வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

NEWS

குளத்தை காணோம் என ஒட்டப்பட்ட போஸ்டர் பெரும் பரபரப்பு

குளத்தை காணோம் என ஒட்டப்பட்ட போஸ்டர் பெரும் பரபரப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    நடிகர் வடிவேலு ஒரு படத்தில் கிணத்தை காணோம் காமெடி மிக பிரபலம். இப்போது அதே பாணியில் குளத்தை காணோம் என ஒட்டப்பட்ட போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் நகராட்சி பகுதியில் 74 குளங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அவற்றில் ஏராளமான குளங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி தற்போதும் ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது. பெரும்பாலான குளங்களின் நீர் வழி் பாதைகள் ஆக்கிரமிப்பு காரணமாக அடைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் திருவாரூர் நகராட்சி 25-வது வார்டு பகுதியில் பயன்பாட்டில் இருந்த செட்டிகுளத்தை காணவில்லை என கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காணாமல் போன குளத்தை மீட்டெடுக்க அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி மீண்டும் திருவாரூர் நகர் பகுதிகளில் ‘குளத்தை காணவில்லை’ என போஸ்டர் அடித்து அந்த பகுதி ...
தென்னிந்திய திரையுலகை முற்றிலுமாக  புறக்கணிக்கும் மத்திய அரசு!

தென்னிந்திய திரையுலகை முற்றிலுமாக புறக்கணிக்கும் மத்திய அரசு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  திரையரங்குகள் மீண்டும் திறப்பது குறித்து மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை அமைப்பு திரையரங்கு உரிமையாளர்கள், தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினரோடு வரும் 8ம் தேதி கூட்டம் நடத்த அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஆனால், இந்த கூட்டத்தில் தென்னிந்தியாவில் உள்ள எந்த சங்கத்திற்கோ, திரையரங்கு உரிமையாளர்களுக்கோ அழைப்பு இல்லை. ஒட்டுமொத்தமாக தென்னிந்தியாவை புறக்கணித்து இந்த கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது மத்திய அரசு. தென்னிந்திய வர்த்தக சபையான பிலில் சேம்பர் என்ன செய்கிறது? ஆண்டுக்கு சில படங்களை மட்டும் எடுக்கும் குஜராத்தில் இருந்து இரு அமைப்புகளுக்கு அழைப்பு. ஆண்டு முழுதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் சுமார் 800க்கும் அதிகமாக படமெடுக்கும் தென்னிந்திய திரையுலகம் புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது வேதனையான உண்மை. திரைத்துறை இப்போதாவது விழித்துக் கொள்ளுமா! - கோடங்க...
திருமண மண்டபமாக மாறும் ஏவிஎம் ஜி தியேட்டர்!

திருமண மண்டபமாக மாறும் ஏவிஎம் ஜி தியேட்டர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
    சினிமா தொழில் நாளுக்கு நாள் நசிந்து கொண்டு வருவதை தொடர்ந்து, சென்னையில் அமைந்திருந்த ஸ்டூடியோக்களும், தியேட்டர்களும் காணாமல் போய்விட்டன. அவை இருந்த இடம் தெரியாத அளவுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளாகவும், திருமண மண்டபங்களாகவும் மாறிவிட்டன. இதற்கு ஏவி.எம். ஸ்டூடியோவும் விதிவிலக்கு அல்ல என்றாகிவிட்டது. ஏவி.எம். ஸ்டூடியோவின் ஒரு பகுதி அடுக்குமாடி குடியிருப்பாக மாறிவிட்டது. இன்னொரு பகுதி ஆஸ்பத்திரியாக மாறியிருக்கிறது. ஏவி.எம். ராஜேஸ்வரி தியேட்டரும் வேறு ஒரு வடிவத்துக்காக இடிக்கப்படுகிறது. ஏவி.எம். ஸ்டூடியோவின் அழகான அடையாளமாக இருந்த ‘கார்டன் ஸ்டூடியோ’ விரைவில் திருமண மண்டபமாக மாறுகிறது. ‘கார்டன் ஸ்டூடியோ’வில் பரந்து விரிந்த புல்வெளியும், அதற்கு நடுவில் ஒரு வட்ட வடிவமான மண்டபமும் உள்ளன. அதையொட்டி ஒரு ‘டப்பிங்’ தியேட்டரும், பங்களாவும் அமைந்துள்ளன .ஆயிரக்கணக்கான பட...
கார்ட்டூன் சர்ச்சையில் தேமுதிக சுதீஷ்!

