புதன்கிழமை, ஏப்ரல் 24
Shadow

politics

கார்த்தி சிதம்பரத்திற்கு சுப்ரீம் கோர்ட் வழங்கிய லுக்அவுட் நோட்டீஸ் ரத்தாகுமா வரும் 16ல் தீர்ப்பு..!

கார்த்தி சிதம்பரத்திற்கு சுப்ரீம் கோர்ட் வழங்கிய லுக்அவுட் நோட்டீஸ் ரத்தாகுமா வரும் 16ல் தீர்ப்பு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சுப்ரீம் கோர்ட் லுக்அவுட் நோட்டீஸ் வழங்கி உள்ளது. இந்நிலையில் கடந்த கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான வழக்குகள் சென்னை ஐகோர்ட்டிற்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து தன்மீதான லுக்அவுட் நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் எனவும், தான் வெளிநாடு செல்ல அனுமதி அளிக்க வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கில் தொடர்பாக இன்று நேரில் ஆஜராக கார்த்தி சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கில் பிப்ரவரி 16 ல் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக சென்னை ஐகோர்ட் அறிவித்துள்ளது.  ...
தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார்

தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா படதிறப்பு விழா நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது.  இந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் படம் இன்று திறக்கப்பட்டது.  இதற்காக நடந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் சபாநாயகர் தனபால் திறந்து வைத்துள்ளார். இந்த உருவப்படம் 7 அடி உயரம் மற்றும் 5 அடி அகலம் கொண்டது.  பச்சை நிற சேலையுடன் அவர் நிற்பது போன்று உருவப்படம் வரையப்பட்டு உள்ளது.  சட்டப்பேரவையில் 11வது தலைவராக ஜெயலலிதாவின் படம் வைக்கப்பட்டு உள்ளது. திருவள்ளுவர், காந்தி, ராஜாஜி, காமராஜர், பெரியார், அண்ணா, காயிதே மில்லத், முத்துராமலிங்க தேவர், எம்.ஜி.ஆர். மற்றும் அம்பேத்கர் ஆகியோரது உருவப்படங்கள் அவ...
அமெரிக்காவில் தமிழ் பாரம்பரிய உடையான வேட்டியில் அசத்திய கமல்ஹாசன்

அமெரிக்காவில் தமிழ் பாரம்பரிய உடையான வேட்டியில் அசத்திய கமல்ஹாசன்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  அமெரிக்கா சென்றுள்ள கமல்ஹாசன் அங்கு ஹார்வர்டு பிசினஸ் பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி கட்டி வந்து அசத்தினார். அமெரிக்க பயணம் என்றாலே ‘கோட்-சூட்’ அணிந்து செல்பவர்கள் மத்தியில், வேட்டியில் கமல்ஹாசனை பார்த்த அமெரிக்க வாழ் தமிழர்களும், அமெரிக்கர்களும் வியந்து பாராட்டினார்கள். வேட்டி கட்டி மிடுக்காக கமல்ஹாசன் நடந்து வந்த போது பார்வையாளர்கள் கரகோ‌ஷம் எழுப்பி வரவேற்றனர். பின்னர் நிருபர்கள் அவரை பேட்டி கண்டனர். ரஜினியுடன் கூட்டணி சேருவீர்களா? என்று கேட்டதற்கு கமல்ஹாசன் பதில் அளிக்கையில் அரசியலில் ரஜினியுடன் கூட்டணி சேரும் வாய்ப்பு இல்லை என்று சூசகமாக தெரிவித்தார். நானும் ரஜினிகாந்தும் சிறந்த நண்பர்கள். ஆனால் நட்பு வேறு. அரசியல் என்பது வேறு. எங்களுடைய நோக்கங்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என...
ஊழல் புகாரால் மண்ணைக்  கவ்வப்போகும் விஷால் பாண்டவர் அணி

