமானம் ஓட்டும் லைசென்சும் வாங்கி வைத்துள்ளார். சமீபத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியும் எடுத்துள்ளார். ருசியாக பிரியாணி சமைப்பார். படப்பிடிப்பின் கடைசி நாளில் தனது கையால் பிரியாணி சமைத்து படக்குழுவினருக்கு பரிமாறுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் சென்னை தொழில்நுட்ப கல்லூரியில் அஜித்குமாருக்கு புதிய பதவி வழங்கப்பட்டு உள்ளது. அந்த கல்லூரியின் ஹெலிகாப்டர் சோதனை விஞ்ஞானி மற்றும் ஆளில்லா விமான பயிற்சி ஆலோசகராக அவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஆளில்ல...
புழுதி புயல், இடி–மின்னலுடன் மழை: 5 மாநிலங்களில் 124 பேர் சாவு

புழுதி புயல், இடி–மின்னலுடன் மழை: 5 மாநிலங்களில் 124 பேர் சாவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
முன்பெல்லாம் பாலைவன நாடுகளில்தான் புழுதி புயல் குறித்து கேள்வி பட்டிருப்போம். அல்லது ஹாலிவுட் படங்களில் இப்படி காட்சிகளை பார்த்திருப்போம்.  ஆனால் பருவ நிலை மாற்றங்களால் இப்போது நமது நாட்டிலும் இதுபோன்ற இயற்கை சீற்றங்களை பார்க்கும் அதிர்ச்சிகள் நடை பெறுகிறது. சமீபத்தில் வட மாநிலங்களில் கடுமையான புழுதி புயல் தன் கோர முகத்தை காட்டியது. தெலுங்கானா, உத்தரகாண்ட் மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் இதைப்போல இடியுடன் கூடிய பெருமழை பெய்தது. இந்த 5 மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை மற்றும் புழுதி புயலில் சிக்கியும், மின்னல் தாக்கியும் கடந்த 2 நாட்களில் 124 பேர் உயிரிழந்து இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 73 பேரும், ராஜஸ்தானில் 35 பேரும் பலியாகி இருப்பதாக உளதுறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். உத்தரபிரதேசத்தின் ஆக்ரா மா...
அவதூறு வழக்கு: நடிகர் எஸ்.வி.சேகர் நேரில் ஆஜராக நெல்லை கோர்ட்டு உத்தரவு

அவதூறு வழக்கு: நடிகர் எஸ்.வி.சேகர் நேரில் ஆஜராக நெல்லை கோர்ட்டு உத்தரவு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
நடிகர் எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசியது தொடர்பாக சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். இந்த நிலையில் எஸ்.வி.சேகர் மீது நெல்லையை சேர்ந்த பத்திரிகையாளர் கோபால்சாமி சார்பில், நெல்லை கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு நெல்லை முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், மாஜிஸ்திரேட்டு ராமதாஸ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாஜிஸ்திரேட்டு ராமதாஸ் இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜூன் மாதம் 18-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்றைய தினம் எஸ்.வி.சேகர் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், அதற்கு அவருக்கு சம்மன் அனுப்பவும் உத்தரவிட்டார். ...
கர்நாடகாவில் தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது- டி. ராஜேந்தர்

கர்நாடகாவில் தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது- டி. ராஜேந்தர்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நாகர்கோவிலில் உள்ள கிருஷ்ணன் கோவில் விழாவில் பங்கேற்க வந்த டி.ராஜேந்தர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- தமிழகத்தில் அ.தி.மு.க.வை பின்னால் இருந்து இயக்குவது பாரதிய ஜனதா கட்சிதான். தமிழக ஆட்சியாளர்கள் பாரதிய ஜனதாவின் ஊதுகுழலாக உள்ளனர். கர்நாடகாவில் அடுத்த மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது. அங்கு தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது. அதுவரை இங்கு என்ன போராட்டம் நடந்தாலும் அதற்கு மத்திய அரசு செவி சாய்க்காது. கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியுடன்தான் தமிழகத்தின் எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ளது. அதே காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து இங்கு உரிமை மீட்பு பயணத்தை தி.மு.க. நடத்துகிறது. காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒரு நடிகை தமிழகம் ஒரு கண் என்றால், கர்நாடகம் இன்னொரு கண் என்று கூறி உள்ளார். அப்படி என்றால் தமிழக ...
தண்டனைக் கைதியான சசிகலா சிறையில் சீருடை அணியவில்லை: மகளிர் ஆணைய தலைவி தகவல்