கார்ட்டூன் சர்ச்சையில் தேமுதிக சுதீஷ்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    *பதிலடி கார்ட்டூம் - சுதீஷ் விளக்கம்* *"கடந்த, 2016ம் ஆண்டு தினமலர் தேர்தல் களத்தில் வெளியிட்ட கார்ட்டூனை தான் தற்போது முகநூலில் பதிவிட்டேன்.*   *அன்று அவர்கள் போட்ட கார்ட்டூனுக்கும், இன்று அவர்கள் வெளியிட்டுள்ள கார்ட்டூனுக்கும் (விஜயகாந்தை ஏலம் விடுவதை போல சித்தரித்து) உள்ள வேறுபாட்டை தமிழக மக்கள் அறியவே முகநூலில் பதிவிட்டேன்.* *அது தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதால் உடனடியாக நீக்கிவிட்டேன்" எல்.கே.சுதீஷ்  ...
பி.எம்.கேர்ஸ் நன்கொடை லிஸ்ட் வெளியிட ஏன் தயக்கம் – பிரதமர் மோடிக்கு ப.சி கேள்வி

பி.எம்.கேர்ஸ் நன்கொடை லிஸ்ட் வெளியிட ஏன் தயக்கம் – பிரதமர் மோடிக்கு ப.சி கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு மார்ச் கடைசி வாரத்தில் அறிவித்து, நன்கொடைகள் வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து பல தனியார் நிறுவனங்கள், அரசு அமைப்புகள், பிரபலங்கள் உள்ளிட்ட தனி நபர்கள் நன்கொடைகளை வாரி வழங்கினர். இதற்கு மத்தியில், ‘பி.எம்.கேர்ஸ்’ நிதியில் திரட்டப்பட்ட நன்கொடைகளை தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு (என்.டி.ஆர்.எப்.) மாற்ற உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு விசாரித்து, தள்ளுபடி செய்து கடந்த 18-ந் தேதி தீர்ப்பு அளித்தது. இரண்டும் வெவ்வேறு நிதி, தனித்தனி பொருள், நோக்கத்துடன் கூடியவை என்பதால், தேசிய பேரிடர் நிவாரண நிதியுடன் பி.எம்.கேர்ஸ் நிதியை மாற்ற முடியாது என தீர்ப்பில் கூறப்பட்டது. தற்போது பி.எம்.கேர்ஸ் நிதிக்கு வந்த நன்கொடைகள் பற்றிய கணக்கு அறிக்கைய...
பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கை முடக்கிய ஹேக்கர்கள்!

பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கை முடக்கிய ஹேக்கர்கள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பிரதமர் நரேந்திர மோடியின் narendramodi_in என்ற தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கினர் * பிட்காயின் மூலம் பணம் செலுத்துபவர்கள் மோடியின் கணக்கை முடக்கியதை ட்விட்டர் உறுதிப்படுத்தியுள்ளது முடக்கப்பட்ட கணக்கை மீட்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன.
பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை!

பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை! கடந்த ஜூன் 15ந்தேதி லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின் இரு நாடுகளிடையே பதற்றம் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து தேச பாதுகாப்பு நலன்களை கவனத்தில் கொண்டு மத்திய அரசு டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 116 சீன செயலிகளுக்கு தடை விதித்தது. இந்நிலையில் பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடைவிதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு எதிரானது என்பதால் இந்த தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது....
கைலாசாவில் இயற்கை விவசாயம் செய்ய நிலம் வேண்டும் – நித்திக்கு கடிதம்

கைலாசாவில் இயற்கை விவசாயம் செய்ய நிலம் வேண்டும் – நித்திக்கு கடிதம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கைலாசா என்கிற நாட்டை உருவாக்கி உள்ளதாகக் கூறி உள்ள நித்யானந்தா, விநாயகர் சதுர்த்தி அன்று தனது நாட்டிற்கான நாணயங்களை வெளியிட்டு அதிர்ச்சியூட்டினார். இதைத்தொடர்ந்து மதுரை ஓட்டல் அதிபர் எங்களது உணவகத்தின் கிளையை கைலாசாவில் தொடங்குவதற்கு அனுமதி வேண்டி நித்யானந்தாவிற்கு கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையை ஏற்ற நித்யானந்தா தனது நாடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் போது நிச்சயம் அனுமதி தரப்படும் என்றும் மதுரை, திருவண்ணாமலை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு முன்னுரிமை தரப்படும் என்றும் உறுதி அளித்தார். இந்த விவகாரம் முடிவுக்கு வருவதற்குள் மதுரையை சேர்ந்த இயற்கை விவசாயி பாண்டித்துரை என்பவர் நித்யானந்தாவுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், பரம்பரைப் பரம்பரையாக விவசாயம் செய்துவரும் குடும்பத்தில், தான் பிறந்துள்ளதாகவும், பொறியியல் படித்துவிட்டு தற்போது இயற்கை விவசாயம் செய...