ஊழல் புகாரால் மண்ணைக் கவ்வப்போகும் விஷால் பாண்டவர் அணி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஷாலுக்கு ரித்திஷ் பகிரங்க சவால்..! நடிகர் வாராகி நடித்து இயக்கி தயாரித்திருக்கிற படம் சிவா மனசுல புஷ்பா. இந்த படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் நடிகர்கள் எஸ்.வி.சேகர், ஜே.கே.ரித்திஷ், தருண், இயக்குனர் எஸ்.ஏ.சி. உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவின் ஹய்லைட் ஆக நடிகர் சங்கத்தின் மலேசியா நிகழ்ச்சி நடத்தி தருவதற்கு நடிகர் சங்க செயலாளர் விஷாலுக்கு லஞ்சமாக பலகோடிகள் பேரம்பேசும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விழாவில் ஜே.கே.ரித்திஷ் பேசியதாவது: நான் என் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த வீடியோவை எனக்கு தெரியாமலேயே எடுத்திருக்கிறார். அந்த வீடியோவைதான் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள். விஷாலை இதுவரைக்கும் என் நண்பன் என்றுதான் நான் சொல்லியிருக்கிறேன். விஷால் ஊழல் பண்ணார்னு வாராகி அண்ணே கேஸ்போட்டப்ப கூட நான் சொல்லுவேன் அண்ணே யாரையும் அப்படி சொல்ல...
ஜெ.தீபா வீட்டிற்கு சோதனை நடத்த வந்த போலி வருமான வரி அதிகாரி தப்பி ஓட்டம்

ஜெ.தீபா வீட்டிற்கு சோதனை நடத்த வந்த போலி வருமான வரி அதிகாரி தப்பி ஓட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. ஜெயலிலிதா மறைவுக்குப் பிறகு கட்சி பிளவுபட்டபோது, அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த நிர்வாகிகள் ஆதரவுடன் ‘எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை’ என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வரும் தீபா, தன்னை ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்று கூறி வருகிறார். இந்நிலையில் சென்னை தி.நகரில் உள்ள ஜெ.தீபாவின் வீட்டிற்கு இன்று ஒரு நபர் வந்துள்ளார். குடியிருப்பு காவலாளியிடம் தன்னை வருமான வரித்துறை அதிகாரி மித்தேஷ் குமார் என்றும், சோதனை நடத்த வந்திருப்பதாகவும் கூறியுள்ளார். மற்ற அதிகாரிகள் வந்ததும் சோதனையை தொடங்க உள்ளதாக கூறி அடையாள அட்டையை காட்டியதால், அவரை தீபாவின் கணவர் உள்ளே அனுமதித்து உட்கார வைத்துள்ளார். இதற்கிடையே, வருமான வரித்துறை அதிகாரி சோதனை நடத்த வந்திருப்பதாக ஜெ. தீபாவின் வழக்கறிஞருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வந்து, அந்த நபரிடம் விசாரித்தபோது ...
நீதிபதி லோயா மரணம்: ராகுல் தலைமையில் எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

நீதிபதி லோயா மரணம்: ராகுல் தலைமையில் எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஷராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்த நீதிபதி லோயா மரணமடைந்ததில், சிறப்பு விசாரணை வேண்டும் என ராகுல் காந்தி தலைமையில் எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா குஜராத் மாநில உள்துறை மந்திரியாக இருந்தபோது போலி என்கவுண்டர் புகார் எழுந்தது. இவ்வழக்கை மும்பை சி.பி.ஐ நீதிபதி லோயா விசாரித்து வந்த நிலையில், அவர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். இதன் பின்னர், அவ்வழக்கை வேறு நீதிபதி விசாரித்து அமித்ஷாவை வழக்கில் இருந்து விடுதலை செய்தார். தற்போது, நீதிபதி லோயா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பில் இருந்து புகார் எழுந்தது. அவர் மரணத்தில் உள்ள சந்தேகத்தை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு, தற்போது அந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கபில் சிபில், ...
போலிகளை ஒழிக்க ஓட்டுனர் உரிமத்துடன் ஆதாரை இணைக்க திட்டம்