தண்டனைக் கைதியான சசிகலா சிறையில் சீருடை அணியவில்லை: மகளிர் ஆணைய தலைவி தகவல்

HOME SLIDER, politics, செய்திகள்
சொத்து குவிப்புவழக்கில் சிறைத்தண்டனை விதிக் கப்பட்ட சசிகலா, பெங்களூரு சிறையில் தொடர்ந்து சிறப்பு சலுகைகள் அனுபவித்து வருவது மீண்டும் தெரிய வந்துள்ளது. சிறையை பார்வையிட்ட தேசிய மகளிர் ஆணைய தலைவியே இதை ஒப்புக்கொண்டுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை விதிமுறைகளை மீறி அவருக்கு சிறையில் தனி சமையலறை, சிறப்பு சொகுசு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் கர்நாடக முன்னாள் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா கூறியது கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி உயர் மட்ட விசாரணை நடத்தப்பட்டபோதிலும், அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. இந்தநிலையில் முதல்வர் சித்தராமையா உத்தரவின் பேரில் தான் அனைத்து வசதிகளும் சசிகலாவுக்கு செய...
ரஜினிகாந்த் திடீரென இமயமலை பயணம் – ரிஷிகேஷ் பாபாஜி ஆசிரமம் செல்கிறார்

ரஜினிகாந்த் திடீரென இமயமலை பயணம் – ரிஷிகேஷ் பாபாஜி ஆசிரமம் செல்கிறார்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கு தீவிர உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. மாவட்டம் வாரியாக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். வேலப்பன்சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைத்த ரஜினி, எம்.ஜி.ஆரை போல ஏழை மக்களுக்கான ஆட்சியை என்னால் தர முடியும் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். ரஜினி நடித்துள்ள காலா படம் விரைவில் வெளியாக உள்ளது. அதன்பிறகு ‌ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2.0 படம் வெளியாகிறது. அந்த படத்துக்கான இறுதிக்கட்ட பணிகள், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படம் என்று சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். அரசியலுக்கான அடித்தளத்தை உறுதியாக அமைத்து வரும் ரஜினி திடீரென்று ஆன்மீக பயணமாக நாளை (10-ந் தேதி) இமயமலை புறப்படு...
கர்ப்பிணி பெண் உஷாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி- கமல்ஹாசன் அறிவிப்பு

கர்ப்பிணி பெண் உஷாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி- கமல்ஹாசன் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
சென்னை ராயப்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் சார்பில்  இன்று மகளிர் தினத்தையொட்டி ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, தாய் சொல்லை தட்டாதவன் நான், அதனால்தான் இந்த மேடையில் நிற்கிறேன். மய்யத்தில் இருந்து பார்த்தால்தான் நீதியும், நியாயமும் புரியும். பெண்களை மதிக்கச் சொல்லிக் கொடுத்தவர் என் தாய். வீரத்தின் உச்சக்கட்டம் அகிம்சை, அதைச் சொல்லாமல் சொன்னவர் என் தாய். எனக்கு புடவை கட்டத்தெரியும், நான் அதை மீசையை முறுக்கிச் சொல்வேன். உனக்கு பெண்களைப் பற்றி என்ன தெரியும் எனக் கேட்கிறார்கள். எனக்கு புரிந்து கொள்ளத் தெரியும். திருச்சியில் உஷா மரணத்தில் அநீதி நிகழ்ந்துள்ளது, நீதியைக் காக்க வேண்டியவர்கள் அநீதியை செய்துள்ளனர். சிறப்பாக செயல்படும் காவலர...