போலிகளை ஒழிக்க ஓட்டுனர் உரிமத்துடன் ஆதாரை இணைக்க திட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சாலை பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளை வகுப்பதற்காக ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. இந்த கமிட்டியானது போலி ஓட்டுனர் உரிமங்களை ஒழிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை செயலாளருடன் கடந்த நவம்பர் மாதம் 28-ந்தேதி விவாதித்தது. அப்போது போலி ஓட்டுனர் உரிமங்களை ஒழிப்பதற்காக ‘சாரதி-4’ என்ற திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக இணை செயலாளர் தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் அனைத்து ஓட்டுனர் உரிமங்களுடனும் ஆதாரை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைத்து ‘மென்பொருள்’ (சாப்ட்வேர்) ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இந்த நடவடிக்கையால் நாட்டின் எந்த பகுதியில் இருந்தும், யாராலும் போலி ஓட்டுனர் உரிமம் தயாரிக்க முடியாது என்றும்...
சாலையோரம் அமைக்கப்படும் பெரும்பாலன கோவில்கள் சுயநலத்திற்காகவே அமைக்கப்படுகிறது – சென்னை உயர் நீதிமன்றம்

சாலையோரம் அமைக்கப்படும் பெரும்பாலன கோவில்கள் சுயநலத்திற்காகவே அமைக்கப்படுகிறது – சென்னை உயர் நீதிமன்றம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் தனக்கு இடம் வேண்டும் என எந்த கடவுளும் கேட்பதில்லை எனத் தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற அமர்வு, ரிசர்வ் வங்கிக்கு எதிரில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவிலை இடிக்க உத்தரவிட்டது. சென்னை தலைமை செயலகம் மற்றும் ரிசர்வ் வங்கிக்கு எதிரே பொதுப்பணித் துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோட்டை பாளையத்தம்மன் கோவிலை காலி செய்து இடத்தை ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலரும், புரசைவாக்கம் வட்டாட்சியரும் நோட்டீஸ் அனுப்பினர். இதை எதிர்த்து கோவில் பூசாரி குருசாமி என்கிற அப்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 500 பக்தர்கள் சேர்ந்து கட்டிய அந்த கோவிலை 50 வருடமாக பராமரித்து வரும் கோவிலை அகற்றும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.வேணுகோபால், எஸ். வைத்திய...
ஹார்வர்ட் பல்கலை.யில் தமிழ் இருக்கை அமைக்க தி.மு.க ரூ.1 கோடி நிதியுதவி

ஹார்வர்ட் பல்கலை.யில் தமிழ் இருக்கை அமைக்க தி.மு.க ரூ.1 கோடி நிதியுதவி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பழமையான மொழிகளுக்கு இருக்கை உள்ளது. இதில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக நிதி திரட்டப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 42 கோடி ரூபாயில் 21 கோடி ரூபாயை பல்வேறு தமிழ் அமைப்புகள் வழங்கின. தமிழக அரசு மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் இதற்காக நிதியுதவி வழங்கியிருந்தனர். இந்நிலையில், திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தமிழ் இருக்கைக்காக 1 கோடி ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செயல் தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த நிதியுதவியானது தமிழ் மொழியின் மேம்பாட்டுக்காகவும், முதன்மைக்காகவும் போராடும் திமுக தலைவர் கருணாநிதி சார்பில் வழங்கப்படும். தமிழுக்கு கிடைக்க போகும் ஹார்வர்டு இருக்கை என்பது ஒவ்வொரு தமிழருக்கும் கிடைக்கும் பெருமிதம் ஆகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “உயர் நீதிமன்றம், மத்திய அரசின் அலுவலகங்களில் நிச்சயம...
‘snake’ removed from the Rajini’s logo..!

‘snake’ removed from the Rajini’s logo..!

CINI NEWS, HOME SLIDER, politics, செய்திகள், நடிகர்கள்
This comes weeks after a lotus was removed from under the logo. Observers say both changes are linked to Rajini’s desire to not alienate non-Hindus. It’s been just over a month since Rajinikanth announced his political entry, and already, his symbol has undergone two very conspicuous changes. The Rajini Makkal Mandram logo – which has a hand in the centre in what is widely recognised as the ‘Baba’ symbol – used to have a snake around it. In its most recent avatar, it has been take out. The note, unlike previous communication from the body, did not feature the snake which previously encircled the Baba hand symbol. This change comes weeks after another symbol in the logo – a lotus – was removed. Observers say that both changes are linked to the actor-turned-politician’s desir...